Saturday 27 April 2013

எக்ஸைல் ஒரு காவியம் என்று ஏலம் விட்டு குஞ்சுக கோவணத்தை உருவிய சாரு

எக்ஸைல் பற்றி…
October 11th, 2011
ஊண் உறக்கம் இல்லாமல் நாவலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  தமிழில் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைத் தாண்டும் வகையில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது.  இப்போது அந்த ஆசை பூர்த்தியாகி விட்டது.  எக்ஸைலைப் படிக்கும் போது இதை நீங்கள் உணர்வீர்கள்.  உலகின் மிகச் சிறந்த 50 நாவல்களில் எக்ஸைலும் ஒன்றாக இருக்கும்.  அதை விட இன்னொரு விஷயம், உலகில் எந்த நாவலிலும் கதாபாத்திரங்களே நாவலை எழுதியதில்லை.  உதாரணமாக, எக்ஸைலில் ஒரு பாத்திரம் பயங்கர ஆணாதிக்கவாதி.  அவன் பேசும் ஒரு வார்த்தையில் கூட எனக்கு உடன்பாடு கிடையாது.  ஆனால் அவன் இந்த நாவலில் ஒரு முக்கியமான பாத்திரம்.  மேலும், ஒரு விஷயம்.  எக்ஸைலில் வரும் பகடி அளவுக்கு உலக நாவல்களிலேயே அரிது.  சமீபத்தில் என் தோழியிடம் அந்த நாவலில் வரும் சொய்ங் வாத்தியார் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தோம்.  சொல்லும் போது சிரித்து சிரித்து என் கண்களில் கண்ணீர் ஊற்றுகிறது.  தோழிக்கும் அப்படியே.  ரெஸ்டாரண்டே எங்களை வேடிக்கை பார்த்தது.  பத்து நிமிடம் சிரித்துக் கொண்டே இருந்தோம்.  ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  சொய்ங் வாத்தியார்.
இந்த சிறப்பையெல்லாம் நானே சொல்லிக் கொள்வது பற்றி எனக்கு எந்த லஜ்ஜையும் இல்லை.  நான் ஒரு கருவியே.  எழுதியது இறைவி.  என்னை ஆட்கொண்ட சோட்டாணிக்கரை பகவதி.
மேலும், நம் பெருமைகளை நாமே தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருப்பது தமிழ்நாட்டின் அவலங்களில் ஒன்று.  ஏனென்றால், ஸீரோ டிகிரி ஒரு lipogrammatic நாவல்.  உலகில் இதுவரை இரண்டே இரண்டு லிப்போக்ரமாட்டிக் நாவல்கள்தான் எழுதப்பட்டுள்ளன.  ஜார்ஜ் பெரக் எழுதிய La Disparition (ப்ரெஞ்ச்)  மற்றும் வால்டர் அபிஷ் எழுதிய Minds Meet (ஆங்கிலம்).  மூன்றாவது, ஸீரோ டிகிரி (தமிழ்).  இதையும் நானே தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.   தமிழ்நாடே கொண்டாடி, பெருமைப்பட்டிருக்க வேண்டிய விஷயம் இது.  ஆனால் நடக்கவில்லை.  லிப்போக்ரமாட்டிக் என்றால் என்ன?  ஃப்ரெஞ்சில் e என்ற எழுத்து இல்லாமல் ஒரு வாக்கியத்தைக் கூட எழுத முடியாது.  பெரக் e இல்லாமல் 311  பக்க நாவலை எழுதியிருக்கிறார்.  அதேபோல் தமிழில் ஒரு என்ற வார்த்தை இல்லாமல் ஒரு நாவலை எழுதுவது சாத்தியமே இல்லை.  நான் ஸீரோ டிகிரியை அப்படி எழுதியிருக்கிறேன்.  மேலும், அதில் கமாவும் மற்ற குறிகளும் கிடையாது.  முற்றுப் புள்ளி மட்டுமே உண்டு.
சமீபத்தில் வந்த கடிதம் ஒன்று இது.
டியர் சாரு,
கடந்த ஒரு வருடமாக தங்களை தங்களின் எழுத்துகளின் வழியே தரிசித்துவருகின்றேன் ,உங்கள் எழுத்து என்னை பல நிலைகளில் விழிப்புனுர்வு அடைய வைத்துக்கொண்டிருக்கின்றது .நான் உங்கள் எழுத்தை பற்றிக்கொண்டு சென்றுகொண்டே இருக்கின்றேன் ,எந்த விஷயத்தை யாரிடம் பேசினாலும் உங்களை பற்றி பேசாமல் , மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை . உங்கள் புத்தகமோ,எழுத்தோ  என்னிடம்  இல்லாலத நேரங்களில் நான் வெறுமையுடனும் பதற்றத்துடனும் இருக்கின்றேன் ,எனக்கு  உங்களையும்  நீங்கள் காட்டும் எழுத்தாளர்களயும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகின்றது. தங்களை   ஒருமுறை உங்கள் வீட்டில் சபரிமலைக்கு  செல்லும் முன் நடந்த பூஜையில் கலந்து கொண்டு சந்தித்திருக்கின்றேன்.(மறக்க முடியாத நாள்).தங்களுக்காக எதைவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் உங்கள் தீராத வாசகனாக  இருக்க விரும்புகின்றேன்.
நான் அறிந்த வரை தமிழுலகில் 1.பாரதி ,2.பெரியார், 3.சாரு நிவேதிதா.
இப்படிக்கு,
தேனில் சிக்குண்ட வண்டாக உங்கள் எழுத்துகளில் மூழ்கி கிடக்கும்,
தஞ்சாவூர் சம்பந்தர்.
டியர் சம்பந்தர்,
உங்கள் கடிதம் என்னை நெகிழ வைத்தது.  வரும் சனி ஞாயிறில் நடக்கும் வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------

எக்ஸைல் (மீண்டும்)

April 26th, 2013

என்னுடைய 50 ஆண்டுக் கால வாசிப்பு அனுபவத்திலேயே என்னை அதிகம் கவர்ந்த எழுத்தாளர் என்று Mario Vargas Llosa-வைச் சொல்லுவேன்.  அவருடைய ஒரு டஜன் நாவல்களையும் இரண்டு இரண்டு முறை படித்திருக்கிறேன்.  ஆனால் அவர் என் எழுத்தை மாற்றி விடவில்லை.
நிகோஸ் கஸான்ஸாகிஸ் என் குரு.  என் வாழ்க்கைப் பார்வையை மாற்றியவர்.  ஆனால் அவர் என் எழுத்தை மாற்றி விடவில்லை.
மற்ற என்னுடைய transgressive writing comrades ஆன வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், ஜார்ஜ் பத்தாய் அனைவரும் boring writers.  பத்து பக்கத்துக்கு மேல் படிக்க முடியாது.
ஹுலியோ கொர்த்தஸார் என்னை ஓரளவு பாதித்திருக்கிறார் என்று சொல்லலாம்.  ஆனால் அவரும் external ஆகத்தானே தவிர உள்வயமாக அல்ல; உணர்வுபூர்வமாக அல்ல.  இந்த நிலையில் என் வாழ்வில் முதல் முறையாக ஒரு விஷயம் நடந்துள்ளது.  அதாவது, எக்ஸைல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.  இப்போது ஒரு ஆங்கில நாவலைப் படித்து விட்டு, அதன் எக்கச்சக்கமான பாதிப்பில் எக்ஸைலின் தமிழ் மூலத்தில் சில விஷயங்களை நீக்கி விட்டு, சுமார் 200 பக்க அளவில் புதிதாக எழுதிச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். நாவலின் பல பகுதிகள் வெற்றிடமாக இருப்பதாகத் தோன்றியதே இதற்குக் காரணம்.  இப்படித் தோன்ற வைத்தது நான் படித்துக் கொண்டிருக்கும் நாவல்.  என் வாழ்வில் இந்த அளவுக்கு என் எழுத்தை பாதித்த நாவல் வேறு எதுவும் கிடையாது என்று திண்ணமாகச் சொல்வேன்.
ஏற்கனவே எழுதி வெளியாகி பல்லாயிரம் (?!) வாசகர்கள் வாங்கிப் படித்த நாவலில் இப்படி மீண்டும் 200 பக்கங்களை எழுதிச் சேர்க்கலாமா என்று எனக்கு சந்தேகம்.  அதிலும் நாவலின் கடைசியில் அல்ல; இடையிடையே.  மனுஷ்ய புத்திரனுக்கு போன் போட்டுக் கேட்டேன்.  தாராளமாகச் சேர்க்கலாம் என்றார்.  ஒரு ருஷ்ய நாவலை அதன் ஆசிரியர் பத்து தடவைகளுக்கு மேல் மாற்றி எழுதியிருக்கிறார் என்றார்.  அதாவது, கையெழுத்துப் பிரதியை அல்ல.  ஒவ்வொரு பதிப்பு வரும் போதும் மாற்றுவாராம்.  (இரண்டு வருடமாக உங்களை மிஸ் பண்ணினேன் ஹமீது…)
அதனால் தைரியம் வந்து விட்டது.  இப்போதைய எக்ஸைல் ராஸ லீலாவை விட அமர்க்களமாக இருக்கும்.  ஆனால் ஜனவரி புத்தக விழாவுக்குள் வருமா என்ற கேள்விக்கெல்லாம் பதில் கிடையாது.  50,000 பிரதிகள் விற்றால்தான் அப்படி நான் ரிஸ்க் எடுக்க முடியும்.  எனவே எப்போது முடியுமோ அப்போதே முடியும்.
சரி, என்னை அந்த அளவுக்கு பாதித்த நாவல் எது தெரியுமா?  தாருண் தேஜ்பால் எழுதிய the Alchemy of Desire.  இந்த நாவல் நானே எழுதியது போல் இருந்தது.  ஒவ்வொரு வார்த்தையிலும் நான் என்னைப் பார்த்தேன்.  தாருணுக்கு போன் போட்டு சொன்னேன்.  ”உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி” என்றார்.  இலக்கியத்தில் மட்டும் நட்போ, பெருந்தன்மையோ, நன்றிக் கடனோ எதுவுமே பார்ப்பதில்லை என்று சொல்லவில்லை; சொல்லக் கூச்சமாக இருந்ததால் மெஸேஜ் செய்தேன்.

Friday 26 April 2013

மண்ட புத்தகம் கிடைக்கவில்லை: மனுஷ்யபுத்திரன் மீது குஞ்சுகள் பாய்ச்சல்!

