Sunday 23 June 2013

பரவச நிலையில் சாரு

இப்போதெல்லாம் சாருஆன்லைனில்  என் எழுத்து அதிகம் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்று நண்பர்கள் பலர் சொல்லக் கேட்கிறேன்.  இது சம்பந்தமான விளக்கமே இது:

நான்  நிறைய எழுதுகிறேன்.  ஆனால் பதிவேற்றம் செய்வதில்லை.  என் தோழி ஒருத்தி  சொன்னாள்: You are addicted to writing, man. அந்தக் கடைசி வார்த்தையில் வரும் ‘மே’வை மே மாதத்தை எப்படி உச்சரிக்கிறோமோ அதைப் போல் உச்சரிப்பாள்.  அமெரிக்காவில் man-ஐ அப்படித்தான் உச்சரிப்பார்களோ?  எனக்கு ஹாலிவுட் படங்கள் அவ்வளவு பழக்கம் இல்லாததால் அமெரிக்க உச்சரிப்பு தெரியாது.

ஏன் பதிவேற்றம் செய்வதில்லை?  எதிரிகள் அதிகம் என்பதால்தான்.  ஸீரோ டிகிரியை நான் ஒரு உன்மத்த  நிலையிலிருந்தே எழுதினேன்.  அது போன்ற ஒரு நாவலை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் என் எதிரிகள் என்னைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

மீண்டும்  சொல்கிறேன்; எனக்கு யாரும் எந்தத் தீங்கும் செய்ய  முடியாது.  ஏனென்றால், எனக்கு வழங்கப்படும் தீமையை நான் தீமை என்று நினைப்பதில்லை;  அனுபவம் என்றே  கொள்கிறேன். மரணத்தைப்  பற்றி மட்டுமே சிறிது சஞ்சலம்.  அதுவும் கூட, என் எழுத்து நின்று விடுமே என்ற காரணத்தினால்தான்.  மற்றபடி மரணத்தைக் கண்டும் அச்சமில்லை.

ஸீரோ  டிகிரியை எழுதிய போது இருந்த அதே  உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.  நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன்.  அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று சொல்ல முடியாது.  ஏதோ ஒரு பேய் அல்லது மோகினி என் உடலில் புகுந்து கொண்டு எழுதுவது போல் தோன்றுகிறது.  சாமியாடி சாமி ஆடுவானே அது போல என்று வைத்துக் கொள்ளலாம்.  அதுவரை பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை.  மாலை நான்கரை மணிக்கு எழுந்து சிட்டி செண்டர் சென்று அங்குள்ள அரேபியன் ஹட்டில் சார்கோல் சிக்கன் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து ‘நேராகச் செல்லுங்கள்’ என்றேன்.

யெல்லே பேஜஸ் வரும் போது ஆட்டோக்காரர் “எங்கே போக வேண்டும்?” என்று மீண்டும் கேட்ட போது அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லாததால் “மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் எங்கே நிறுத்த முடிகிறதோ அங்கே நிறுத்துங்கள்” என்றேன்.
இறங்கியவுடன்  எங்கே செல்வது  என்று தெரியவில்லை.  கடற்கரைக்குச்  செல்லலாமா என்ற யோசனையை நிராகரித்தேன்.  அப்போது இருந்த பரவச நிலையில் கடற்கரை வேண்டாம் என்று தோன்றியது.  காலையிலிருந்து கடவுளோடு உரையாடியதால் ஏற்பட்ட பரவசம் அது.

வேறு  எங்கே செல்வது  என்று தெரியவில்லை.  பரவசம் உச்சநிலையை அடைந்து விட்டதால்  இனிமேல் எழுத முடியாது.  அதனால் வீட்டுக்குச் சென்று பயனில்லை.   மனோஜ் (ஹமீதின்  மகன்) இன்று பிறந்த நாள் என்று சொல்லியிருந்தான்.   அவன் வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்து ஹமீதை அழைத்தேன். போனை எடுத்து “இதோ ஒரு நிமிடத்தில் கூப்பிடுகிறேன்” என்று வழக்கம்போல் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்.  சரி, பரவாயில்லை என்று அங்கிருந்து அபிராமபுரத்திலிருக்கும் மனோஜ் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்.  அப்போது நான் இருந்த பரவச நிலையில் ஒரு ஏழெட்டு கிலோமீட்டராவது நடந்தால்தான் மனம் ஒரு கட்டுக்குள் வரும் என்று தோன்றியது.

