Wednesday 27 March 2013

சென்னையில் எந்த காபி ஷாப்பில் குட்டியை தடவலாம் - சாரு விளக்கம்



ஒவ்வொரு காதலில் விழும் போதும் பெருமாளுக்கு அது ஒரு புதுப் பிறவி போலவே தோன்றும். ’ அப்படியானால் எனக்குப் பிறகு வரும் காதலையும் ஒரு புதுப்பிறவி என்றுதான் சொல்வீர்களா? ’ என்று இதைப் படித்து விட்டு என்னைக் கேட்காதே ஜெஸ்ஸி. இந்தக் காதலோடு என் பிறவி முடிகிறது. இனிமேல் எனக்குப் பிறவி இல்லை என்று கொள்


பெருமாளின் முந்தின பிறவிகளில்குறிப்பாக பானு மற்றும் ஸ்வேதாவுடனான காதல் வாழ்வில்அவன் சென்னையிலுள்ள அத்தனை காஃபி ஷாப்புகளுக்கும் சென்று கொண்டிருந்தான். இதற்காகவே அவன் நண்பன் நாராயணுடன் சென்று பெரிய கள ஆய்வே நடத்தினான்.



அலெக்ஸ் போனில் அழைக்கும் நேரத்திலெல்லாம் பெருமாள் பானுவுடனோ, ஸ்வேதாவுடனோ ஏதாவது ஒரு காஃபி ஷாப்பில்தான் இருப்பான். அது பற்றி அலெக்ஸ் மிகுந்த வருத்தத்துடன் பெருமாளிடம் சொன்னான்... ” ஒரு காலத்தில் பார் பாராகச் சுற்றிக் கொண்டிருந்த நீ இப்படி காஃபி ஷாப்புகளுக்குப் போய்க் கொண்டிருப்பது மகா கேவலமாக இருக்கிறது .”


சென்னை செனடாஃப் ரோட்டில் ஒரு காஃபி ஷாப் உள்ளது. சுமார் ரகம். ஏர்கான் அவ்வளவாக இருக்காது. ப்ரைவஸியும் கிடையாது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை இஸ்பஹானி மையத்தில் உள்ள காஃபி ஷாப் தேவலாம் ரகம். இங்கும் ப்ரைவஸி கிடையாது. காதர் நவாஸ் கான் ரோட்டில் உள்ள மோக்கா ஒரு அற்புதமான இடம். ஆனால் கூட்டமாக இருக்கும். காதலியின் தோள் மீது கூட கை போட முடியாது. அடிக்கடி நடிகை த்ரிஷாவைப் பார்க்கலாம். சென்னையில் நான்கு இடங்களில் பரிஸ்டா காஃபி ஷாப் உள்ளது. தி. நகர் ஜி.என். செட்டி சாலையில் ஒன்று, காதர் நவாஸ் கான் ரோட்டில் மோக்காவைத் தாண்டி ஒன்று, நுங்கம்பாக்கம் ரோஸி டவர்ஸில் ஒன்று. இந்த மூன்றிலும் இடம் கிடைப்பதைப் பொறுத்துத்தான் ப்ரைவஸி. பெஸண்ட் நகரில் உள்ள பரிஸ்டா ரொம்பக் குட்டி. இங்கும் சரியான இடம் கிடைத்தால்தான் குட்டியைத் தடவலாம்.


எழும்பூரில் ம்யூஸியத்துக்கு எதிரிலும், அபிராமபுரம் சி. பி. ராமசாமி சாலையிலும் உள்ள காஃபி ஷாப்புகள் படு தண்டம். அங்கே போவதற்குப் பேசாமல் தி. நகர் நடேசன் பூங்காவுக்குப் போனாலாவது கொஞ்சம் தடவலாம். கோபாலபுரம் லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அமேதிஸ்ட் ஒரு அற்புதமான சூழலைக் கொண்ட இடம். சிறியதொரு வனத்தைப் போல் இருக்கும். அவ்வளவு மரம் செடி கொடிகள். ஆனால் தொட முடியாது. சினிமா நடிக நடிகையருக்குப் பிடித்த இடம் போலும். நிறைய பேர் தென்படுகிறார்கள்.


இது எல்லாவற்றையும் விட ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அஸ்விதா காஃபி ஷாப்தான் சென்னையிலேயே பெஸ்ட். பேரரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டால் ஒரு குட்டிக் கலவியே நடத்தி விடலாம்.


ஆரம்ப காலத்தில் பெருமாளுக்கு இவ்விஷயங்களெல்லாம் தெரியாமல் போனதால் பல தினங்கள் பானுவை அபிராமபுரம் மற்றும் எழும்பூரிலுள்ள பாடாவதி காஃபி ஷாப்புகளுக்கே அழைத்துக் கொண்டு போயிருக்கிறான்.


மூன்று மணி நேரம் ஒருவரை ஒருவர் தொடாமல் ஒரு இடத்தில் அமர்ந்து வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் அந்த அபத்தத்தை என்னவென்று சொல்வது? ப்ளூ பால்ஸ்தான் கண்ட பலன். அந்த இடங்களெல்லாம் கடுமையாகக் கலவி செய்து விட்டு, அதன் பிறகு சாவகாசமாகப் பேசிக் கொண்டிருப்பதற்கு மட்டுமே செல்ல வேண்டிய இடங்கள். ஒரே ஒரு முத்தம் கூடக் கொடுக்காமல் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் செல்ல வேண்டிய இடங்கள் அல்ல.


ஆனால் எந்தக் காஃபி ஷாப்புக்கும் நான் வர மாட்டேன் என்று மறுத்து விட்டாள் ஜெஸ்ஸி. ” என்னை யாருக்கும் தெரியாது என்றாலும் உங்களைத் தெரிந்திருக்கிறதே; வேண்டாம் வம்பு. ”


ஃபிஷர்மன் கோவில் வைத்து சில தடவைகள்எனக்கு போர் அடிக்கிறதுஎன்றாள் ஜெஸ்ஸி. ” என் பக்கத்தில் இருக்கும் போது கூட உனக்கு போர் அடிக்கிறதா? ” என்று எரிச்சலுடன் கேட்டான் பெருமாள்.


அதற்கு ஜெஸ்ஸி சொன்ன பதில்: “உங்களுக்கு ஆரம்பமாகி விட்டது; இனிமேல் fulfil ஆகும் வரை உங்களுக்கு போர் அடிக்காது. ஆனால் எனக்கு இன்னும் ஆரம்பமே ஆகவில்லை; அதனால்தான் போர் அடிக்கிறது... ” 



11.10.2008

11.30 p.m.