மனுஷ்ய புத்திரனின் கோபமான கடிதமும் ஒரு வருத்தமான பதிலும்
January 7th, 2011

உங்கள் புத்தகங்கள் கிடைக்காதது தொடர்பாக
அன்புள்ள சாரு
சமீப காலமாக உங்கள் வலைத் தளத்தை திறக்கவே எனக்கு பயமாக இருக்கிறது. உங்கள் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று உங்கள் வாசகர்கள் எழுதும் கடிதங்கள் பஞ்சகாலத்தில் அரிசிக்கும் கோதுமைக்கும் மக்கள் கூக்குரலிடுவதை எனக்கு நினைவுவூட்டுகிறது. இவற்றை படிக்கும்போது இதில் இரண்டு விதமான உண்மைகள் இருக்கவாய்ப்பிருக்கிறது. ஒன்று நான் மிகவும் மோசமான ஒரு பதிப்பாளனாக இருக்கவேண்டும் அல்லது உங்கள் வாசகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களில் சிலர் உங்களை ஒரு குழந்தையை நடத்துவது போல நடத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சுவாரசியம் வந்துவிட்டது.
சில எளிய உண்மைகளை இங்கே சொல்ல கடமைப்பட்டிருகிறேன்.
தமிழ் நாட்டில் 500க்கும் மேற்பட்ட புத்தக்கடைகள் இருக்கின்றன. எந்தக் கடையிலும் எந்தப் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகமும் ஒருபோதும் இருந்ததில்லை.  அது கற்பனையில்கூட சாத்தியமாகாத ஒன்று. பல கடைக்காரர்களுக்கு சமீபத்தில் என்ன புத்தகம் தமிழில் வந்திருக்கிறது என்றுகூடத் தெரியாது. அவர்கள் தெரியவந்து அவற்றை ஆர்டர் செய்யும் வரை நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது. அல்லது எமது விற்பனை பிரதிநிதிகள் அவர்களை அணுகி அறிவுறுத்தும்வரை அந்தப் புத்தகங்கள் கடைக்கு போகாது. இதெல்லாம் சற்று கால அவகாசம் பிடிக்கக் கூடியவை. ஹிக்கிம் பாதம்ஸ், லாண்ட் மார்க் போன்ற நிறுவங்களில் நாம் புத்தக சாம்பிள் கொடுத்து அதன் பிறகு ஆர்டர் அளித்த பிறகே புதிய புத்தகங்களை சப்ளை செய்யமுடியும். அது கடைக்கு விற்பனைக்கு வர மேலும் சில நாட்கள் ஆகும். புத்தகம் காலியானாலும் உடனே அதற்கு மட்டும் ஆர்டர் தர மாட்டார்கள். ஒரு மாதம் கழித்து மொத்தமாக ஆர்டர் தரும்போதே காலியான புத்தகங்களுக்கும் சேர்த்துத் தருவார்கள். யார் கண்ணீர் விட்டுக் கதறினாலும் புத்தகம் சில நாட்களுக்கு இல்லாமல்தான் இருக்கும்.
அடுத்ததாக மறுபதிப்பு சம்பந்தமான பிரச்சினை. எந்தப் புத்தகமும் காலியான உடனேயே மறுமதிப்பு கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியமில்லை. புதிய புத்தகங்கள் அச்சிடும் நேரத்தில் அச்சகத்தார் மறுபதிப்புகளை தாமதப்படுத்துகின்றனர். வேண்டும் என்று செய்வதில்லை. மணி ஆஃப் செட்டில் ஒரு மாதமாக இரண்டு மிஷின்கள் உயிர்மைக்காக மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வளவு வேலைகள் குவிந்து போயிருக்கின்றன. எந்த முக்கியமான சர்வதேச எழுத்தாளரின் எல்லா புத்தகங்களையும் போய் புத்தகக் கடைகளில் கேட்டுப் பாருங்கள். எல்லாம் உடனே கிடைக்கிறதா பார்ப்போம். இதெல்லாம் இந்தத் தொழிலின் தவிர்க்கவியலாத விதிகள்.
அப்புறம் உயிர்மை ஆன்லைனின் உங்கள் புத்தகங்கள் கிடைக்காதது தொடர்பாக எழுதப்படும் புகார்கள். கடந்த இரண்டு வாரங்களாக உயிர்மை ஏராளமான நூல்களை பதிப்பித்து வருகிறது. தொடர்ச்சியான நூல்வெளியீடுகள் தொடர்பான வேலை நெருக்கடிகளும் நூல்களுக்கு இறுதிவடிவம் கொடுத்து செப்பனிடும் வேலகளும் ஒன்று சேர்ந்து உயிர்மையின் சிறிய குழு இரவு பகலாக தூக்கமின்றிப் போராடி வருகிறது. ஆன்லைனில் அவற்றை பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் இல்லாததுதான் காரணம். யாரோ ஒரு ஆன்லைனில் புத்தகம் விற்பவர் உங்கள் கூட்டத்திற்கு வந்து உங்கள் புத்தகங்களை ஒரு செட் வாங்கிக் கொண்டுபோய் அதன் அட்டைப் படத்தை ஸ்கேன் செய்து தமது தளத்தில் போட்டுவிட்டு எங்களிடம் சாருவின் புதிய புத்த்கங்கள் கிடைக்கின்றன் என்று சொல்வது வேடிக்கை. அவருக்கு அது மட்டுமே வேலை. உயிர்மை ஒரு பதிப்பகம். ஒரு அமைப்பு. உங்கள் புத்தகத்தை சீராக பதிப்பித்து, அதற்கு விழா எடுத்து இதே காரியத்தை அடுத்தடுத்து வேறுபல எழுத்தாளர்களுக்கும் செய்யும் ஒரு அமைப்பினால் சில்லரை விற்பனையாளரோடு போட்டு போடமுடியாது. எங்களுக்கு எல்லாவற்றுக்கும் கொஞ்சம் அவகாசம் தேவையாக இருக்கிறது. பொத்தாம் பொதுவாக எழுதப்படும் இது போன்ற ஒப்பீடுகள் எனக்கு ஆழ்ந்த மன வருத்ததை அளிக்கின்றன.
சீரோ டிகிரி பத்து வருடங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வாசகர்கள் எங்கே போனார்கள்? உயிர்மை அதை வெளியிட்ட பிறகு 2 மாதம் அச்சில் இல்லாமல் போனால் ஏன் உங்களை தொடர்ந்து பதட்டப்பட வைக்கிறார்கள்? 2 மாதம் காத்திருந்தால்தான் என்ன? நாம் அப்படி காத்திருந்து தேடி எவ்வளவோ புத்தகங்களை படிக்கவில்லையா? குமுதமும் விகடனும் கிடைப்பதுபோல உங்கள் புத்தகங்கள் எல்லா இடத்திலும் கிடைக்கும் என்று நம்பும் வாசகர்களை நான் எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.  குமுதம் விகடன்கூட போன வார இதழை இந்தவாரம் வாங்க நினைத்தால் நீங்கள் வாங்கமுடியாது. நூலகத்திற்கோ பழைய புத்தக கடைக்கோ தேடிப்போக வேண்டும்.
இன்னும் பத்து நாளில் சென்னை புத்தக கண்காட்சி முடிந்துவிடும். இன்னும் ஒருவாரத்திற்குள் உங்களது எல்லா புத்த்கங்களும் உயிர்மை ஆன்லைனில் விற்பனைக்கு வந்துவிடும். வரும் மாதங்கள் முழுக்க காரைக்குடி, திருப்பூர், தஞ்சாவூர், கோவை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, வேலூர் என எங்கெல்லாம் புத்தக் கண்காட்சிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் புத்த்கங்களை தூக்கிகொண்டு அலைவேன். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5 ஆயிரமோ 10 ஆயிரமோ நவீன எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்கும். அதைப் பற்றி எனக்கு எந்தக் களைப்போ வருத்தமோ இல்லை. இது சூழலோடு செய்யும் யுத்தம். இதை நான் வாழ்நளெல்லாம் தொடர்ந்து செய்வேன்.
சென்னை புத்தக் கண்காட்சியின் முதல் நாள் நான் உள்ளே நுழைந்ததும் யாரோ ஒருவர் காமரூபக் கதைகள் கிடைக்கவில்லை என்று உங்களிடம் புகார் செய்துகொண்டிருந்த்தார். நீங்கள் மிகவும் வருத்ததுடன் அந்தப் புகாரை என்னிடம் கொண்டுவந்தீர்கள். நான் எரிச்சலுடன் அங்கிருந்து உடனே கிள்ம்பிப் போய்விட்டேன். அடுத்த நாள் காலையில் 200 பிரதிகள் காமரூபக் கதைகள் கடைக்கு வந்து அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ராஸலீலா பைண்டிற்கு வந்துவிட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் கடைக்கு வந்துவிடும்.
சுஜாதா அவருடைய புத்தகங்கள் கிடைப்பது தொடர்பாக அவருக்கு எழுதப்படும் கடிதங்களை எனக்கே அனுப்புவார். அவற்றை பகிரங்கமாக வெளியிடுவது இந்தப் பிரச்சினையில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் புரியாத வாசகர்களிடம் பதிப்பகம் குறித்த தப்பண்ணெங்களை உருவாக்கும். சுஜாதா பின்பற்றிய அதே நடைமுறைதான் ஒரு எழுத்தாளன் அவனது பதிப்பாளனுக்கு செய்யக் கூடிய நியாயம் என்று நினைக்கிறேன். உங்கள் புத்தகங்களை முதன்முதலாக உலகெங்கும்கொண்டு சேர்த்தவன் என்ற முறையில் இதை உங்களிடம் கோருவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. மேலும் உங்களுடை பணி புதிய நாவலை எழுதுவதே தவிர ஒரு தமிழ் பதிபாளனின் துயரமான தலைவிதியை பகிர்ந்துகொள்வது அல்ல.
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
– uyirmmai
11/29subramaniyan street,
abiramapuramchennai-60018
phone:91-4424993448mobile:9444366704
மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு விளக்கம்:
தாங்கள் இது சம்பந்தமாக என் மீது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.  புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பது போன்ற கடிதங்களை முதலில் நான் உயிர்மைக்குத்தான் அனுப்பிக் கொண்டிருந்தேன்.  பிறகு அவற்றைப் பிரசுரித்து உயிர்மை முகவரியையும் மற்ற இடங்களில் கிடைக்கும் விபரங்களையும் சேர்த்தே கொடுத்து வருகிறேன்.  உயிர்மை பதிப்பகத்துக்கு இதனால் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றால் தினமும் தங்களை நேரில் சந்திக்கும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் இப்படிப் பதிவேற்றம் செய்வதை நிறுத்தியிருப்பேன்.  நேரில் சொல்லித் தவிர்த்திருக்கக் கூடிய ஒரு விஷயத்துக்கு இப்படி பகிரங்கக் கடிதம் எழுதி என்னைத் திட்டியிருக்க வேண்டாம்.  நான் அந்தக் கடிதங்களை வெளியிட்டு கிடைக்கும் விபரங்களையும் தெரிவிப்பதற்குக் காரணம், மற்றவர்களும் இது பற்றித் தெரிந்து கொண்டு என் உயிரை எடுக்க வேண்டாம் என்பதற்காகத்தான்.  மேலும், தேவரீர் சொல்வது போல் நான் நாவல் மட்டும் எழுதிக் கொண்டிருக்கவில்லை.  என் வாசகர்களோடு தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறேன்.  அதில் தங்களுடைய பதிப்பகத்துக்கு ஏதேனும் என்னால் கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தால் தங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  விஜய் டிவிகாரர்களிடமே மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போது உங்களிடம் கேட்பதில் என்ன தவறு?  இன்னமும் என் சிற்றறிவுக்கு விளங்காத விஷயம் என்னவென்றால், நேரிலேயே சொல்லித் தவிர்த்திருக்க வேண்டிய விஷயத்துக்கு ஏன் இவ்வளவு நேரத்தை நாம் இருவரும் விரயமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.    ஏற்கனவே எனக்கு எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத அடிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.  ஒரு விருந்துக்குப் போனால் கூட நிம்மதியாக இருந்து சாப்பிட்டு விட்டு வர முடியாமல் பேர் ஊர் தெரியாதவர்களெல்லாம் என்னை அசிங்கப்படுத்துகிறார்கள்.  இந்த நிலையில் தேவரீரின் பதிப்பகத்துக்கு என்னால் கெட்ட பெயர் என்கிறீர்கள்.  எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.
வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.  உயிர்மை பற்றிய ஒரு விளம்பரம் நம் இணையதளத்தின் முகப்பிலேயே இருக்கிறது.  அங்கே சென்று புத்தகங்களைக் கேட்காமல் ஒரு எழுத்தாளனான என்னிடம் வந்து புத்தகம் கிடைக்கவில்லை என்று அழுதால் நான் என்ன செய்யட்டும்?  ஏற்கனவே என்னை ஒரு மனிதனாக மதித்து நான் ஹலோ சொன்னால் மூஞ்சியைத் திருப்பிக் கொள்ளாமல் பதிலுக்கு ஹலோ சொல்லும் ஒரே எழுத்தாள நண்பர் மனுஷ்ய புத்திரன் தான்.  இப்போது நீங்கள் அதையும் கெடுக்கிறீர்கள்.  அதோடு, மனுஷ்ய புத்திரன் சொல்லும் ஒரு முக்கிய விஷயத்தை கவனியுங்கள்.  திருப்பூரிலோ, நெய்வேலியிலோ, பாண்டிச்சேரியிலோ புத்தகக் கண்காட்சி நடந்தால் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு புத்தகம் விற்கிறது.  இது போன்ற அவலமான தேசத்தை  உலகிலேயே காண முடியாது.
இனிமேல் புத்தகம் கிடைக்கவில்லை என்று எனக்கு வரும் நான்சென்ஸ் கடிதங்கள் இணையதளத்தில் இடம் பெறாது.  உயிர்மைக்கும் அவற்றை அனுப்பி வைக்கப் போவதில்லை.  மேலும், மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு முக்கிய விளக்கம்.  என் புத்தகம் கிடைக்காவிட்டால் அது பற்றி எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை.  உங்களிடம் நான் பத்தாயிரம் முறை விளக்கியபடி என் புத்தகங்கள் குறைந்த பட்சம் 50,000 பிரதிகள் விற்றால்தான் புத்தக விற்பனை பற்றியே நான் யோசிப்பேன்.  என்னைப் பொறுத்தவரை என் புத்தகங்கள் 1000 பிரதி விற்றாலும் 5000 பிரதி விற்றாலும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியாது.  50,000ஐத் தொட்டால் சொல்லியனுப்புங்கள்.  உட்கார்ந்து பேசுவோம்.
சாரு
7.1.11.
3.39 p.m.

