Sunday 27 January 2013

சாகறதுக்குள்ள எச்சகல படிக்க முடியுமா (அல்லது) எச்சகல படிச்சுட்டு செத்துபோயிட முடியுமா?

அன்புள்ள சாரு நிவேதிதா,
இன்னும் சில நாட்களே நான் உயிரோடு இருப்பேன்.  டிசம்பர் 6 வரை நிச்சயம் இருக்க மாட்டேன்.  அதற்கு முன் எக்ஸைல் நாவலைப் படிக்க ஏதாவது வழி இருக்கிறதா, சொல்லுங்கள்…
மோகன் ராஜ்
அன்புள்ள மோகன் ராஜ்,
எனக்கு இதுவரை என் வாழ்நாளில் வந்த கடிதங்களிலேயே என்னை மிகவும் பாதித்த கடிதம் உங்களுடையதுதான்.
ஏன் நீங்கள் இப்படி எழுதி இருக்கிறீர்கள்?  தங்கள் வயது என்ன?  ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று நான் வணங்கும் அய்யப்பன், ஷீர்டி பாபா, சோட்டாணிக்கரை பகவதி அம்மன், என் குருநாதர் மஹந்த்தா ஆகியோரை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எப்படி இருந்தாலும் பிரதி கைக்குக் கிடைத்ததும் உங்களிடம் சேர்ப்பிக்கிறேன்.  தங்களுக்கு நான் புத்தகத்தை எப்படி அனுப்பட்டும்?  முகவரி தந்தால் நேரிலேயே வந்து தருகிறேன்.
எக்ஸைல் நாவலின் 376 பக்கத்தில் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம் வருகிறது.  அது :
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் (2:12)
இதன் பொருள்:
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லதிருந்திலேன்.  நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே.  இனி நாம் என்றைக்கும் இல்லாமல் போகவும் மாட்டோம்.  அதாவது, ஆன்மாவுக்கு அழிவில்லை.
(கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம்)

1 comment:

  1. hearbroken to see this article. May god bless to all

    ReplyDelete