ஆனாலும் ஒரு சந்தேகம், அவ்வளவு தூரம்  நடந்து சென்று அங்கே மனோஜ்  இல்லையானால்  என்ன செய்வது?  மனோஜுக்கு மூன்று வயதுதான் ஆகிறது; அதனால் இன்னும் செல்போன் வைத்துக் கொள்ளவில்லை.  ஒரே ஒருநாள்தான்  அவனிடம் செல்போனில் பேசியிருக்கிறேன்.  அதுவும் அவனுடைய அம்மா போன் மூலம்.  ”டேய் மனோஜ், எப்படிடா இருக்கே?” என்று நான் பேச்சை ஆரம்பித்ததுமே “போனை ஹமீதிடம் கொடுங்கள்; கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி அப்போதே அவன் என் மனதை உடைத்து விட்டான். (அப்பனைப் போலவே பிள்ளை!) ஆனால் எப்போதுமே நான் என் நண்பர்களிடமும், தோழிகளிடமும், காதலியிடமும் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதையும் பார்ப்பதில்லை. அதற்குள் 15 நிமிடம் ஆகியிருந்தது.  ஹமீதிடமிருந்து போன் இல்லை.   அதனால் மீண்டும் நானே போன் செய்தேன். ”அட சாருவா, நான் கூப்பிட்றேன்னு சொன்னேன்ல, ஹ்ம்ம்… சொல்லுங்க?” என்றார்.

“உங்கள் வீட்டுக்குத்தான் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்…”

”அடடா, நான் இங்கே வுட்லண்ட்ஸில் அல்லவா இருக்கிறேன்? இன்னிக்கு சுஜாதா நினைவு நாள் விழா இருக்கே?”

அவர்  சொன்னதும்தான்  ஞாபகம் வந்தது.  மீண்டும் திரும்பி வுட்லண்ட்ஸ்  நோக்கி நடக்க  ஆரம்பித்தேன். என்னைப் பார்த்த உடனேயே ஹமீது “என்ன, முகமெல்லாம் ஒருமாதிரி ஜொலிக்கிறது? ஏதோ பரவசத்தில் இருப்பது போல் இருக்கிறதே? இப்படி உங்களை நான் பார்த்ததே இல்லையே?” என்று பல கேள்விகளைப் போட்டார். ஓ, பரவசம் முகத்திலேயே தெரிகிறதா என்று நினைத்துக் கொண்டேன்.

இயக்குனர் ஷங்கரும், ராஜீவ் மேனனும் பேசியதை ரசித்தேன். சுஜாதாவுக்கு பொய் சொல்லவே தெரியாது; பாசாங்கு இல்லாத இயல்பான மனிதர் என்றார் ஷங்கர்.  சுஜாதா எப்போதுமே ஒரு 21 வயது இளைஞனின் மனதை விட்டுத் தாண்டியதில்லை என்றார் ராஜீவ். இந்த இரண்டு விஷயங்களையுமே நான் வாழ்க்கையில் பின்பற்றி வருபவன்.  ஆனாலும் அப்போது இருந்த பரவச நிலையில் என்னால் அந்தக் கூட்டத்தோடு ஒன்ற முடியவில்லை.  எல்லாமே அந்நியமாக இருந்தது.  நண்பர்கள் நர்சிம், லக்கிலுக், கேபிள் ஷங்கர் போன்ற பலரைக் கண்டேன்.  ஆனால் எனக்கு என்னவோ நிலவில் நடப்பதைப் போலிருந்தது.  (ஞாபகம், நான் மதுவோ வேறு எந்த போதை வஸ்துக்களையோ உட்கொண்டிருக்கவ்ல்லை). அவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பதற்கும் நான் பதிலுக்குச் சிரிப்பதற்கும் இடையில் மூன்று நிமிடம் இருந்தது.  அவர்களின் சிரிப்பு என் உணர்வுகளில் பதிய அவ்வளவு காலம் ஆனது.  அப்போது பார்த்து ஷாஜி வந்தார். புன்னகைத்தார்.  ஆனால் நான் மூன்று நிமிடம் கழித்துப் புன்னகை புரிந்த போது அவர் வேறொரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததால் என் பதில் புன்னகையை அவரால் கவனிக்க முடியாமல் போயிற்று.

நான்  பறந்து கொண்டிருந்தேன்.  கண்களை மூடி கடவுளுடன்  பேசிக் கொண்டிருந்த  தருணங்களை எண்ணி  ஆழ்ந்து சுவாசித்தேன். 

அப்போது ஷாஜியின் குறுஞ்செய்தி வந்தது.  “மை  நேம் இஸ் கான் எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் என் மீது கோபமா?”

ஓ, மை நேம் இஸ்  கான் அவருக்குப் பிடிக்கவில்லையா? 
அப்போதுதான் அந்த விஷயமே எனக்குத் தெரிய வருகிறது.  ஆனால் அந்தப் பரவச மனநிலையிலும் என் வழக்கமான விளையாட்டு புத்தி வெளியே வந்தது.  “என்னைத்தான் உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களை எப்போதும் எனக்குப் பிடிக்கும்” என்று பதில் அனுப்பினேன்.