சாருவிற்கு மீன் சப்ளையர் கிடைத்த கதை (அ) மீன் குஞ்சு உருவான கதை

ஞாநிக்கு ஒரு அஞ்ஞானியின் பதில்…
February 19th, 2012

”ஞாநிக்கு பதில் எழுதுவதாகச் சொன்னீர்களே?  ஏன் இன்னும் எழுதவில்லை?” என்று கேட்டு பல கடிதங்கள் வந்துள்ளன.  ஊர் ரெண்டு பட்டா… என்ற பழமொழி தான் ஞாபகம் வந்தது.  ஞாநி பத்து நிமிஷத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டுப் போய் விட்டார்.  அதற்கு பதில் எழுதப் புகுந்தால் நான்கு ஐந்து மணி நேரம் ஆகும் போல் இருக்கிறது.  ”சாருவுக்கும் எனக்கும் ஒரே வயது” என்றார் ஞாநி.  அது மட்டும் அல்ல; அதை நிறுவுவதற்காக ”சாருவுக்கும் பைபாஸ் ஸர்ஜரி நடந்துள்ளது; எனக்கும் ஆஞ்ஜியோ நடந்துள்ளது; இதோ இந்த வாரம் இன்னொரு ஸர்ஜரி நடக்க உள்ளது” என்று பல உதாரணங்களையும் அடுக்கினார்.   இந்த ஒரு வசைக்கு பதில் சொல்லவே பத்து பக்கங்கள் எழுத வேண்டும் போல் இருக்கிறது.    ஸர்ட்டிஃபிகேட் பிரகாரம் அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.  ஆனால்?  இந்த ஆனாலுக்குத்தான் பத்து பக்கங்கள் எழுத வேண்டும்.
சீனி கம் படம் பார்த்திருக்கிறீர்களா?  அதில் அமிதாப் பச்சன் 64 வயது இளைஞனாக வருவார்.  ஆம்; இளைஞன்.  தபுவுக்கு 34 வயது.  இரண்டு பேருக்கும் காதல்.  அமிதாப் லண்டனில் வசிப்பவர்.    தபுவின் அப்பாவிடம் தங்கள் காதலைச் சொல்லி சம்மதம் கேட்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா வருகிறார்.  தபுவின் அப்பா ஓம் பிரகாஷுக்கு அமிதாபை விட 6 வயது கம்மி.  ஆனால் அமிதாபைப் பார்த்ததும் அவர் 90 வயதான இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டதைப் போல் பேசுவார்.  என்ன ஜி, வாக்கிங் எல்லாம் போகிறீர்களா?  வயசாகிப் போச்சு… நம்ம வயசுல வாக்கிங் போயே ஆகணும்… இல்லேன்னா கொலஸ்ட்ரால், ஷுகர், ஹார்ட் ப்ராப்ளம்…  இப்போவே பாருங்க… உங்க கிட்ட பேசும் போதே மூச்சு இரைக்குது…  நீங்க என்ன விட 6 வயசு மூத்தவர்னு நீனா (தபு) சொன்னா…  ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோணும்…  இல்லேன்னா அவ்ளோதான்…  சரி, என்ன குடிக்கிறீங்க… டீ தானே?  சீனி கம்?  நான்லாம் சீனியே போட்டுக்கிறது இல்லே…  நேத்து தான் ஆஞ்ஜியோ டெஸ்ட் பண்ணினேன்…  ஒரே ஒரு இடத்துல ப்ளாக் இருக்கு… ஓவர் கொலஸ்ட்ரால்…  நீங்களும் அப்பொப்போ டெஸ்ட் பண்ணிடுங்க…  வாரீஹளா.. நாளைக்கு ஃபுல் பாடி செக்கப்புக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்…?
தபுவைப் பெண் கேட்க வந்த அமிதாபுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…  ஓம் பிரகாஷ் ஒரு சராசரி இந்தியனின் பிரதிநிதி.  ஞாநி தன் வயதையும் என் வயதையும் ஒப்பிட்டு மூச்சு வாங்க மூச்சு வாங்கப் பேசிய போது எனக்கு அச்சு அசல் ஓம் பிரகாஷ் கேரக்டரைப் பார்ப்பது போலவே இருந்தது.  சான்ஸே இல்லை.  என்ன ஒற்றுமை!!!
என்னுடைய நண்பர்கள் அத்தனை பேரும் 30 வயதைத் தாண்டாதவர்கள்.  ஒரு நண்பனோடு பெங்களூர் ஹிண்ட் பப்பில் இரவு 12 மணி வரை குடித்து விட்டு, அறைக்கு வந்து அங்கேயும் குடித்து விட்டு காலை நான்கு மணி அளவில் படுத்தேன்.  காலையில் ஏழு மணிக்கு எழுந்து எக்ஸைல் நாவலை கர்ம சிரத்தையாக எழுதிக் கொண்டிருந்தேன்.   நண்பன் 12 மணிக்கு எழுந்து வாந்தி எடுத்தான்.  நண்பனுக்கு வயது 28.  இதையும் எக்ஸைலில் எழுதி இருக்கிறேன்.  வாசகர் வட்டக் கூட்டங்களில் நான் நண்பர்களுடன் காலை நான்கு மணி வரை நடனம் ஆடுவது சர்வ சகஜம்.  இதை விடுங்கள்.  பைபாஸ் ஸர்ஜரி என்னிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக அந்த மருத்துவமனை செய்த காரியம்.  வெறும் மருந்து மூலமாகவே குறைக்கக் கூடியதாகவே இருந்தது என்று அதற்குப் பின் பல மருத்துவர்கள் அபிப்பிராயப் பட்டனர்.  தவிர, இதுவரை நான் அந்த வலி, இந்த வலி, ஜூரம் என்றெல்லாம் படுத்ததே இல்லை.  கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் படுத்திருக்கிறேன்.  நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் அவருக்கு உடல்நலம் இல்லை என்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஒரே ஒருமுறை தான் சொல்லி இருக்கிறேன்.  இது என் நண்பர்களுக்குத் தெரியும்.  என்னிடம் பணம் இல்லை.  ஆனால் இந்த ஆரோக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி.
ஆனால் இந்த ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்று நாளொரு தினமும் எழுதிக் கொண்டு வருகிறேன்.  எக்ஸைல் நாவலில் பல பக்கங்களில் இந்த விபரம் உண்டு.  இதை சிரத்தையாகப் பின்பற்றினால் நீங்களும் 90 வயதில் துள்ளிக் குதிக்கலாம்.  நம் சித்தர்கள் சொல்லிக் கொடுத்த அற்புதம் இது.
என் உடம்பு ஒன்றும் இரும்பால் செய்தது அல்ல.  ஆனால் நான் பின்பற்றும் சில வழிமுறைகளால் அப்படி இரும்பாக்கி வைத்திருக்கிறேன்.  தினமும் காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 கி.மீ. தூரத்தை 35 இலிருந்து 40 நிமிட நேரத்தில் நடந்து முடிக்கிறேன்.  நான் குடி கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன்.  ஆனால் காஃபிக்கு அப்படி ஒரு அடிமை.  காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும்.  ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்.  அர்க் தான் குடிக்கிறேன்.  அர்க் என்பது பசு மாட்டின் மூத்திரத்தை distill செய்தது.  தண்ணீர் கலக்காமல் குடித்தால் நாக்கு வெந்து விடும்.  நாற்றத்தில் குமட்டல் வந்து விடும்.  நாலரை மணிக்குக் குடிப்பேன்.  ஏழரைக்கு எழுந்து வரும் அவந்திகாவுக்கு அப்போதும் அறையில் பரவி இருக்கும் மூத்திர நாற்றம் குமட்டல் வருகிறது என்று சொன்னதால், எக்ஸாஸ்ட் ஃபேனைப் போட்டு விட்டுக் குடிக்கிறேன்.  அவந்திகாவிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்.  அதுவும் நான் என்றால் ரொம்ப ரொம்பக் கஷ்டம்.  அப்படிப்பட்ட அவளே ஒருநாள் நான் இரவில் அர்க் குடிப்பதைப் பார்த்து விட்டு “உன்னைப் போல் சகிப்புத் தன்மை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம்” என்றாள்.  அர்க் குடித்த அன்று காக்டெய்ல் சாப்பிடுவதில்லை.  சாப்பிட்டால் அர்க் வேலை செய்யாது.
அது மட்டும் அல்ல; அர்க் குடித்தால் அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.  அர்க் குடித்து விட்டு, நடக்கப் போய் விட்டால் அப்போது ஒரு தாகம் எடுக்கும் பாருங்கள்… கொடுமை.  எதற்கு இவ்வளவு பாடு?  உடம்பு இரும்பைப் போல் இருக்க வேண்டும்.  நோய் நொடி வரக் கூடாது.
இந்த அர்க் என்பது நான் செய்து வரும் ஹட யோகப் பயிற்சி முறைகளில் ஒன்றே ஒன்றுதான்.  இது போல் நூறு விஷயங்கள் இருக்கின்றன.  இன்னொரு உதாரணம், பால் கலந்த எதையும் சாப்பிடுவதில்லை.   தேநீர் என்றால், ஊட்டியிலிருந்து வரவழைத்த white tea.  இது தேயிலைச் செடியின் மொக்குகளிலிருந்து தயாரிக்கப்படுவது.  இல்லை; சரியாகச் சொன்னால், ஒரு தேயிலைச் செடி வளர்ந்து முதல் மொக்கு விடும் நிலையிலேயே எடுத்து விடுவார்கள்.   இப்படி எந்தக் காரியத்திலும் ஒரு ஹட யோகியாகவே வாழ வேண்டும்.  இதனால்தான் சில சாமியார்கள் ‘அந்த’ விஷயத்தில் பெரும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஸர்ட்டிஃபிகேட் வயது எனக்கு 59-ஆக இருக்கலாம்.  ஆனால் 25 வயது இளைஞன் கூட என்னோடு எந்த விஷயத்திலும் போட்டி போட முடியாது.  எந்த விஷயத்திலும் என்பதை அழுத்தியே சொல்கிறேன்.  உங்கள் வயது எழுபதா?  நான் சொல்லும் டிப்ஸைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஆறே மாதத்தில் 25 வயது இளைஞனாகி விடலாம்.  காலையில் இஞ்சி; மதியம் சுக்கு; இரவில் கடுக்காய்.  எப்படிச் சாப்பிட வேண்டும்?  கொஞ்சம் மரியாதையோடு கேட்டால்தான் சொல்லுவேன்.
கூட்டத்தை மதியம் இரண்டு மணிக்கு வைத்திருப்பதையும் விமர்சித்தார் ஞாநி.  எல்லோரும் உறங்கும் நேரத்தில் வைத்து விட்டதாகச் சொன்னார்.  மைக் முன்னால் பேசிக் கொண்டிருந்தவர் என் பக்கம் திரும்பி “நீங்களும் உறங்கும் நேரம் தானே இது?” என்று கேட்டார்.  நானும் தலையை ஆட்டி வைத்தேன்.  வேறு என்ன செய்வது?  நான் பகல் நேரத்தில் தூங்கியதே இல்லை.  இரவில் வெகு நேரம் கண் விழிப்பதும் இல்லை.  நாவல் எழுதிக் கொண்டிருந்தால் இந்த விதி பொருந்தாது.  இரவு பகல் எல்லா நேரமும் எழுத்துதான்.  இல்லாவிட்டால் எக்ஸைல் போன்ற ஒரு நாவலை ஐந்தாறு மாதத்தில் எழுதி முடிக்க முடியுமா?
மேலும், நான் எக்ஸைல் பற்றிப் பேசாமல் சக எழுத்தாளர்களைத் திட்டினேன் என்றார்.   இரண்டு மணி கூட்டத்துக்கு அவர் வரும் போது சுமார் நான்கு மணி இருக்கும்.  அதில் தவறு இல்லை.  கூட்டம் முடிவதற்குள் வந்து விட்டால் போதும்.  முன்னாலேயே வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் என் கூட்டத்தில் இல்லை.  அப்படிப்பட்ட சர்வாதிகாரப் போக்குகள் என் வாசகர் வட்டத்தில் கிடையாது.  ஆனால் இரண்டு மணியிலிருந்து ஒவ்வொரு நண்பரும் பேசிய பின் நானும் பேசினேன்.  அதைக் கேட்காமல் ஞாநி  எப்படிக் கருத்து சொல்ல முடியும்?  ஆனாலும் நான் எக்ஸைல் பற்றிப் பேசவில்லை.  ஆனால் நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறேன்.    காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  ஒரு பத்திரிகையில் கட்டுரை வந்து விட்டது என்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? டூ மச் என்றார் நண்பர் ஒருவர்.  ”ஒரு” பத்திரிகையில் இல்லை என்பதுதான் விஷயம்.  சென்னை, கல்கத்தா, மும்பை, தில்லி மட்டும் அல்ல; லண்டன் வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும்படி எழுத வேண்டும்.  இது எப்படி என்றால், தமிழ் சினிமாவில் யாருமே வட இந்தியா பக்கம் செல்ல முடியவில்லை.  நடிகைகள் மட்டுமே விதி விலக்கு.  ரஜினி, கமல், இளையராஜா யாராலும் முடியவில்லை.  சிவாஜியால் கூட முடியவில்லை.  முதல் முதலாக அதை உடைத்தவர்கள் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும்.  பிறகு ரஹ்மான் இந்திய எல்லையையும் தாண்டி ஹாலிவுட் சென்றார்; வென்றார்.  நான் ஏஷியன் ஏஜ் லண்டன் எடிஷனில் எழுதுவது ரஹ்மான் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பதற்கு ஒப்பாகும்.  அதனால்தான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.  அது சரி, ரஹ்மான் இறைவனுக்கு நன்றி சொன்னால் இனிக்கிறது; நான் சொன்னால் மட்டும் கசக்கிறதா?  இதில் அடங்கியுள்ள மர்மம் என்ன?  சொல்ல முடியும்…  சாதி, மதம் பேசுகிறேன் என்பார்கள் …
Love, in pixels -ஐ எழுதும் போது அது லண்டன் எடிஷனுக்கும் போகிறது என்று எனக்கு உறைக்கவில்லை.  பிறகுதான் ஞாபகம் வந்ததும் கலவரம் ஆகி விட்டது.  எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் columnists யாரையும் பிடிப்பதில்லை; வினோத் மேஹ்தாவும், குஷ்வந்த் சிங்கும் மட்டுமே விதி விலக்கு.  அவர்களை நான் தாண்ட வேண்டும்.  அதனால்தான் லோக்கல் இலக்கிய பாலிடிக்ஸ் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன்.  இறைவனின் அருளால் வினோத் மேஹ்தாவையும் சர்தாரையும் தாண்டிச் செல்வேன்.  வாசகர் வட்ட நண்பர்களின் அன்பு ஒன்று போதும்.  நேற்று போரூரிலிருந்து விரால் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் கணேஷ் அன்பு.  அவருடைய அன்பை நான் என்னவென்று சொல்வது?  இங்கே மைலாப்பூர், ஆர்.ஏ.புரம் ஏரியாவில் விரால் மீனே கிடைப்பதில்லை என்று ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அதனால்தான் போரூரிலிருந்து விரால்மீனைக் கொண்டு வந்து விட்டார்.  கணேஷ் அன்புவைப் போல் சுமார் 50 பேர் இருக்கிறார்கள்.  அவர்களின் அன்பும் இறைவனின் அருளும் என் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சக்தியை எனக்குக் கொடுக்கும்…

Thursday 25 April 2013

வெறிபிடித்த சாநி: கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்

ஆங்கிலம் பேசுவது எப்படி?

