Saturday 30 November 2013

அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் மண்டையின் எழுத்து - நான்-ஸ்டாப் காமெடி

premieres gouttes de pluie…
July 6th, 2011

’ஏன் அதிகம் எழுதுவதில்லை?’ என்று கேட்டார் நண்பர் ஒருவர்.  இணையதளத்தில்தான் அதிகம் எழுதுவதில்லை; மற்றபடி எழுத்து தொடர்பான வேலைகளில்தான் அதிகம் மூழ்கியிருக்கிறேன் என்றேன்.

ஸீரோ டிகிரி இந்தி மொழிபெயர்ப்பு மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  நானும் கூடவே அதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.  நான் ஸீரோ டிகிரியில் அதிகம் சம்ஸ்கிருதம் கலந்த தமிழைப் பயன்படுத்தி இருப்பதால் இந்திக்கு அது லகுவாக இருக்கிறது.

ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பிலும் துணை செய்து கொண்டிருக்கிறேன்.

ராஸ லீலா ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு பக்கம் என்னை அதிகம் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறது.  அதன் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுள் அடியேனும் ஒருவன்.

இதற்கிடையில் டாக்டர் ராமானுஜம் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் தேகம் நாவலை அவ்வப்போது சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இவருடைய மொழிபெயர்ப்பு என்னை அதிகம் வேலை வாங்கவில்லை.

இவ்வளவுக்கு இடையில் எக்ஸைல் நாவலை அதிவேகத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அடியேன் எழுதிய முதல் ஃப்ரெஞ்சுக் கவிதை அதில் இடம் பெறுகிறது.  தலைப்பு: premieres gouttes de pluie.  கவிதை எதைப் பற்றியது?  கவிதையை இங்கே வெளியிடலாமா?  மூச்… இதை வெளியே சொன்னதற்கே என் மேனேஜர் என்னைக் கன்னாபின்னா என்று திட்டுவார்.  நாவல் வெளிவரும் வரை வாயே திறக்காதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் என் ஜெர்மன் மொழிபெயர்ப்பாளரின் வற்புறுத்தலால் ஸால்ஸா வகுப்புக்கு வேறு சென்று கொண்டிருக்கிறேன்.  58 வயது ஸால்ஸாவுக்குத் தடை இல்லையாம்.  கலகம் காதல் இசையில் ஸால்ஸா பற்றி விரிவாக எழுதியிருப்பது எனக்கு உள்ள கூடுதல் தகுதியாம்.  சே… என்ன வாழ்க்கைடா இது!

Saturday 16 November 2013

சாருவின் மனைவி அவந்திகா நித்யானந்தவிற்கு எழுதிய கடிதம்

இதன் ஒரிஜினல் இந்த சுட்டியில் உள்ளது: http://bit.ly/1aKJo0H

காமம் என்று வந்தால் தாய், மகன், அப்பா, மகள் உறவுகூட அத்துப்போய்விடும் என்று நான் அறிந்து அன்று விக்கித்துப்போனேன்.  என் மகன் கார்த்திக் இதைப்பற்றிக் கேட்டபொழுது உன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிடு என்றான்.”
சாரு நிவேதிதாவைப்பற்றி சொல்லப்பட்ட இந்த வரிகளைச் சொன்னது யார்?
பேஸ் புக்கில் சாரு நிவேதிதாவால் செக்ஸ் டார்ச்சர் அனுபவித்த அப்பாவி பெண் எழுத்தாளர் அல்ல.

சாருவின் சொந்த மனைவி அவந்திகா அவர்கள், தம் கைப்பட எழுதிய கடிதத்தில் இருக்கும் சில பகீர் வரிகள்தான்  இவை.

திருமதி அவந்திகா அவர்கள் (ஆன்மீக பெயர் : மா ஆனந்த வள்ளி) 2009 வருடம் நித்யானந்தா தியான பீடத்தில் நடத்தப்பட்ட பத்து நாட்கள் தியான முகாமில் (நித்யானந்தம் தியான முகாம்) கலந்துகொண்ட பொழுது, தன் குருநாதரான பரமஹம்ஸ நித்யானந்தரிடம் தன் கைப்பட எழுதிய 9 பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதத்தை கண்ணீருடன் அளித்தார்.
நான் நித்யானந்த பதிப்பகத்தில், தமிழ் பிரசுர பிரிவின் பொறுப்பாளராக இருந்ததால் தமிழில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் என் கைக்கு வந்தது.