பதறி  விட்டார் மனிதர்.  என் மீதான  அவருடைய ஆழமான  பிரியத்தையும்  அன்பையும் தெரிவித்து உடனே பதில் செய்தி வந்தது.

சும்மா  விளையாடினேன் ஐயா; எங்கே இருக்கிறீர்.

ஸ்காட்ச்  இருக்கிறது; குடிக்கப் போகலாமா?

அப்போதைய  பரவசத்தில் நான் குடிக்கும் நிலையிலும் இல்லை.  இன்னொரு  நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று  செய்தி அனுப்பி  விட்டு அங்கிருந்து  நைஸாகக் கிளம்பினேன்.

வெளியே  வந்து பிளாட்பாரத்தில்  நீண்ட நேரம்  அமர்ந்திருந்தேன்.  பக்கத்தில் ஒரு  ஆள் பைக்கில் நீண்ட நேரம் யாருக்கோ காத்திருந்தான்.  எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லை.  வீட்டுக்கு நடந்தே போய் விடலாம் என்று எழுந்தேன்.

“போகலாமா  சாரு?” என்ற குரல் வந்தது.

பைக்கில்  அமர்ந்திருந்த  உருவம்தான் பேசியது.

அட  நவீன்!

நீங்கள் எப்படி இங்கே?

நீங்கள்தானே சாரு ’வெளியே இருக்கிறேன்; வா’ என்றீர்கள்?

28.2.2010.
12.40 p.m.

Wednesday 12 June 2013

சொந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கும் சாரு


Oct 10, 2008ல் சாரு :


வீட்டு உரிமையாளரிடமிருந்து ஓலை வந்து விட்டது. வீட்டைக் காலி பண்ணச் சொல்லி

வீடு பார்க்க ஆரம்பித்தோம்

பழைய கதைதான். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் வாடகைதான் எகிறி இருந்தது. இருபது ஆயிரத்துக்குக் குறைந்து வீடே இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் ஒரே ஒரு அறையில் குடியிருந்தேன். வாழ்வதற்கு 300 சதுர அடி உள்ள ஒரே ஒரு அறை எனக்குப் போதும். ஆனால் என்னுடைய புத்தகங்களை வைப்பதற்குத்தான் குறைந்த பட்சம் 700 சதுர அடிகள் தேவை



முதல் மாடியில் ஒரு வீடு அகப்பட்டது. 700 சதுர அடிதான். போதாது என்று திரும்பிய போது வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின் சாதகமான அம்சங்களை அடுக்கினார். வீட்டுக்கு எதிரே கலங்கரை விளக்கம். தினமும் காலையில் கடற்கரையிலேயே வாக்கிங் போகலாம். ஆஹா ஆனந்தம். வீட்டின் உரிமையாளர் ஒரு பெண். அங்கேயே க்ரௌண்ட் ஃப்ளோரில் வசிக்கிறாராம். 25 வயது இருக்கும். குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பவரைப் போல் இருந்தார். சரி, அவர் எப்படி இருந்தால் நமக்கு என்ன? ஆனால் அவர் சொன்ன வாடகைதான் எனக்கு என்னென்னவோ விபரீத எண்ணங்களை வரவழைத்து விட்டது.

வாடகை 20,000 ரூபாயாம். வீட்டுக்கா அல்லது... 

சரி, எதுக்கு வம்பு என்று ஓடி வந்து விட்டேன்

இப்போது ஒரு சுமாரான வீடு கிடைத்திருக்கிறது. ஆனால் முன் பணமாகக் கொடுக்க வேண்டிய தொகை இந்த இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகி விட்டது. பழைய ஓனரிடம் இருக்கும் தொகையை வாங்கி புதிய ஓனரிடம் கொடுக்கலாம் என்றால் இன்னும் ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது

எனது வாசகர்களிடம் மீண்டும் விண்ணப்பிக்கிறேன்

இது பற்றிப் பலரும் கேலியும் அவதூறும் செய்வார்கள். ஐந்து லட்சம் விற்பனையாகும் பெரும் பத்திரிகையில் கூட அவதூறு செய்து எழுதுவார் பிரபல கட்டுரையாளர். ப்ளாகில் எழுதுபவர்களோ...கேட்கவே வேண்டாம். பஸ்ஸில் அட்டை வைத்து பிச்சை கேட்கும் சிறுமியின் ஞாபகம் வருவதாக எழுதியிருந்தார் ஒரு ப்ளாகர். யார் கலைஞன், யார் பிச்சைக்காரன் என்று கூட வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்கள் ப்ளாகில் எழுதுபவர்கள். பார்த்துக் கொள்ளுங்கள்