 

உங்களுடைய ‘டைம்ஸ் நௌ’ விவாதம் பற்றி வந்த கருத்துக்களில் முக்கால்வாசியும் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தெளிவாகி விட்டது என்று  தான்  இருந்தது. உங்களுக்கு அழகாகத் தெரிந்த உங்களை விட அதை நன்றாக யாருக்காவது எழுத முடியுமா என்ற அளவிற்கான ஆளுமைடன்  உலவ ஒரு மொழி விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே . அதை மட்டும் வைத்தே உலகை உலா வாருங்கள் சாரு.
நீங்கள் உலக இலக்கியங்கள் படித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இனி மேல் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு உங்களை கேவலமாக பேசுகிறார்கள். அழுகையா வருது.  என்னுடன் இருந்த பல இங்கிலீஷ் மட்டும் பேசும் சில குரங்குகள் உங்கள் பேச்சை கேட்டதும் அட்டகாசமாக சிரிக்க தொடங்கி விட்டார்கள். சிலர் கேட்டார்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. குஷ்பூ கூட எவ்வளவு அழகா சரளமா இங்கிலீஷ் பேசினாங்க. நீங்க திணறினப்போ நிஜமாகவே மூச்சு வாங்கிச்சு சாரு. நீங்கள் பேசும்போது மேடையில் உட்கார்ந்த அனைவர் முகத்திலும் ஒரு பரிகாசம் இருந்தது போல் இருந்தது. அதை அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்  என்றாலும்.
அந்த ஷோ ஞானியும் குஷ்புவும் எடுத்து சென்று விட்டார்கள்.  ஞானியின் முகத்தில் அந்த வெற்றியின் ஒரு சிரிப்பும் இருந்தது .
தயவு செய்து இந்த மாதிரி இங்கிலீஷ் கருத்தரங்கில்  பங்கேற்காதீர்கள்
நீங்கள் எழுதி உலக புகழ் அடைய வேண்டும் என்று மட்டுமே பிரார்த்திக்கும் என்னை போன்றவர்களுக்கு இது வேதனை தான் தந்தது.  மட்டுமல்ல அந்த கருத்தரங்கில் மிக சின்னதாக விவாதித்து முடிக்க கூடியஒன்றல்ல அந்த தலையங்கம். கொடுத்த நேரம் சுத்தமாகவே போதாது. மீடியாக்கள் உங்களை வேண்டுமென்றே அழைத்து அவமானப்படுத்துவதாக நான் நினைக்கிறேன் .
ஞானி என்னமோ பெருசா அவர் சொன்னது மட்டும் தான் சரியானது என்று நினைத்து பெருமித படும் காட்சி கேவலமாக இருந்தது.  உங்களின் பெயரைச்  சொல்லி உங்களுக்காகவும் அவர் பேசியது போல நடித்திருக்கிறார்.  ஐயோ எரிச்சலா இருந்தது.
தமிழ் கருத்தரங்குகளில் உங்களின் நளின மொழியில் விளையாடுங்கள் சாரு.
நட்புடன்
பாமினி
***
அன்புடன் பாமினிக்கு,
முதல் விஷயம். நடந்தது ’டைம்ஸ் நௌ’ விவாதம்  அல்ல.  அவுட்லுக் பத்திரிகையின் பதினைந்தாவது ஆண்டைக் கொண்டாடும் நிமித்தமாக அப்பத்திரிகை நடத்திய விவாத மேடை அது.  நடந்தது யாருக்கு ஆங்கிலம் சரளமாக வருகிறது என்பது  பற்றியோ ஆங்கிலப் பேச்சுப் போட்டியோ அல்ல.  யார் யார் என்னென்ன கருத்து சொல்கிறார்கள்; தமிழ்ச் சமூகத்தில் கலாச்சாரம் என்ற பெயரால் நடக்கும் அக்கிரமங்கள் என்ன என்பது பற்றிய ஒரு விவாதமேடையே அது. மேலும், அந்த விவாதம் சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது.  அதில் நான் பதினைந்து நிமிடங்களுக்குப் பேசியிருப்பேன்.  அதில் ஒன்றிரண்டு வாக்கியங்களையே தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.  ஒரு 20 நிமிட நிகழ்ச்சியில் வேறு எப்படிச் செய்ய முடியும்?
உங்கள் கடிதத்தின் முடிவில் பாமினி என்று இருந்திராவிட்டால் இந்தக் கடிதத்தைக் குப்பையில் போட்டிருப்பேன்.  நான் அடிக்கடி எழுதி வருகிறேன்.  என் நண்பர்களால்தான் எனக்குப் பிரச்சினையாகவும் மன உளைச்சலாகவும் இருக்கிறது; எதிரிகளால் அல்ல.  நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை.  நான் சொல்ல வந்தது, என்னை எதிரிகளாக நினைத்து என்னைப் படித்துப் படித்து உறக்கம் கெடுத்துக் கொள்பவர்களை.  அப்படிப்பட்டவர்களைப் பார்த்து நான் மிகவும் பரிதாபமே கொள்கிறேன்.  ஒரு அன்பர் வாரம் ஒருமுறை என்னைப் பலவாறாகத் திட்டி அவருடைய வலைப்பூவில் பதிவு போட்டு அதை எனக்கும் அனுப்பி வைக்கிறார்.  அதைக் கண்ணுறும் போதெல்லாம் எனக்கு அவர் மீது அன்பே உண்டாகிறது.  பாவம், அவருக்கு என்னைப் படிக்காமலும் இருக்க முடியவில்லை; படித்தாலும் என் மீது கட்டுக்கடங்காத கோபம் வருகிறது.  என்ன செய்வது? அவர் மீது நான் பரிதாபம் தானே கொள்ள முடியும்?  ஆனால் உங்கள் கடிதம் அப்படியல்ல.  நீங்கள் நேரில் இருந்திருந்தால், நீங்கள் ஒரு ஆணாகவும் இருந்திருந்தால் உங்கள் கன்னம் பழுத்திருக்கும்.  ஆனால், ஒரு ஆண் இப்படி எழுத வாய்ப்பில்லை.  நான் என் வாழ்நாளில் என்றுமே ஆணாதிக்கவாதியாக இருந்ததில்லை.  ஆனால் சமீப காலமாக எனக்கு வரும் மெயில்களைப் பார்க்கும் போது அப்படி ஆகி விடுவேனோ என்று அச்சமாக உள்ளது.
சில சமூகங்களில் திருமணமான கையோடு அடுத்த நாளே மணமகனை விவாக ரத்து செய்யும் பெண்கள் அதிகம் உண்டு.  காரணம் என்னவென்றால், திருமணம் ஆனவுடனேயே முதல் இரவிலேயே குதத்தில் புணர ஆரம்பித்து விடுவான்கள் அந்த நெடுநாள் ஹோமோசெக்ஸ்காரர்கள்.  மறுநாளே விவாகம் ரத்தாகி விடும்.  நீங்களும் அதே மாதிரி ஒரு காரியத்தைத்தான் செய்திருக்கிறீர்கள். ஒரு விவாதம் நடந்தால் யார் யார் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்காமல் அவன் எப்படிப் பேசினான், அவன் பேசும் போது அவன் புடுக்கு தெரிந்ததா, இல்லையா என்றெல்லாமா பார்த்துக் கொண்டிருப்பது?  எனக்கு வேறு பல சமயங்களில் ’ஸிப்’ போட மறந்து விடும்.  பெண்களிடமிருந்து மட்டும்தான் எனக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் வருகின்றன.
நான் பாட்டுக்கு என் நாவலை எழுதிக் கொண்டிருந்தேன்.  இப்போது என்னுடைய ஐந்து ஆறு மணி நேரத்தை உங்களுக்கு பதில் எழுதி செலவழிக்கப் போகிறேன்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் எனக்கு வந்த மிக ஆபாசமான கடிதம் இதுதான் என்று சொல்வேன். தமிழவன் என்ற எழுத்தாளரைப் பற்றி தர்மு சிவராமு எப்போதும் காட்டமாகவே பேசுவார்.  ஏன் அவர் மீது உங்களுக்கு அவ்வளவு கோபம் என்று ஒருமுறை அவரைக் கேட்டேன். அதற்கு தர்மு சிவராமு சொன்னார்:  “சிலருக்கு மூளை கம்மியாக இருக்கும்.  அதை சகித்துக் கொள்ளலாம்.  ஆனால் மூளைக்கு பதிலாக மலம் இருந்தால் என்ன செய்வது?” உங்கள் கடிதத்தைப் படித்த போது அந்தச் சம்பவம் ஞாபகம் வந்தது.  இப்படி எழுதுவதற்காக நீங்கள் என் மீது கோபப் படுவீர்கள்.  இனிமேல் என் எழுத்தைப் படிக்காமல் கூட போகலாம்.  பரவாயில்லை.  இப்படிப்பட்ட முழு மூடர்கள் என் எழுத்தைப் படிப்பதும் ஒன்றுதான்; படிக்காமல் இருப்பதும் ஒன்றுதான்.
நீங்கள் என் அருமை நண்பன் ஜெயமோகனின் உளவாளியோ என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது.  கடிதத்தின் இடையிடையே என்னைப் பாராட்டி சீராட்டி குதத்தில் குச்சியை சொருகுகிறீர்கள்.  எனக்கு தினந்தோறும் வரும் ஆபாசக் கடிதங்கள் கூட இதே ஸ்டைலில்தான் வரும்.  மை டியர் சாரு, நான் உங்களுடைய தீவிர ரசிகன் என்று தொடங்கும்.  பெயர் வேறு ஆஷா, நிஷா என்று ஆரம்பத்திலேயே தெரியும்.  ரொம்ப ஜாலியாகப் படிக்க ஆரம்பிப்பேன்.  ஆனால் ’உங்கள் தீவிர ரசிகன்’ எல்லாம் ஒரே வாக்கியம்தான்.  அடுத்த வார்த்தையே டேய் ங்கோத்தா என்று ஆரம்பித்து விடும்.  ஆனால் நான் என்ன ஜென்மமோ, எனக்குக் கோபமே வராது.  அதே டெக்னிக்கைத்தான் நீங்களும் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.  ஒரு வரி பாராட்டு; அடுத்த வரி ங்கொம்மா கங்கோத்தா… ஆனால் உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. எனக்கு உங்கள் கடிதத்தைப் பார்த்து மிகவும் கோபம் வருகிறது.  ஏனென்றால், எனக்கு தினமும் வருவது வெறும் வசை கடிதம்.  அதில் ஆபாசம் தெரிவதில்லை.  ஆனால் உங்கள் கடிதம் என் எழுத்தையும் எழுத்து இயக்கத்தையும் அவமதிக்கிறது. அது மட்டுமல்ல; எல்லா தமிழ் எழுத்தாளர்களையும் உங்கள் கடிதம் அவமதிக்கிறது.  Fetish வகை நீலப்படங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்; அல்லது கேள்வியாவது பட்டிருக்கலாம்.  ஒருத்தனைப் படுக்க வைத்து அவன் முகத்தில் ஸ்கர்ட்டைத் தூக்கி மூத்திரம் போவது.  அதே காரியத்தைத்தான் நீங்கள் என் மீது செய்திருக்கிறீர்கள்.  காதலி என்றால் – அதுவும் மிகத் தீவிரமான காமக் களியாட்டத்தின் போது – அது ஜாலியாக இருக்கும்.  ஆனால் இப்படி முச்சந்தியில் வைத்து செய்திருக்கிறீர்களே; சும்மா விடலாமா?
நீங்கள் சொல்வது போல் விரல்நுனியில் வைத்திருக்கும் என் மொழியை வைத்துக் கொண்டு ஒரு மயிரும் புடுங்க முடியாது.  பாரதியாலேயே புடுங்க முடியவில்லை.  நான் எம்மாத்திரம்?  தர்மு சிவராமுவும் நகுலனும் ப. சிங்காரமும் எல்லாம் தமிழிலேயே எழுதி தமிழ்நாட்டிலேயே வலம் வந்து கொண்டிருந்ததால்தான் வெறும் நூறு பேர் மட்டுமே படிக்கக் கூடிய ஆட்களாக ஆகி இருக்கிறான்கள்.  அவன்களைப் போல் நான் அனாதையாக சாக முடியாது.
என்னது, என் மொழியை வைத்துக் கொண்டு உலகை உலா வருவதா? கக்கூஸ் இருக்கிறது பாருங்கள் கக்கூஸ், அந்த கக்கூஸைக் கூட என் மொழியை வைத்துக் கொண்டு உலா வர முடியாது.  கக்கூஸில் மூத்திரம் போவதற்குக் கூட ஒரு ரூபாய் வேண்டும்.  என் மொழி எனக்கு அந்த ஒரு ரூபாயைக் கூடத் தருவதில்லை.  அப்படி இருக்கும் போது நான் எப்படி உலகை உலா வருவது?  சமீபத்தில் ஒரு கட்டுரை எழுத 70,000 ரூ. செலவாயிற்று.  சில கள ஆய்வுகளுக்காக.  அந்தக் கட்டுரைக்கு கலா கௌமுதியிலிருந்து 700 ரூ. வந்தது.  700 எங்கே, 70000 எங்கே?  உயிர்மையில் அதுவும் கிடையாது.  ஃப்ரீ.  வேசியிடம் கூட யாரும் ஃப்ரீயாக ஓக்க முடியாது.  ஆனால் தமிழில் எழுதினால் ஃப்ரீ ஓல்.  காரணம், உயிர்மை மட்டும் அல்ல; இங்கே தமிழில் நடத்தப்படும் இலக்கியப் பத்திரிகைகள் அனைத்தும் நஷ்டத்தில் நடத்தப்படுகின்றன.  அந்த நஷ்டத்தில் நானும் பங்கேற்கிறேன்.  ஏனென்றால் இது ஒரு தவம்.  அல்லது, ஒரு சமூகப் புரட்சி.  அல்லது, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் காரியம்.  பெரியார் சொன்னாரே, தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று.  அப்படி ஆகி விடாமல் தமிழை சமகால மொழியாக வைத்திருப்பது ஸ்டைலாக ஆங்கிலம் பேசத் தெரியாத எங்களைப் போன்ற எழுத்தாளர்கள்தான்;  பல்கலைக்கழகங்களோ, வேறு நிறுவனங்களோ அல்ல.  இந்த நிலையில் என் எழுத்தை வைத்துக் கொண்டு உலகை உலா வருவது சாத்தியமில்லை.
எப்படி உலா வர முடியும் பாமினி?  நானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அரபிக் கடலைத் தாண்டி வெளியே போகலாம் என்று பார்க்கிறேன்.  முடியவில்லையே?  70,000 ரூ. செலவு செய்து 700 ரூ. சன்மானம் பெற்றால் நான் எந்த ஜென்மத்தில் சிலே செல்வது?  மரியோ பர்கஸ் யோசா எழுதியிருக்கும் நாவல்களை நான் கரைத்துக் குடித்திருக்கிறேன்.  பெரூ பற்றி எனக்குத் தெரிந்த அளவுக்கு பெரூவில் தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களுக்குக் கூட தெரியுமா என்று தெரியவில்லை.  போர்ஹெஸின் தெ வே டு அல் முத்தாஸிம் என்ற கதையில் திருச்சி பாலக்கரையில் ஒரு முஸ்லீம் சிறுநீர் கழிப்பதற்காக சிறிய செங்கல்லைத் தேடினான் என்று எழுதுவார்.  உத்தரப் பிரதேசத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகையிலும், தில்லியில் டைம்ஸ் என்ற பத்திரிகையிலும் என்று எழுதுவார்.  உத்தரப் பிரதேசத்தில் ஆங்கிலம் கிடையாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது.  செங்கல் தேடுவது எதற்கு என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.  போர்ஹெஸுக்குத் தெரிந்திருந்தது. ரொம்பத் திமிர் பிடித்து எழுதுகிறேன் என்று பலர் நினைத்தாலும் பரவாயில்லை; போர்ஹெஸ் எப்படி உலகத்தைச் சுற்றாமல் இத்தனையும் தெரிந்து கொண்டிருந்தாரோ, அப்படியே தென்னமெரிக்கா பற்றி மணிக் கணக்கில், நாள் கணக்கில் என்னால் சொல்ல முடியும்.  லிமாவின் ஒவ்வொரு தெருப் பெயரும் தெரியும்.  லா பாஸின் ஒவ்வொரு ஏற்ற இறக்கமும் தெரியும்.  அப்படிப் படித்திருக்கிறேன்.  என் ரத்தத்திலும் உணர்விலும் ஏறி இருக்கிறது தென்னமெரிக்கா. ஆனால் என் ஆயுளில் அங்கேயெல்லாம் செல்ல முடியுமா என்று தெரியவில்லை.  ஒரு மனிதன் 25 வயதிலிருந்து 56 வயது வரை தன்னுடைய தாய்நாட்டைப் பிரிந்து வாழ்ந்தால் அவனுடைய மன உணர்வு எப்படி இருக்கும்? அதே உணர்வில்தான் நான் இருக்கிறேன்.   தென்னமெரிக்கா செல்லாவிட்டால் என் கட்டை கூட வேகாது என்று அவந்திகாவிடம் அடிக்கடி சொல்வது என் வழக்கம். இந்த நிலையில் நீங்கள் என் மொழியை வைத்துக் கொண்டு உலகை உலா வரச் சொல்கிறீர்கள்.  அந்தக் கொழுப்புதான் என்னைப் பதற்றம் கொள்ளச் செய்கிறது.  கொழுப்பு என்ற வார்த்தைக்கும் முன்னே இரண்டு எழுத்து வசைச் சொல்லை டைப் செய்து விட்டு நீக்கி விட்டேன்.