இணையதளத்தின் வழியாக தனது வாசகியிடம் வக்கிர உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காக எழுத்தாளர் சாரு நிவேதிதா மீது எழுந்த குற்றச்சாட்டு ஆதாரத்தோடு எழுந்தாலும், தன்னைக் களங்கப்படுத்தவும், தன் புகழைக் கெடுக்கவும் நடத்தப்பட்டுள்ள அவதூறு இது என்றும், தன்னுடைய பாஸ்வேர்டை ஒரு எழுத்தாளர் நண்பரிடம் கொடுத்ததாகவும், அவர்தான் தன் பெயரில் இப்படி விளையாடியிருக்க வேண்டும் என்றும், அந்த உரையாடலுக்கும் தனக்கும் சம்பந்தமே கிடையாது என்றும் சொல்லி தன்மீதான மொத்தக் குற்றச்சாட்டையும் மறுப்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலை.  ஆனால் சாருவைப் பற்றி அவர் மனைவியே எழுதிக் கொடுத்த உண்மைகளில் சில, ‘சாருவிற்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை ஒரு புதுக் கல்லூரி மாணவி மாறிவிடுவாள்’ (ஆதாரம்: அவந்திகா தன் கைப்பட எழுதிய 9 பக்க கடிதம்).

இதையும் தாண்டிய அதிர்ச்சிகரமான அடுத்த வரிகளை சாருநிவேதிதாவே தன்னைப் பற்றி சொல்லியிருக்கிறார்.. ஓரினச் சேர்க்கையை ரொம்ப தீவிரமாக நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்,” என்று சொல்லியுள்ளார். (ஆதாரம்: புத்தகத்தின் பெயர்: ஒழுங்கின்மையின் வெறியாட்டம் பக்கம்: 85 ஆசிரியர்: சாரு நிவேதிதா).

பெண்களுக்கு ஆபாச கு–கு அனுப்புவதும், சாட் செய்வதும் சாரு நிவேதிதாவின் காமவிகார விளையாட்டுகளில் ஒன்று.  அதற்கான ஆதாரம் சாரு நிவேதிதா எனக்கு அனுப்பிய ஆபாச SMS 094422 99992 என்ற தன்னுடைய சொந்த மொபைலிலிருந்து 09442288705 என்ற என்னுடைய மொபைல் போனுக்கு ஏப்ரல் 24, 2010 அன்று ஒரு ஆபாச SMS வந்தது.  அந்த கு–கு வந்த உடனேயே என்னுடைய மொபைல் போனை switch off செய்து விட்டேன்.  சாரு நிவேதிதா அதோடு விடாமல் மே 7, 2010 குமுதம் ரிப்போர்ட்டரில் என்னைப்பற்றி அவதூறு கட்டுரை எழுதினார்.

இவ்வளவு கீழ்த்தரமான மனிதர் ஒருவர் இந்து சன்யாசினிகள் பற்றியும், குருநாதர் பற்றியும் அவதூறாக தொடர்ந்து கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தபொழுது, எனக்கு அவரைப்பற்றி அவர் மனைவி தந்த கடிதம் சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது.  அப்பொழுது அந்தக் கடிதத்தை பத்திரிகைக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து ஆஸ்ரம நிர்வாகத்தினரிடம் ஒப்புதல் கேட்ட பொழுது, அவர்கள் இதைப்பற்றி என் குருநாதரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அப்பொழுது என் குருநாதர், ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரை பற்றிச் சொல்லும்பொழுது அவர் தன்னைப்பற்றித்தான் சொல்லுகின்றார், என்னை குருவாக ஏற்று நம்பிக்கையுடன் தந்த கடிதத்தை நாம் நம் தேவைக்காகப் பயன்படுத்தக்கூடாது.  அவர்கள் இப்பொழுது என்னை குருவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவதூறு செய்தாலும் அந்த நேரத்தில் என் மீது வைத்த நம்பிக்கையால் தந்தார்கள். நான் அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றேன்,” என்று ஒப்புதல் தர மறுத்துவிட்டார்கள். அதற்கு பிறகு சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்வோம் என்று முடிவெடுத்தேன்.
நான் சட்ட ரீதியாக வழக்கு தொடரப்போகிறேன் என்று தெரிந்துகொண்டதும் சாரு நிவேதிதா ஆள் வைத்து என்னைக் கொலை செய்வதாக மிரட்டினார்.

உயிர்போனாலும் பரவாயில்லை என்று துணிந்து அவர் மீது பிடதி காவல் நிலையத்தில் ஜூலை 8, 2020 அன்று வழக்கு பதிவு செய்தேன் (FIR No :403/2010).