நன்று. என் தொழில் எழுத்து. அட்டை வைத்துப் பிச்சை எடுப்பது அல்ல. பிச்சை எடுப்பது என்பது இன்று முதலீடே இல்லாத ஒரு பெருந்தொழில். பல கோடிகள் அதில் புரளுகின்றன. செக்ஸ் தொழிலைப் போல் மிகக் கொடூரமான வன்முறையும், நம்பவே முடியாத படு பாதகங்களும் நிறைந்த ஒரு தொழில் அது. பஸ்ஸில் அட்டை போடும் அந்தச் சிறுமியிடம் பேசினால் அது உங்களுக்குப் புரியும்

ஆனால் என்னுடைய தொழில் எழுத்து. இதில் தமிழ்நாட்டிலேயே அதிக பட்சம் உழைப்பவன் நான்தான். ‘ இந்த 2008-இல் நான் எழுதியிருக்கும் பக்கங்களை எண்ணிச் சொல்லுங்கள்என்று இரண்டு நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். ஒரு வாரமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகங்களாகப் போட்டால் இருபது வரும் என்று நினைக்கிறேன். இந்த அளவுக்கு உழைத்தும் இப்படிக் காசு கேட்டு அட்டை போடும் நிலைக்குக் காரணங்கள் இரண்டு

ஒன்று, நானேதான். என்னுடைய சமரசமற்ற போக்கு. யாரோடும் எதற்காகவும் நான் சமரசம் செய்து கொண்டதில்லை. இது பற்றி நிறைய எழுதி விட்டேன். இரண்டு, என் எழுத்துக்கு ஊதியம் கிடைப்பதில்லை. காரணம், இலக்கியப் பத்திரிகைகள் நஷ்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன

700 சதுர அடிக்கு 20,000 ரூ. வாடகை கேட்ட ஓனரைப் பற்றிச் சொன்னேன். அதே சமயம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நேற்று இப்போது நான் குடியிருக்கும் வீட்டு ஓனர் வந்தார். அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தருவதற்காக. அவரும் ஒரு பெண்மணிதான். செக்கில் கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்து விட்டுமற்றதை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். ப்ளாங்க் செக். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

என்னுடைய வங்கிக் கணக்கு எண்:
ICICI A/c No.
T.Nagar Branch, Chennai 17.
Account holder’s name: k. arivazhagan 


இப்போ நம்ம அல்டிமேட் எழுத்தாளர் 2002ல் என்ன எழுதிருக்காருன்னு பார்ப்போம் :


நானும் அவந்திகாவும் ஒரு சோதிடரை சந்திக்க நேர்ந்தது. சோதிடர் என்பதைவிட clairvoyant என்று சொல்லலாம். எழுபது வயது அம்மா. கண்களை மூடி தியானித்து வருங்காலத்தையும் கடந்த காலத்தையும் நிகழ்காத்தையும் காணக் கூடியவர்.

“விரைவில் நீங்கள் ஒரு வீடு வாங்குஈர்கள். அதன் அருகே ஒரு நதியும் தெரிகிறது” என்றார்.

‘நிச்சயமாக இல்லை’ என்று நினைத்துக் கொண்டேன். அதிலும் நதிக்கருகில் வீடா ? அப்படியானால் அடையாறு தான். அடையாறில் வீடு வாங்க வேண்டுமானால் அதற்கு வைர வியாபாரயாக அல்லவா இருக்க வேண்டும் ?

ஆனால் அந்த அம்மா சொன்னது மிக விரைவில் பலிதமாயிற்று. அடையாறு அல்ல. சின்மயா நகர். நதி ? என்ன செய்வது ? வீட்டுக்கு எதிரும் புதிரும் திரும்பின இடமெல்லாம் கூவம் தான் வளைந்து நெளிந்து ஓடுகிறது

-------------------------------------



சொந்த வீட்டுக்கு எதுக்குய்யா வாடகை கொடுக்குற ?? தமிழன் தான் எதையும் நியாபகம் வச்சுக்க மாட்டான், நல்லா தலையில் மிளாகாய் அரைக்காலாம்னு நினைச்சுட்டிங்களா சாரு ?? அது எப்படி ? பழைய ஹவுஸ் ஓனர் கிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கினாலும் இன்னும் ஐம்பதாயிரம் ருபாய் குறையுதாமாம்... அட்றா..அட்றா.அட்றா.. சொந்த வீட்டுக்கு வாடகை மட்டும் தான் கொடுப்பாருன்னு பார்த்தா அதுக்கு அட்வான்ஸ் வேற கொடுத்திருக்காரு நம்ம சாரு...