என் எழுத்தை வைத்துக் கொண்டு என்னால் மயிரைக் கூட பிடுங்க முடியாது.  காமராஜர் அரங்கத்துக்கு 40,000 ரூ. வாடகை.  என் நண்பர்கள் இருவரிம் ஆளுக்கு 10,000 மீதி 20,000 ஒருமாத வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த பணம்.  கேட்டதும் ஹமீது ஆடிப் போய் விட்டார்.  வெறும் ஃபில்ம் சேம்பரில் நடத்தலாம்.  நூறு பேரை நான்கு மணி நேரம் நிற்க வைக்க வேண்டியிருக்கிறது.  300 பேர் இடம் இல்லாமல் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.  அதனால்தான் இவ்வளவு செலவு செய்து காமராஜர் அரங்கம்.  இந்த நிலையில் உலகை உலா வரச் சொல்கிறீர்கள்.  உங்களைப் போன்ற ஆட்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.
”நீங்கள் உலக இலக்கியங்கள் படித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இனி மேல் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு உங்களை கேவலமாக பேசுகிறார்கள். அழுகையா வருது.” நான் கடவுள் படத்தில் அகோரி ஆர்யா அந்த முட்டாள் பெண்ணை கம்பால் அடித்தானா? நான் உங்களை என் காலில் கிடப்பதைத்தான் எடுத்து அடிக்க வேண்டும்.  வேறு எப்படியும் எனக்கு எழுதத் தெரியவில்லை.  இதுவரை நான் 40 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் ஒரு புத்தகத்தைப் படித்திருந்தால் கூட என் வாசிப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  நீங்கள் படிக்கவில்லை; அல்லது, உங்களுடைய shithead-இல் ஏறவில்லை.  ”ஊரிலேயே மிக அழகான பெண்” என்பது என் மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு. உலகின் மிகச் சிறந்த கதைகளை அதில் நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அத்தனை நூல்களையும் விட அந்த மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கும்.  இதை நான் சவாலாகச் சொல்கிறேன்.  ஏனென்றால், ஸ்பானிஷ் மற்றும் அரபி மொழிகளை இந்த மொழிபெயர்ப்புக்காகவே கற்றுக் கொண்டேன்.  ஸ்பானிஷை தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போல் என்னால் ஸ்பானிஷை உச்சரிக்க முடியும்.  நெரூதாவை நான் ஸ்பானிஷில்தான் வாசிக்கிறேன்.  அதை விடுங்கள்.  எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது.  ஆனாலும் அருந்ததி ராயின் காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸில் உள்ள அபத்தமான இலக்கணப் பிழைகளை என்னால் சுட்டிக் காட்ட முடியும்.  இது பற்றி இந்தியாவில் யாருமே பேசவில்லை.  நான் மட்டுமே அந்த நாவல் ஒரு சராசரியானது என்றும், அபத்தமான இலக்கணப் பிழைகள் மிகுந்தது என்றும் சொல்லி வருகிறேன்.  அது மட்டுமல்ல; சல்மான் ருஷ்டியின் ஆங்கிலம்தான் இந்திய எழுத்தாளர்களின் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பானது என்றும் விரிவாக எழுதியிருக்கிறேன்.  அதையெல்லாம் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. அல்லது, படித்திருந்தாலும் உங்கள் மரமண்டையில் ஏறவில்லை என்று தெரிகிறது.  என் மொழிபெயர்ப்பாளர்கள் ஜெனிஃபர், ராஜேஷ் இருவருக்குமே என்னை சரியாக மொழிபெயர்க்க முடியவில்லை; அவர்களுடைய ஆங்கிலம் மிகச் சாதாரணமாக இருக்கிறது என்றும் எழுதியிருந்தேன்.  ராஜேஷ் ஒப்புக் கொள்கிறார். ஜெனிஃபர் அவரை நான் மட்டம் தட்டி விட்டதாக வருத்தப் படுகிறார்.  உண்மையைச் சொன்னதற்காக ஜெனிஃபர் எனக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்?  யாராவது இப்படி என்னைப் போல் உண்மையைச் சொல்வார்களா? ஆஹா, ஓஹோ என்று ஐஸ் அல்லவா வைத்துக் காரியம் சாதித்துக் கொள்வார்கள்? ஆனால் இவர்கள் மொழிபெயர்ப்பது எனக்குப் போதும்.  ஏனென்றால், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்காக மட்டுமே அவர்களின் மொழிபெயர்ப்பு எனக்கு உதவுகிறது.  ஆனால் இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்தார்களானால் ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரிக்கலாம்; அது முடியாமல் போகிறது என்பது மட்டுமே என் ஆதங்கம்.  இப்போதெல்லாம் நானே ஆங்கிலத்தில் எழுதி கேரளப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறேன்.
சரி, தில்லியில் நடந்த அல்மோஸ்ட் ஐலண்ட் கருத்தரங்கில் நான் கலந்து கொண்டது பற்றி மிக நீளமாக எழுதியிருந்தேன்.  அதையாவது படித்தீர்களா? அல்லது, அதுவும் உங்கள் மண்டையில் ஏறவில்லையா?  என்ன எழுதியிருந்தேன்?  அந்த சர்வதேச எழுத்தாளர் கூட்டத்தில் ஜாய் கோஸ்வாமியையும் என்னையும் தான் மிகச் சிறப்பாகப் பாராட்டினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.  மற்றவர்கள் அனைவரும் அறிஞர்களைப் போல் பேசிய போது நாங்கள் இருவர் மட்டுமே எழுத்தாளர்களைப் போல் பேசினோம்.  சரி, இதை நான் சொன்னால் பொய் என்பீர்கள்.  வாணி கபில்தேவ் கரீபியன் ரெவ்யூ என்ற உலகப் புகழ் பெற்ற பத்திரிகையிலேயே எழுதியிருக்கிறாரே? அதுவும் உங்கள் மண்டையில் ஏறவில்லையா? இன்னொரு முறையும் அதை நான் மேற்கோள் காட்டுகிறேன்.
”There was the concern for another species of telling in Charu Nivedita, the wickedly inventive Tamil writer whose blend of classical and slang styles would be the despair of any translator who could not channel the spirits of Joyce, Nabokov, and Jean Genet. Charu’s speech ranged from “the time of screaming and howls of two thousand five hundred years ago, of Medea” that “still exists” (massacres are not unknown to him) to poker-faced tall tales of his vagabondage that might or might not have documentary value in addition to their truth of shock — “Your job is called ‘catamite’ . . . Going to bed with a person you don’t love is the greatest tragedy, I realised. So I quit the job” — and pieces of work-based advice, for example that eating oxtail soup desensitises the body against beatings.”
வாணி கபில்தேவ் ட்ரினிடாடைச் சேர்ந்தவர்.  இந்தியாவுக்கே அப்போதுதான் முதல்முறையாக வந்தார்.  என் பேச்சைப் பற்றியே அவர் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கவும்.  வாணி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியை; சர்வதேச அளவில் பிரபலமான ஆங்கிலக் கவிஞர்.
அந்தக் கருத்தரங்கை நடத்திய ஷர்மிஸ்தா மொஹந்தி (இவர் ஒரு ஆங்கில நாவலாசிரியை; கவிஞர்) நான் பேசியதைப் பார்த்து விட்டு “உங்கள் ஆங்கிலம் மிகச் சிறப்பாக இருக்கிறது; நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதக் கூடாது” என்று கேட்டார்.  ”எனக்கு அந்த மொழியின் அடிப்படை இலக்கணம் தெரியாதே” என்றேன். என் பேச்சைக் கேட்ட ஸ்லோவேனிய எழுத்தாளர் Tomas Salamun ”உங்கள் நாவல்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் அங்கே உங்களைக் கொண்டாடுவார்கள்” என்று என்னிடம் சொன்னார்.  போகட்டும்.
எனக்கு இது போன்ற சர்வதேச எழுத்தாளர்களின் அங்கீகாரம் போதும்; உங்களையும், உங்கள் நண்பர்களையும் போன்ற மூடர்களின் அங்கீகாரம் தேவையில்லை.
”என்னுடன் இருந்த இங்கிலீஷ் மட்டும் பேசும் சில குரங்குகள் உங்கள் பேச்சைக் கேட்டதும் அட்டகாசமாக சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். சிலர் கேட்டார்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று.” உங்களுடன் இருந்த குரங்குகளை இங்கே தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி இங்கே உள்ள தமிழ் எழுத்தாளர்களின் மூத்திரத்தை வாங்கிக் குடிக்கச் சொல்லுங்கள்.  அப்போதாவது அந்த மூடர்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.  நான் ஒரு ஜென் முனி.  “அங்கே இலை அசைகிறதா; காற்று அசைகிறதா?” என்று நான் கேட்டால் அந்தக் கேள்வியின் அர்த்தம் தெரிந்தவர்கள் மட்டுமே என் பக்கத்தில் வர முடியும்.  மற்ற நாய் குரங்கு பன்றிகளுக்கு என்னிடம் வேலை இல்லை.  உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை. நான் அந்த மேடையில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலம் சம்பந்தப்பட்டதல்ல; கலாச்சாரம், ஃபாஸிஸம் என்ற இரண்டு கருதுகோள்கள் தொடர்பானவை.
குஷ்பூ பேசியதன் பெயர் பேச்சா? வேண்டாம். குஷ்பூவுக்கும் எனக்கும் சண்டை மூட்டி விடாதீர்கள்.  அது போல் இங்கே சென்னை கான்வெண்ட் பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள் அத்தனை பேரும் பேசுவார்கள்.  ஆனால் அவர்களுக்குத் தெரிந்த பெயர்கள் விஜய், ஆர்யா, சூர்யா.  அவ்வளவு கலாச்சார சுரணை கொண்டவர்களோடு என்னை ஒப்பிட்டு… உண்மையில் என் முகத்தில் நீங்கள் மூத்திரம்தான் அடிக்கிறீர்கள். உங்கள் கடிதம் தரும் அருவருப்பும் ஆபாசமும் என்னால் தாங்க முடியவில்லை.
” இனிமேல் இது போன்ற ஆங்கிலக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வேண்டாம்” என்ற உங்களுடைய அறிவுரைக்கும் நன்றி. உங்கள் அறிவுரையை எல்லாம் கேட்டு நடந்தால் இங்கேயே கைமுட்டி அடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.  தமிழ்நாட்டைப் பற்றிய எந்தக் கட்டுரையாக இருந்தாலும் அவுட்லுக் மற்றும் தெஹல்கா பத்திரிகைகளில் என்னையும் சோவையும் தான் கருத்து கேட்கிறார்கள்.  சோவுக்கே ஆச்சரியம்;  நாம் 35 ஆண்டுகளாக அரசியல் விமர்சகனாக இருக்கிறோம்; இந்தச் சிறு பையன் எங்கிருந்து வந்தான் என்று. ”நான் சிறு பையன் அல்ல; நானுமே 35 ஆண்டுகளாக எழுதி வருபவன்தான்; வயது 56” என்று அவர் நண்பரிடம் சொல்லி அனுப்பினேன்.
மேலும், உங்களுக்கு ஒரு தகவல்.  நான் தமிழ் மேடைகளில் கூட இப்படித்தான் தத்துபித்து என்று பேசுவேன்.  உங்களுக்கு நல்ல மேடைத் தமிழ் கேட்க வேண்டுமென்றால் நெல்லை கண்ணன் பேச்சைக் கேளுங்கள்.  ஆங்கில மேடைக்கு வைகோவின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டுப் பயன்பெறுங்கள்.  இலக்கியவாதிகளை விட்டு விடுங்கள்.
இன்னொரு விஷயம். கூடிய விரைவில் ஒரு ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச இலக்கியம் பற்றி உரையாற்றுவேன்.  அதையும் கேட்டு உங்கள் தோழிகள் கேலி செய்து உங்களை அழ வைக்கட்டும்.
(தொடரும்)
12.10.2010.
5.14 p.m.