உயிரைப் பணயம் வைத்து இவ்வளவு தூரம் துணிந்து முயற்சி செய்ததற்கு காரணம், மிகவும் புனிதமான குரு சிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்திய இவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பது மட்டும்தான். இதைப்போல் எதிர்காலத்தில் எந்தப் போக்கிரிக்கும் குரு சிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்தும் திமிர் வரக்கூடாது என்ற சமூக பொறுப்போடும்தான் வழக்கு பதிவு செய்தேன். (நித்யானந்தாவின் செக்ஸ் ஒப்பந்தத்தைப் படித்துவிட்டுத்தான் கையெழுத்துப் போட்டீர்களா? உங்களுடன் அவர் மேற்படி தாந்திரிக் செக்ஸ் வைத்துக்கொண்டாரா? என்று லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் ஆபாசமாக எழுதியிருந்தார்)

இவ்வளவு ஆபாசமாக எழுதியதற்கு மன்னிப்புக் கேட்கச் சொல்லி சட்ட ரீதியாக ஜூலை 19 2010 அன்றும், அக்டோபர் 4 2010 அன்றும் வக்கீல் மூலமாக முறைப்படி நோட்டீஸ் அனுப்பினேன்.

ஒரு பெண்ணால் எவ்வளவு துயரங்களையும் தாங்கிக்கொள்ள முடியும்.  ஆனால் அவளுடைய ஒழுக்கத்தை சந்தேகப்பட்டால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.

ஒரு சன்னியாசினியான என்னால் சாதாரண அவதூறுகளை கால் தூசுக்கு சமமாகக் கருதி தாங்கிக்கொள்ள முடியும்.  ஆனால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம், என்னுடைய மாதாவாக, பிதாவாக, தெய்வமாக உணருகின்ற என் குருநாதரைப் பற்றியும், என்னைப்பற்றியும் அவதூறாக எழுதி குருசிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்தியதுதான். அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

அதனால் சாரு நிவேதிதாவின் மேல் பெங்களூரு Additional Magistrate Court ல்  வழக்கு தொடர்ந்திருக்கின்றேன்.  (வழக்கு எண் BPR: 75 37/ 2011). என்னிடம் எல்லா ஆதாரமும் சரியாக உள்ளதால், சட்டத்தினிடமிருந்து இனித் தப்ப முடியாது என்று நன்றாகத் தெரிந்துகொண்டு தொடர்ந்து மர்ம நபர்களால் கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்.

இதுபோன்ற மனிதர்கள் புனிதமான சமூகசேவை குணம் கொண்ட எழுத்தாளர் குலத்திற்கே வாழும் அவமானச் சின்னங்கள்.
பத்திரிகையாளர் என்ற போர்வையில் பெண்களை அவதூறு செய்கின்ற இந்த சாரு நிவேதிதாவின் மனைவியே வெறுத்துப்போய் அவரின் தோழியிடம் சொன்ன வார்த்தைகள் பார்ப்பவர்களையெல்லாம் படுக்கைக்கு அழைக்கும் காம மிருகம் அவன், கொடூரன். சாமிதான் என்னைக் காப்பற்ற வேண்டும்.”

டிசம்பர் மாதம் 29,2010 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற என் சத்குருநாதருடைய 34 வது அவதார திருவிழாவில் கலந்து கொண்ட திருமதி. அவந்திகா (மா ஆனந்த வள்ளி) எல்லா பக்தர்களின் முன்னிலையில் சாமியின் பாதத்தில் விழுந்து, சாமி!அவர் இன்னமும் திருந்தவேயில்லை. உங்களை அவதூறு செஞ்சி பெரிய பாவம் பண்ணிட்டார். அவர் அப்படியே இருக்காரு சாமி. அவருக்கு நீங்கதான் நல்ல புத்தி தரணும்,” என்று அழுதுகொண்டே மன்றாடியதை நானே அருகில் இருந்து என் கண்ணால் பார்த்தேன்.
சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்ற நினைக்கும் இந்தக் கொடூரனுக்கு சமூகம்தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு, உலக உத்தமர் சாரு நிவேதிதா, நான் செல்போன் உபயோகப்படுத்துவதே இல்லை.  என்னுடைய பத்திரிக்கை நண்பர்தான் மா நித்ய சுப்ரியாவிற்கு SMS அனுப்பியிருக்க வேண்டும்.  அந்தக் கடிதமே ஒரு பொய். திட்டமிட்ட சதி.  என் மனைவி  கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அந்த சாரு நிவேதிதா நான் அல்ல,” என்று கூட பதிலளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக அந்தக் கடிதத்தை எழுதியது அவர் மனைவிதான், அந்த SMS அனுப்பியது அவர்தான் என்பதை 100 சதவிகிதம் நிரூபிக்க முடியும்.
என் குருநாதர் அந்தக் கடிதத்தை தரவேண்டாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்போது சாருநிவேதிதா மீதான வழக்கின் ஆதாரங்களுள் ஒன்றான இந்தக் கடிதம், பொதுமக்களுக்கு கிடைக்கும் ஒருபடிவமாக மாறிவிட்டதால் இதைப் பகிர்கிறேன்.
எனக்கு நியாயம் தேவை. அந்த கொடூரனால் இனி எந்தப் பெண்ணுமே பாதிக்கப்படக்கூடாது என்பது மட்டும்தான் என் நோக்கம்.