Sunday 20 January 2013

சாரு நிவாரண நிதி - 1


நம்முடைய இணைய தளத்தை கட்டணம் செலுத்திப் படிக்கும் ஒன்றாக ஆக்கலாமா என்று நண்பர்களுடன் ஆலோசித்தேன். சீனிவாசனைத் தவிர மற்ற அனைவரும் வேண்டாம் என்றனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம்: ” இப்போது இந்த இணைய தளத்தின் மொத்த வாசகர் எண்ணிக்கை 15,000. இதைக் கட்டணத் தளமாக மாற்றினால் 100 பேர்தான் வருவார்கள். இப்படியே இலவச இணைய தளமாக இருந்தால் இந்த 15,000 என்ற வாசகர் எண்ணிக்கை ஒரு லட்சமாகவும் கூடும். சுஜாதாவுக்கு அடுத்த படியாக உங்களுக்குத்தான் வாசகர் தளம் அதிகம். எனவே அதை மறுதலித்து விட்டு வெறும் 100 பேருக்கான தளமாக மாற்றாதீர்கள். ”

இதற்கு சீனிவாசன் வைத்த எதிர்வாதம்: “துக்ளக் இதழை ஆன்லைனில் படிக்க ஒரு வாரத்திற்கான கட்டணம் 20 டாலர். ஆக, மாதத்திற்கு 80 டாலர். எனவே சாரு ஆன்லைன் தளத்துக்கும் கட்டணமாக 100 டாலர் வைக்கலாம். நூறு வாசகர்கள் நூறு டாலர் கட்டினால் உங்கள் நிலை சீரடையும். ”

சீனிவாசனுக்கு மறுப்பு: “தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக அரசியல் விவகாரங்களில் சோ என்ன எழுதுகிறார் என்று ஒவ்வொரு வாரமும் தெரிந்து கொள்ளா விட்டால் தூக்கமே வராது என்று சொல்வதற்கு ஒரு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாராவாரம் 20 டாலர் கட்டுவார்கள். அதில் ஆச்சரியமில்லை. ஆனால், கலாச்சாரத் தளத்தில் மிகவும் சீரிய மாற்றங்களைக் கொண்டு வர முனையும் சாருவும் சோவும் ஒன்றா? சிந்தியுங்கள்... ”

சீனிவாசன்: “சாரு, இப்படி சொல்லிச் சொல்லியே உங்களைத் தெருவில் நிற்க வைத்து விடுவார்கள். உங்களுடைய எழுத்தைப் படிக்காவிட்டால் தூக்கமின்றிப் புரள நூறு பேர் இருக்கிறோம். நூறு பேர், நூறு டாலர்...யோசித்துப் பாருங்கள். ”

யோசித்தேன். யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காரியம் நடந்தது. இருதய சோதனைக்காக இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டு ‘நலம் ’ என்ற நற்சான்றிதழுடன் விடுவிக்கப் பட்டேன். செலவு: 15,000 ரூபாய். ஆனாலும் தினசரி ஒமேகா 3 என்ற மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டேன். ஒரு மாத்திரை விலை 50 ரூ. நான் தினசரி இரண்டு சாப்பிட வேண்டும். இந்தச் சத்து வஞ்சிரம் மீனில் உண்டு. ஆனால் அந்த மீன் இந்த மாத்திரையை விடப் பல மடங்கு விலை அதிகம்.

இப்படி நான் ஒரு ‘காஸ்ட்லி ’ யான எழுத்தாளராக இருப்பது துரதிர்ஷடம்தான். அபிநவ் பிந்த்ராவின் ஞாபகம் வருகிறது.

இப்போது உள்ள சாய்ஸ் இரண்டுதான். என்னுடைய பணத் தேவை கருதி நூறு பேருக்கான இணைய தளமாக மாற்றலாம். நிச்சயம் நூறு பேர் நூறு டாலர் கட்டிப் படிப்பார்கள். அவர்களின் பெயர் கூட எனக்குத் தெரியும். அல்லது, 15,000 வாசகர்களை ஒரு லட்சமாகப் பெருக்கலாம்.

ஆனால், என்னுடைய எழுத்து அபிநவ் பிந்த்ராவின் தங்கம் போன்றது. கையில் லேப்டாப் இருந்ததால் பெங்களூர் சென்ற போதும் அங்கிருந்து டைப் செய்து பதிவேற்றம் செய்ய முடிந்தது. கல்லூரி மாணவிகளுடன் ‘ மோக்கா ’ காஃபி ஷாப்புக்குச் சென்றால் எனக்கு ஒரு 500 ரூ. செலவாகும். ஆனால் குட்டிக் கதைகள் என்ற நாவலை எழுதலாம். இல்லாவிட்டால் உத்தமத் தமிழ் எழுத்தாளன் மாதிரி பகவத் கீதைக்கு விளக்கவுரைதான் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

எனவே எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நூறு பேர் கூட வேண்டாம். ஒரு முப்பது பேர் போதும். அந்த முப்பது பேரும் மாதம் முப்பது டாலரை எனக்கு அனுப்பி வைத்தால் உங்கள் மூலமாக 15,000 பேர் இந்த இணைய தளத்தை இலவசமாகப் படிக்கலாம். எனக்காக வேண்டாம்; இந்தப் பதினைந்தாயிரம் பேருக்காக முப்பது பேர் முன்வருவீர்களா?

என்னுடைய ICICI வங்கிக் கணக்கு எண்: XXXXXXXX , T, Nagar, Chennai. Account holder’s name: K. ARIVAZHAGAN.
7.9.2008.
9.15 p.m.

3 comments:

  1. காதில பூ வைத்திருக்கிறவங்க ஒருத்தரையும் கொஞ்ச நாளாக் காணோமே?

    ReplyDelete
  2. அண்ணே 10000 அனுப்சேனே வந்துச்சா? செக் பண்ணுங்க

    ReplyDelete
  3. Please give me six crore fifty lakes rupees to me. I will return it with interest in two years, sir.

    ReplyDelete