 

சாநிக்கு ரிவிட் அடிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் (1)

செந்தில், ராயர் கஃபே, சோமன்...
அன்புள்ள சாருவிற்கு பிரியங்களுடன் செந்தில் எழுதுவது .
நலம் . நீங்கள் அனுப்பிய குரியர் கிடைத்தது . சில நாட்களாக அதனை டைப் செய்ய முயற்சித்து வருகிறேன் . தமிழில் டைப் செய்வது கொஞ்சம் கடினமாக உள்ளது . இருந்தாலும் நானே டைப் செய்வது எனக்கு சந்தோஷம் என்பதால் நானே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

ராஸ லீலாவை இணையதளத்தில் படித்திருந்தாலும் புத்தகமாகப் படிக்கும்போதுதான் திருப்தியாக உள்ளது . அதை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம் . எத்தனை முறை படித்தாலும் புதுமையாக இருக்கிறது . பெருமாளை நினைத்தால் பொறாமைதான் ஏற்படுகிறது . நீங்கள் மிகவும் பொல்லாதவர் . குறும்பு மிக அதிகம் . பெருமாள் மேட்டூர் சென்றபோது மீன் சாப்பிடுகிறான் . மீனின் பெயர் rogue. மற்றுமொரு மீன் சங்கரா. இரண்டாவது மீன் மிகவும் அமைதியானது. முதல் மீன் கொஞ்சம் பிரச்சினையானது.

இங்குதான் பெருமாள் ஒரு வார்த்தை சொல்லுவான் -
மீனுக்குப் பெயர் மாற்றி வைத்துவிட்டார்கள் என்று. இந்தக் குறும்பு சாருவிற்கு மட்டுமே உரித்தானது.
அரசு அலுவலகங்களைப் போன்ற கொடுமையான இடங்களை வேறு எங்குமே பார்க்க முடியாது. மக்களுக்காகப் பணி புரியும் அரசாங்கத்தின் ஊழியர்களுக்கு ஒரு நல்ல கக்கூஸ் கிடையாது. இப்படிப் பட்ட இடத்தில் வேலை செய்பவன் எப்படிப் பொதுமக்களிடம் சிரித்த முகத்தோடு பேசுவான்? இந்தப் பகுதியையும், பெருமாள் இந்தியப் பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதியின் பேச்சுக்களைப் பற்றி நினைவு கூர்வதையும் சேர்த்துப் படித்தால் இந்திய நாட்டின் அவல நிலை புரியும்.
உங்களைப் படித்துப் படித்து நானும் உங்களைப் போலவே யோசிக்கிறேன் என்று நினைக்கிறேன். சமீபத்தில் ஆபீஸ் வேலையாக தாம்பரம் அருகில் உள்ள MEPZ -க்குச் சென்றிருந்தேன் . அங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களைப் பார்த்த போது அவர்களின் கழுத்துக்குக் கீழ்ப்பகுதி வற்றிப் போய் இருந்ததை பார்த்து அதிர்ந்தேன் . பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய BPO நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் டீ ஷர்ட் அணிந்தால் , அதனை நேருக்கு நேர் நின்று பார்த்தால் இதயம் இரண்டு துடிப்பையாவது இழந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. பெருமாள் ஒரு துணிக்கடையைப் பற்றிச் சொல்லுவான் . இதேபோல்தான் மிகப் பெரிய மருத்துவமனைகள் மற்றும் உங்கள் வீட்டுக் கோடியில் இருக்கும் நர்சிங் ஹோம் நிலையும் . எப்போதாவது நீங்கள் தியாகராய நகரில் உள்ள பாத்திரக்கடைக்கு சென்றாலும் இதே அதிர்ச்சிதான்.

தசாவதாரம் படம் பார்த்தேன். ஒன்று புரிந்தது. கமலுக்கு உழைக்கப் பிடிக்கும். இதில் கே.எஸ். ரவிக்குமார் தேவை எதற்கென்றால் கமல் மேக்கப்பில் இருந்தால் யார் ஷாட் வைப்பது ? American President என்று ஒரு படம். அதில் Michael Douglus பின்னியிருப்பார். 13 days என்று ஒரு படம்.

அதில் பாருங்கள், கென்னடியின் பாத்திரப்படைப்பை. தசாவதாரத்தில் புஷ் எதற்கு ? முகமூடி இருந்தது, ஒட்டிவிட்டார்கள். மை மத காம ராசன் தசாவதாரத்தை விட எவ்வளவோ மேல்.
ராஸ லீலா பற்றி நிறைய எழுதுவேன்.
செந்தில்
சென்னை.
------------------------------------------------
செந்திலுக்கு ஒரு வேண்டுகோள்.
கோபித்துக் கொள்ளாமல் தயவு செய்து நான் அனுப்பிய குரியரை எனக்கே மீண்டும் அனுப்பி வைக்கவும். எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் புரிகிறது. ஆனால் அதை அனுப்பி விட்டு நான் படுகிற பாடு எனக்குத்தான் தெரியும். நான் அந்தப் பக்கங்களை ஸெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டுதான் அனுப்பினேன். ஆனால் அந்த ஸெராக்ஸ் பக்கங்களை என்னுடைய புத்தகக் கிடங்குகளுக்குள் மீண்டும் தேடு தேடு என்று தேடிய போது கிடைக்கவில்லை. ஏனென்றால், செந்திலுக்கு அனுப்பிய குரியர் அவருக்குக் கிடைக்க நான்கு தினங்கள் ஆகி விட்டது. இதற்குள் குரியர் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் நடந்த நடை இருக்கிறதே, அது ஒரு கொடுமை. தொலைந்து போன ஸெராக்ஸ் பிரதிகளைத் தேடி வேறு தினமும் சுமார் அரை மணி நேரம் போய் விடுகிறது. இன்னும் அந்தக் காகிதங்கள் கிடைக்கவில்லை.

செந்திலுக்கு அனுப்பி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. அது சம்பந்தமான கவலைகளும் மன உளைச்சல்களும் வேறு என்னைப் பிய்த்துத் தின்று கொண்டிருக்கிறது. எனக்கு எத்தனையோ ஒத்தாசைகள் செய்தவர் செந்தில். அவருக்கும் தினசரி போன் போட்டு விசாரிப்புகள். “என் மனைவி இன்று அப்பக்கங்களை டைப் செய்வதற்காக DTP கொண்டு சென்றாள்; அங்கே மின்சாரம் இல்லை; இரண்டு மணி நேரம் காத்திருந்து விட்டு வந்து விட்டாள் ” என்று அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு அழுகையே வந்து விட்டது. நேற்று கூட என் புத்தகக் கிடங்கில் ஒரு மணி நேரம் தேடிப் பார்த்து விட்டு செந்திலுக்கு போன் போட்டேன்.

”தினமும் (இரவு) பனிரண்டு மணிக்கு வீட்டுக்குப் போய் (காலை) ஏழு மணிக்கெல்லாம் ஆபீஸ் கிளம்பி விடுகிறேன் சாரு; இதற்கிடையில் ஆபீஸ் டூர் வேறு; இன்றுதான் திரும்பினேன். இந்த ஞாயிறு எப்பாடுபட்டாவது நானே உட்கார்ந்து டைப் செய்யலாம் என்று இருக்கிறேன் ” என்றார். அவர் சொன்ன சோகக் கதையில் நான் எதற்காக அவருக்கு போன் போட்டேனோ அந்த விஷயத்தையே மறந்து விட்டு போனை வைத்து விட்டேன்.

நான் அவருக்கு சொல்ல நினைத்தது என்னவென்றால், ‘ நான் ஒரு நாளைக்கு நான்கு கட்டுரைகளை டைப் செய்து பதிவேற்றம் செய்கிறவன். எனக்கு இப்படி இரண்டு வாரம், நான்கு வாரம் எல்லாம் ஒத்து வராது; தயவு செய்து அந்தக் காகிதங்களை எனக்கே திருப்பி குரியரில் அனுப்பி வைத்தீர்களானால் மிக்க உதவியாக இருக்கும் ’ என்பதுதான்.
இந்தப் பிரச்சினையால் என்னுடைய நான்கு மணி நேரத் தூக்கம் கூட பிரச்சினையாகி விட்டது. ‘டேய் முட்டாப் பயலே; இதற்காக நீ இதோடு ஒரு ஏழெட்டு மணி நேரம் செலவழித்திருப்பாய் அல்லவா, இப்படி லோல் படுவதற்கு அதை நீயே டைப் செய்திருக்கலாமே? ’ என்று நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைத் தொந்தரவு செய்து எழுப்பி விட்டு விடும் என்னுடைய அந்த ரௌடி மனசாட்சி.

இதற்கிடையில் அமெரிக்காவிலிருந்து ஜெயந்தி எனக்குத் தேவையான விஷயங்களை டைப் செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். வீட்டுக்கே வந்து விட்டார் ஒரு கர்னாடக இசைக் கலைஞர் என்று எழுதியிருந்தேன் அல்லவா? அவர் பெயர் சோம சுந்தரம். சுருக்கமாக சோமன் என்று அழைப்பேன். சோமன் என்ற பெயரில் ஒரு ‘கிக் ’ இருக்கிறது. (சோம பானம்) அவர் என்ன செய்தார் தெரியுமா?

எனக்கு டைப் செய்து கொடுப்பதற்காக, மந்தைவெளி தெருவில் ஒரு வாடகை அறை எடுத்திருக்கிறார். ப்ரிட்டிஷ் கவுன்ஸில் நூலகத்தில் பொருட்களை ஏலம் விட்ட போது கணிப்பொறி, ஸ்கேனர் இன்ன பிற தளவாடங்களை வாங்கினார். எல்லாவற்றையும் அந்த அறையில் போட்டார். என்னையும் அழைத்துச் சென்று காண்பித்தார். இப்போது கணிப்பொறியை வைத்து டைப் செய்ய ஒரு மேஜையும், நாற்காலியும் வாங்க வேண்டும்.
அதற்கடுத்து, ஒரு முக்கியமான வேலையைச் செய்ய இருக்கிறார் சோமன். தட்டச்சு செய்வதற்காக சம்பளம் கொடுத்து ஒரு வேலையில்லாத இளைஞனைத் தேடப் போகிறார். அதுவும் அவன் எப்படி இருக்க வேண்டும்? “குடுங்க சார்; நீங்க குடுத்ததையெல்லாம் டைப் செய்து முடித்து விட்டேன்; சீக்கிரம் குடுங்க சார் ” என்று என்னை நச்சரிப்பவனாக இருக்க வேண்டுமாம்.

நான் சோமனிடம் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஏன் இளைஞன்; இளைஞியாகப் பாருங்கள் என்று. சே, உடனே தப்பர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். இளைஞன் என்றால் தம் அடிக்கப் போய் விடுவான்; நேற்று அடித்த ஓல்ட் மாங்க்கின் மப்பு அடங்கவில்லை என்று லீவு போட்டு விடுவான்.
நான் ஏதோ தமாஷுக்குச் சொல்வதாக நினைப்பீர்கள். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். எனக்கு ஸ்ரீபதி ஸ்ரீபதி என்று ஒரு நண்பர். பார்க்க அந்நியன் விக்ரம் மாதிரி இருப்பார். அதே மாதிரி உயரம், நிறம், சுருள் சுருளான நீண்ட தலைமுடி. அவர் தனக்கொரு வேலை வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் உடனே என் நண்பர் ஒருவரிடம் சொல்லி அவருக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணினேன்.

நண்பர் ஒரு தினசரியின் முதலாளி. ஆனால் நண்பரிடம் சொல்லி விட்டேன். “இதோ பாருங்கள்; நான் அனுப்பும் ஆள் தீவிரமான சிறு பத்திரிகை பார்ட்டி. எனவே ஏதாவது பிரச்சினை என்றால் என்னை நீங்கள் குறை சொல்லக் கூடாது. ” ஏனென்றால், சிறு பத்திரிகை பார்ட்டிகளுக்கு அவரிடம் சொல்லி வேலை வாங்கிக் கொடுத்ததில் ஏற்கனவே அவருக்கு மிகக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
நண்பரின் தினசரியில் ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப் பட்டதால் அவரும் ஓகே சொல்லி விட்டார். ஆனால் நான் மட்டும் திரும்பத் திரும்ப முன்பு சொன்ன எச்சரிக்கையை நினைவுறுத்திக் கொண்டே இருந்தேன். நண்பர் ” பரவாயில்லை; சமாளித்துக் கொள்ளலாம்; ஆனால் ஒரே ஒரு நிபந்தனை; நீ அவரை நம்முடைய சபைக்கு அழைத்து வந்து விடக் கூடாது ” என்றார். நானும் “எனக்கு ஏனய்யா வம்பு? ” என்று சொல்லி வாளாவிருந்து விட்டேன்.

ஸ்ரீபதி என் நண்பரின் அலுவலகத்திற்குச் சென்றார். வேலை நேரம், மதியம் இரண்டிலிருந்து நான்கு. அதாவது, மொழிபெயர்க்க வேண்டியது ஒன்றிரண்டு பத்திகள் மட்டுமே இருக்கும். அதை முடித்துக் கொடுத்து விட்டுக் கிளம்பி விடலாம். சமயங்களில் வேலை அரை மணி நேரத்தில் கூட முடிந்து விடும். சமயங்களில் ஒரு மணி நேரம் ஆகும். அவ்வளவுதான் வேலை. சம்பளம், முதல் மாதம் 5000 ரூ. இரண்டாவது மாதத்திலிருந்து 10,000 ரூ.
ஸ்ரீபதி வேலையில் சேர்ந்து ஓரிரண்டு தினங்கள் சென்று அவரிடம் “அலுவலகச் சூழல் எப்படி? ” என்று வினவினேன். “ஆகா, பிரமாதம். எல்லோரும் நட்புடன் பழகுகிறார்கள் ” என்றார். ஆனால் நான் ஸ்ரீபதிக்கு போன் போட்டால் “ஸ்ரீபதி என்று இங்கே யாரும் இல்லையே? ” என்றுதான் பதில் வரும். பிறகு நான் அடையாளம் எல்லாம் சொன்ன பிறகு “ஓ, அந்நியனா? ” என்று கேட்டு விட்டுக் கொடுப்பார்கள். அலுவலகத்தில் எல்லோரும் – முதலாளி உட்பட – அவர் முகத்துக்கெதிரே சார் என்றும், மற்றபடி அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது அந்நியன் என்றும் சொல்கின்றனர் என்று அறிந்து கொண்டேன்.

ஒருநாள் ஸ்ரீபதியிடம் “முதலாளி எப்படி? ” என்று கேட்டேன். “அவர் மனிதரே இல்லை; தெய்வம் ” என்றார். ‘ அப்படியா? ’ என்று கேட்டு விட்டு என் நண்பரிடம் அதைச் சொன்னேன். அது வேறொன்றுமில்லை. வேலையில் சேர்ந்த மறுநாளே என் நண்பரைச் சந்தித்து “கொஞ்சம் பணக் கஷ்டம் ” என்று தலையைச் சொறிந்திருக்கிறார் ஸ்ரீபதி. நண்பர் உடனே எதையும் யோசிக்காமல் 3000 ரூபாயை எடுத்துக் கொடுத்து ‘ முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள் ’ என்று சொல்லியிருக்கிறார்.
அடுத்த வாரம் போன் செய்தால் அந்நியன் ஆபீசுக்கு வரவில்லை என்றார்கள். அந்நியனையோ கைத்தொலைபேசியில் பிடிக்கவே முடியவில்லை. அந்த மாதத்தில் மட்டும் அந்நியன் ஆபீஸுக்குப் போனது பத்து நாட்களே இருக்கும் என்று தெரிந்து கொண்டேன்.

ஒருவாறாக ஆளை அமுக்கி “என்ன விஷயம்? ” என்று கேட்டேன். ” கணிப்பொறியின் முன் அமர்ந்ததுமே தலையைச் சுற்றுகிறது ” என்றார் அந்நியன்.
” அது நீங்கள் நேற்று அடித்த அரை பாட்டில் பிராந்தியாக இருக்கும்; ஹேங்க் ஓவர் ” என்றேன்.
” ம்ஹூம். பிராந்தி அடிக்காவிட்டாலும் சுற்றுகிறது ” என்றார்.
இப்படியே ஆள் ஆபீஸுக்கே போகாமல் தலை மறைவாக இருந்தார். கடைசியில் சுத்தமாகவே ஆபீஸ் போவதை நிறுத்தி விட்டார். வேலை கொடுத்த என் நண்பரிடமும் ஒரு மரியாதைக்கு “போய் வருகிறேன் ” என்று சொல்லிக் கொள்ளவில்லை.
ஒருநாள் ஸ்ரீபதியிடம் இது பற்றித் தோண்டித் துருவி விசாரித்தேன். என்ன பிரச்சினை என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அதற்கு ஸ்ரீபதி “என்னங்க சாரு, அந்த ஆளு உங்க ஃப்ரெண்டு... ” என்று இழுத்தார்.
“ஐயோ, என்ன ஆச்சு ஸ்ரீபதி? ”
கொஞ்ச நாள் முன்புதானே தெய்வம் அது இது என்று சொன்னார்?
“அவுரு என்னங்க...தெனம் ஆஃபீஸ் வரச் சொல்றாரு... ”
இப்போது புரிகிறதா, சோமனிடம் நான் ஏன் இளைஞியாக வையுங்கள் என்று சொன்னேன் என்று?

செந்தில் என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தவறு என் மீதுதான். யார் யாரிடம் எதை எதை எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும். இது விஷயத்தில் எனக்கு ஏற்கனவே செமத்தியான ஒரு அனுபவம் உண்டு.
அவந்திகாவை நான் ஒரு தெய்வப் பிறவியாக மதிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். அவளைப் போன்ற உயர் குணங்கள் வாய்க்கப் பெற்ற மனுஷியை நீங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும்தான் பார்க்க முடியும். என்னைப் பொறுத்தவரை அவள் என் கடவுள். அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவள்தான் என் உயிர். அவள்தான் என் சுவாசம்.

ஒருமுறை அவளுக்கு எலி ஜூரம் (Leptospirosis) வந்து உயிருக்கே ஆபத்தாகி படுக்கையில் கிடந்த போது கார்த்திக் கூட தைரியமாக வேலை செய்து கொண்டிருந்தான். நானோ என் எழுத்தைக் கூட விட்டு விட்டு (ஆறு மாதங்கள் நான் எழுதவில்லை) அவளுடனேயே இருந்தேன். ஒரு கட்டத்தில் சோஃபாவில் உட்கார்ந்திருந்த போது கார்த்திக்கின் எதிரிலேயே என் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கணத்தை என்னால் மறக்கவே முடியாது.

இப்பேர்ப்பட்ட மனுஷியிடம் நான் ஒரு முக்கியமான விஷயத்தை எதிர்பார்க்க முடியாது. செக்ஸை விடுங்கள்; அது கிடக்கிறது கழுதை. நான் சொல்ல வந்தது செக்ஸை விடவும் அதி முக்கியமான வேறோர் விஷயம். பசித்த வயிறுக்கு சோறு. அது மட்டும் அவந்திகாவிடமிருந்து கிடைக்கவே கிடைக்காது. கிடைக்கும்; ஆனால் இப்போது செந்தில் செய்தது போல் காலம்தான் பிரச்சினை. நானோ அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து தியானத்தை முடித்து விட்டு வாக்கிங் கிளம்பிச் சென்று ஏழரை மணிக்குத் திரும்புவேன். பத்து நாள் பட்டினி கிடந்தது போல் பசிக்கும். வந்து பார்த்தால் அவந்திகா தூங்கிக் கொண்டிருப்பாள். அப்புறம் நானே ஓட்ஸ் கஞ்சியைக் காய்ச்சி குடிப்பேன்.

மதியம் எனக்கு அவ்வளவாகப் பசிக்காது. ஆனால் மணக்க மணக்க தளிகை தயாராக இருக்கும். காலையில் கொலைப் பசியில் கிடந்த போது கிடைக்காத அந்தச் சோறு யாருக்கு வேண்டும் என்று நினைத்து அந்தப் பக்கமே திரும்ப மாட்டேன்.

இரவு எனக்கு ஏழரைக்கு பசி வந்து விடும். அவந்திகாவோ இரவு பத்து மணிக்குத்தான் சாப்பாடு பற்றியே யோசிப்பாள். அலுவலகம் விட்டு ஆறு மணிக்கு வீடு திரும்பி, கொஞ்சம் பால் குடித்து விட்டு, ஸ்கூட்டியை எடுத்துச் சென்று மல்லிகைப் பூ வாங்கி வருவாள். உதிரிப் பூ. ஒரு கூடை நிறைய. அதையெல்லாம் பக்தி சிரத்தையாகத் தொடுப்பாள். ஏழு மணிக்குத் துவங்கும் இந்த பக்திப் பணி ஒன்பது ஒன்பதரை மணிக்கு முடிவடையும். ஏழெட்டு முழம் கட்டி முடித்திருப்பாள்.
“ஏன் இந்த வீண் வேலை? கட்டிய பூவையே நீ வாங்கிக் கொள்ளலாமே? ” என்று கேட்பேன்.
“இவ்வளவு நெருக்கமாக யார் கட்டுகிறார்கள் சொல்? ” என்பாள் பதிலுக்கு.
” சரி, அப்படியானால் ஐந்து முழம் வாங்குவதற்கு பத்து முழம் வாங்கிக் கொள்ளேன்? ”
“இப்படிப் பூத் தொடுப்பது எனக்கு ஒரு தியானம் போல் இருக்கிறது; எனக்கு மிகவும் பிடித்த வேலை இது. ”
“ஓ, பிடித்த வேலை என்றால் செய்ய வேண்டியதுதான் ” என்று சொல்லி விட்டுவிட்டேன். மனிதர்களுக்கு எது சந்தோஷம் தருகிறதோ அதைச் செய்வதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான்.

ஏழெட்டு முழம் கட்டி அதைப் பெருமாளுக்கும், பாபாவுக்கும் அணிவித்து மகிழ்வாள். அவள் தனக்குப் பூச்சூடிக் கொண்டு நான் பார்த்ததேயில்லை. திருமணமான புதிதில் கணவனுக்கான தலையாய கடமைகளில் மனைவிக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு போவதும் ஒன்று என்று என் நண்பர்கள் சொல்லியிருந்தபடியால் நான் அவந்திகாவுக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு போவதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் அவள் என்னைக் கண்டிப்பாள், பூக்காரப் பெண்களிடம் நான் மிகவும் ஏமாந்து போவதாக. வாங்கிக் கொண்டு போகும் பூவும் அவள் தலையில் ஏறாது. சாமிக்குத்தான் போகும். அப்படியெல்லாம் சாமி சேவை செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியால் நானும் பூ வாங்குவதை விட்டு விட்டேன்.

இந்த மலர்த் திருப்பணிக்குப் பிறகுதான் – இரவு பத்து மணிக்கு – உனக்கு என்ன வேண்டும் சாப்பாடு என்று கேட்பாள் அவந்திகா. நான் அதற்குள் கற்பகாம்பாள் மெஸ்ஸில் போய் சாப்பிட்டுவிட்டு வந்திருப்பேன். அல்லது, வீட்டிலேயே இலைதழைகளை சாப்பிட்டு முடித்திருப்பேன். இந்தப் பிரச்சினைக்காகத்தானே சின்மயா நகர் சுடுகாட்டிலிருந்து இந்த மைலாப்பூர் சொர்க்கத்துக்கு இடம் மாற்றிக் கொண்டு வந்தேன்?
சில ஆண்டுகளுக்கு முன்னால், இந்தச் சாப்பாட்டு விஷயமாக நானும் அவந்திகாவும் எங்கள் வீட்டில் அபூர்வமாக நடக்கும் வட்ட மேஜை மாநாட்டில் விவாதிப்பதுண்டு. அப்போது என் சோகங்களையெல்லாம் அவள் முன்னே கொட்டுவேன். அப்போது அவள் தன்னுடைய சோக வரலாற்றை எடுத்து விடுவாள். அவளுடைய அம்மா சித்த சுவாதீனம் இல்லாதவர் ஆதலால் அவள் பத்து வயதிலிருந்தே சமைக்கிறாள். இப்போது 45 வயது.

” நீயே நினைத்துப் பார்; ஒரு பெண் 35 ஆண்டுகளாக சமையல்கட்டே கதி என்று இருந்தால் அவளுக்கு அந்த வேலை நரகமாக இருக்காதா? ”
” நானும்தானே கண்ணே, பத்து வயதிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்? நாளுக்கு நாள் எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் அதிகமாகிக் கொண்டுதான் போகிறதே ஒழிய குறைய மாட்டேன் என்கிறதே? ”
” நீ செய்து பார், தெரியும். ”
” செய்து பார்த்தேனே, நன்றாகத்தானே இருந்தது? பத்து வருட காலம் செய்தேனே? இப்போதுதானே நேரம் இல்லாமல் அந்தப் பக்கம் வர முடியாமல் இருக்கிறது? ”
ம்ஹூம். காஷ்மீர் பற்றிய இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தையைப் போல் வட்ட மேஜை மாநாடு எந்த முடிவும் எடுக்கப் படாமல் முடிந்து போகும். இப்படியே இந்தப் பிரச்சினை ஓடிக் கொண்டிருந்த போது ‘அவந்திகாவை அடுப்பங்கரையிலிருந்து விடுவிப்பது எப்படி? ’ என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.
சமையலுக்கு ஒரு ஆள் வைக்கலாம் என்று ஒரு யோசனை பிறந்தது. அவந்திகா இதைக் கேட்டதுமே மறுதலித்தாள். மீண்டும் மீண்டும் வட்ட மேஜை மாநாடு கூடியதன் பேரில் கடைசியாக ஒத்துக் கொண்டாள்.
” ஒரு ஸ்வீட் சிக்ஸ்டீனாக வைக்கலாம் ” என்றேன். பயங்கர கோபமாகி விட்டாள். ” 18 வயதுக்கு உட்பட்டவர்களை வீட்டு வேலைக்கு வைத்தால் உன்னை உள்ளே தள்ளி விடுவார்கள் ” என்றாள்.
” சரி, அப்படியானால் 18 டூ 25? ”
” ஓகே. வைத்துக் கொள். என்னை விவாகரத்து செய்து விடு. ”
ஓ மை காட். என்ன இவள் புரியாமல் பேசுகிறாள்?
80 வயதுப் பெண்ணாக இருந்தால் நல்லது என்பது அவந்திகாவின் யோசனை.
”80 வயதுப் பெண்ணை பெண் என்று சொல்ல மாட்டார்கள்; கிழவி என்றுதான் சொல்வார்கள்; மேலும், 80 வயது மூதாட்டியை இப்படிக் கொடுமைப் படுத்தினால் உனக்கு மறு ஜென்மத்திலும் கஷ்டம்தான் தொடரும் ” என்றேன்.
பயந்து விட்டாள். ” சரி, ஒரு 60 வயது பெண்ணாகப் பார்க்கலாம். ”
கடைசியில் ஒரு 30 வயதுப் பெண்தான் கிடைத்தார். சமையல் அற்புதம். ஆனால் நான் வாயே திறக்கவில்லை. ” எப்படி இருக்கிறது? ” என்று முகத்தை அஷ்ட கோணலாக சுளித்துக் கொண்டு கேட்டாள் அவந்திகா. நானா சிக்குவேன்?
“சுமார். ”
” என்னது சுமாரா? வாந்தி வருது. ”

ஒரு வாரம் அந்த அற்புதமான சாப்பாட்டை வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லாமல் ரசித்துச் சாப்பிட்டேன். ‘ வாந்தி வருகிறது ’ என்று நானும் சொல்ல வேண்டும் என்று எவ்வளவோ எதிர்பார்த்தாள் அவந்திகா. அவள் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றாமல் போகவே, ஒருநாள் அந்தப் பெண்ணிடம் சென்று “உப்பைக் குறை; புளியைக் குறை; மிளகாயைக் குறை; அதை அப்படிப் பண்ணு; இதை இப்படிப் பண்ணு ” என்று ஆயிரத்தெட்டு உத்தரவுகள் பிறப்பித்தாள்.

” இப்படியெல்லாம் செய்தால் அது குழம்பாக இருக்காதே; வெந்நீராக அல்லவா வரும்? ” என்று கேட்டேன்.
“உனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாதே சாரு ” என்று சொல்லிவிட்டாள்.
நான் நினைத்ததைப் போலவே அன்று வெந்நீராகவே இருந்தது குழம்பு. இதே போல் ஒவ்வொரு அய்ட்டமாக அந்தப் பெண்ணைக் குழப்பி அடித்து பதினைந்தே நாளில் ‘ சம்பளம் கூட வேண்டாம்; ஆளை விட்டால் போதும் ’ என்று ஓடியே போய் விட்டாள் அந்தப் பெண்.

திரும்பவும் அடுப்படி ராஜ்ஜியம் அவந்திகாவின் ஆளுகைக்குள் வந்தது. நான் பார்த்தேன். எத்தனை நாள் பட்டினி கிடப்பது? காலையில் ஓட்ஸ் கஞ்சி. இரவில் ராயர் கஃபே. மதியம் விதவிதமாகச் சமைத்து வைத்திருப்பாள். எனக்குத்தான் மதியம் பசிக்காதே? அதனால் இரண்டு சோளக் கதிரை அவித்துத் தின்று விட்டு அவள் செய்து வைத்ததை சீந்தவே சீந்தாமல் அப்படியே வைத்து விடுவேன்.

நேற்று காலை என்ன நடந்தது தெரியுமா?
காலை ஐந்தரைக்கு நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்று நடந்தேன். ஏழு மணி ஆயிற்று. பார்த்தால் பூங்காவின் உள் பகுதியில் ஒரு ஆலமரத்தடியில் இருந்த கல்தரையில் அமர்ந்து தேவாரம் பாடிக் கொண்டிருந்தார் சோமன். பக்கத்தில் சுருதிப் பெட்டி. சுந்தரர்.
பாடி முடித்ததும் “இதற்காகத்தான் மைலாப்பூரை சொர்க்கம் என்று சொல்கிறேன் சோமன் ” என்றேன்.
அவர் சொன்னார். ” சுஜாதா ஒரு கதையில் எழுதியிருப்பார்: அவன் மதுமிதாவால் பல் தேய்த்து, மதுமிதாவால் கொப்பளித்து, மதுமிதாவைக் குடித்து, மதுமிதாவைச் சாப்பிட்டான் ’ என்று. அதுபோல நீங்கள் இந்த உலகத்தின் சந்தோஷத்தை மட்டுமே பார்த்து, சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்து, சந்தோஷத்தில் மட்டுமே வாழ்கிறீர்கள். ”
” திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் ’ என்பார்களே; ஒரு திருவாசகப் பாடல் பாடுங்களேன் ” என்றேன் சோமனிடம்.
மனிதர் சமத்காரமாகப் பேச்சை மாற்றி விட்டார். பிறகு அங்கிருந்து கிளம்பி கச்சேரி ரோடு வந்தோம். சோமன் ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். பொறாமையாக இருந்தது. எனக்கு மட்டும் சைக்கிள் விடத் தெரிந்திருந்தால் சைக்கிள்தான் என் வாகனம். அதுவும் அலுமினிய நிறத்தில்.
” ராயர் கஃபே போகலாமா? ” என்று கேட்டார் சோமன்.
” அடப்பாவி, அதைத்தானே நான் இரண்டு வருடமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்! ” என்றேன்.

25 ஆண்டுகளுக்கு முன்னால் நான் அடிக்கடி ராயர் கஃபேவுக்குச் செல்வதுண்டு. மணியன், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., சோ போன்றவர்கள் வெளியே இருக்கும் திறந்த வெளியில் நின்று கொண்டிருப்பார்கள். எப்போதும் ராயர் கஃபேயில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். விறகு அடுப்புதான். கையில் கர்சீஃப் கட்டாயம் இருக்க வேண்டும். உள்ளே புகையில் கண்களிலிருந்து சிலருக்குக் கண்ணீர் வரும். புகையில் எல்லாம் அரையிருட்டாகத்தான் இருக்கும்.
காலை மாலை மட்டும்தான். சோறு சாப்பாடு எல்லாம் கிடையாது. டிஃபன் மட்டும்தான். அப்படி ஒரு அற்புதமான பிராமண டிஃபனை ஒருவர் இந்த உலகில் எந்த மூலையிலும் சாப்பிட்டிருக்க முடியாது. காஃபியும் அப்படியே. அங்கே அப்போது ஒருவர் இருந்தார். அய்ட்டங்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவருடைய மூளை மட்டும் கணக்கை எண்ணிக் கொண்டே இருக்கும். நாம் சாப்பிட்டு விட்டு கல்லாவின் முன் நிற்கும் போது “அண்ணாவுக்குப் பதினெட்டு ரூபாய், ஐம்பது பைசா ” என்று மிகச் சரியாக சொல்லுவார். எத்தனை பேர் சாப்பிட்டாலும் அவருடைய கணக்கு மட்டும் தப்பாது.

எவ்வளவு சிறிய பையனாக இருந்தாலும் ‘அண்ணா ’ என்றுதான் அழைப்பார்.
இங்கே நான் மந்தைவெளிக்கு இடம் மாறியவுடன் முதல் வேலையாக கச்சேரி ரோடுக்கு சென்று பார்த்தேன். அந்த இடத்தில் ராயர் கஃபே இல்லை. வேறு இடத்திற்கு மாறி விட்டது என்றார்கள். எந்த இடம் என்று தெரியவில்லை. எதையும் தேடிப் போவது என் வழக்கம் இல்லை; அது வயிற்றுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி; வயிற்றுக்குக் கீழுள்ள பிரச்சினையாக இருந்தாலும் சரி.

அந்த ராயர் கஃபே இருந்த புது இடத்துக்குத்தான் சோமன் என்னை அழைத்துக் கொண்டு போனார்.
(இன்னும் வரும்)
25.7.2008.
-------------------------------------------------
ராயர் கஃபே கச்சேரி ரோட்டிலேயே முன்பு இருந்த இடத்துக்கு எதிரேயுள்ள அருண்டேல் தெருவில் பேயாழ்வார் அவதரித்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கணித மேதை இப்போது இல்லை. இப்போது நாம் சாப்பிட்ட கணக்கையெல்லாம் நாமேதான் கல்லாவின் முன்னே ஒப்பிக்க வேண்டியிருந்தது.

அந்தக் கணித மேதைக்குப் பதிலாக இப்போது ஒரு பொடியன் இருந்தான் கணக்கு வழக்கெல்லாம் தெரியாது. ஆனால் அவனைப் போல் உபசரிக்க இந்த உலகத்தில் ஒருத்தன் பிறந்து வர வேண்டும் என்றார் சோமன்.
பெயர் அருணாச்சலம். ஊர் திண்டிவனம். சிரித்த முகம். முன்பல் இரண்டும் துருத்திக் கொண்டிருக்கும். அவனைப் போல் உபசரிப்பதற்கு ஒருவர் பிறந்து வர வேண்டும். திடீர் திடீரென்று காணாமல் போய் விடுவானாம். மூன்று நாட்கள் ஏதாவது பரோட்டா கடையில் இருந்து விட்டுத் திரும்பி வந்து விடுவானாம்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராயர் கஃபே. இப்போது கரி அடுப்பு இல்லை. கேஸ் அடுப்புதான். ஆனால் அதே ருசி.
சோமன் ஒரு சுவாரசியமான மனிதர். தன்னுடைய பழைய சைக்கிளை உருட்டிக் கொண்டே என்னோடு வருவார். உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றியும் என்னோடு பேசிக் கொண்டு வருவார்.
குமுதத்தில் ஒரு ஜோக் போட்டு இருக்கான் சார். கேளுங்கள் அந்த ஜோக்கை. தீய்ந்து போன தோசைக்கும், கர்ப்பஸ்த்ரிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

ரெண்டையும் கொஞ்சம் முன்னே எடுத்திருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த போது மணி எட்டு. அப்போதுதான் அவந்திகா எழுந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தாள். பசியோடு வந்திருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்?
அதனால்தான் சொல்கிறேன்...செந்தில், அந்தப் பக்கங்களை சிரமம் பாராமல் குரியரில் அனுப்பி வைத்து விடுங்கள். நானே வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்கிறேன்.
***
25.7.2008.
6.00 p.m.