Thursday 17 January 2013

பரவச நிலையில் சாரு !!!



இப்போதெல்லாம் சாருஆன்லைனில்  என் எழுத்து அதிகம் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்று நண்பர்கள் பலர் சொல்லக் கேட்கிறேன்இது சம்பந்தமான விளக்கமே இது:

நான்  நிறைய எழுதுகிறேன்ஆனால் பதிவேற்றம் செய்வதில்லைஎன் தோழி ஒருத்தி  சொன்னாள்: You are addicted to writing, man. அந்தக் கடைசி வார்த்தையில் வரும்மேவை மே மாதத்தை எப்படி உச்சரிக்கிறோமோ அதைப் போல் உச்சரிப்பாள்அமெரிக்காவில் man- அப்படித்தான் உச்சரிப்பார்களோஎனக்கு ஹாலிவுட் படங்கள் அவ்வளவு பழக்கம் இல்லாததால் அமெரிக்க உச்சரிப்பு தெரியாது

ஏன் பதிவேற்றம் செய்வதில்லைஎதிரிகள் அதிகம் என்பதால்தான்ஸீரோ டிகிரியை நான் ஒரு உன்மத்த  நிலையிலிருந்தே எழுதினேன்அது போன்ற ஒரு நாவலை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் என் எதிரிகள் என்னைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்

மீண்டும்  சொல்கிறேன்; எனக்கு யாரும் எந்தத் தீங்கும் செய்ய  முடியாதுஏனென்றால், எனக்கு வழங்கப்படும் தீமையை நான் தீமை என்று நினைப்பதில்லைஅனுபவம் என்றே  கொள்கிறேன். மரணத்தைப்  பற்றி மட்டுமே சிறிது சஞ்சலம்அதுவும் கூட, என் எழுத்து நின்று விடுமே என்ற காரணத்தினால்தான்மற்றபடி மரணத்தைக் கண்டும் அச்சமில்லை

ஸீரோ  டிகிரியை எழுதிய போது இருந்த அதே  உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன்அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று சொல்ல முடியாதுஏதோ ஒரு பேய் அல்லது மோகினி என் உடலில் புகுந்து கொண்டு எழுதுவது போல் தோன்றுகிறதுசாமியாடி சாமி ஆடுவானே அது போல என்று வைத்துக் கொள்ளலாம்அதுவரை பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லைமாலை நான்கரை மணிக்கு எழுந்து சிட்டி செண்டர் சென்று அங்குள்ள அரேபியன் ஹட்டில் சார்கோல் சிக்கன் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்துநேராகச் செல்லுங்கள்என்றேன். யெல்லே பேஜஸ் வரும் போது ஆட்டோக்காரர்எங்கே போக வேண்டும்?” என்று மீண்டும் கேட்ட போது அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லாததால்மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் எங்கே நிறுத்த முடிகிறதோ அங்கே நிறுத்துங்கள்என்றேன்.

இறங்கியவுடன்  எங்கே செல்வது  என்று தெரியவில்லைகடற்கரைக்குச்  செல்லலாமா என்ற யோசனையை நிராகரித்தேன்அப்போது இருந்த பரவச நிலையில் கடற்கரை வேண்டாம் என்று தோன்றியதுகாலையிலிருந்து கடவுளோடு உரையாடியதால் ஏற்பட்ட பரவசம் அது

வேறு  எங்கே செல்வது  என்று தெரியவில்லைபரவசம் உச்சநிலையை அடைந்து விட்டதால்  இனிமேல் எழுத முடியாதுஅதனால் வீட்டுக்குச் சென்று பயனில்லை.   மனோஜ் (ஹமீதின்  மகன்) இன்று பிறந்த நாள் என்று சொல்லியிருந்தான்.   அவன் வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்து ஹமீதை அழைத்தேன். போனை எடுத்துஇதோ ஒரு நிமிடத்தில் கூப்பிடுகிறேன்என்று வழக்கம்போல் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்சரி, பரவாயில்லை என்று அங்கிருந்து அபிராமபுரத்திலிருக்கும் மனோஜ் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்அப்போது நான் இருந்த பரவச நிலையில் ஒரு ஏழெட்டு கிலோமீட்டராவது நடந்தால்தான் மனம் ஒரு கட்டுக்குள் வரும் என்று தோன்றியது

ஆனாலும் ஒரு சந்தேகம், அவ்வளவு தூரம்  நடந்து சென்று அங்கே மனோஜ்  இல்லையானால்  என்ன செய்வதுமனோஜுக்கு மூன்று வயதுதான் ஆகிறது; அதனால் இன்னும் செல்போன் வைத்துக் கொள்ளவில்லைஒரே ஒருநாள்தான்  அவனிடம் செல்போனில் பேசியிருக்கிறேன்அதுவும் அவனுடைய அம்மா போன் மூலம்.  ”டேய் மனோஜ், எப்படிடா இருக்கே?” என்று நான் பேச்சை ஆரம்பித்ததுமேபோனை ஹமீதிடம் கொடுங்கள்; கொஞ்சம் பேசணும்என்று சொல்லி அப்போதே அவன் என் மனதை உடைத்து விட்டான். (அப்பனைப் போலவே பிள்ளை!) ஆனால் எப்போதுமே நான் என் நண்பர்களிடமும், தோழிகளிடமும், காதலியிடமும் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதையும் பார்ப்பதில்லை. அதற்குள் 15 நிமிடம் ஆகியிருந்ததுஹமீதிடமிருந்து போன் இல்லை.   அதனால் மீண்டும் நானே போன் செய்தேன். ”அட சாருவா, நான் கூப்பிட்றேன்னு சொன்னேன்ல, ஹ்ம்ம்சொல்லுங்க?” என்றார்

உங்கள் வீட்டுக்குத்தான் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்…”

அடடா, நான் இங்கே வுட்லண்ட்ஸில் அல்லவா இருக்கிறேன்? இன்னிக்கு சுஜாதா நினைவு நாள் விழா இருக்கே?” 

அவர்  சொன்னதும்தான்  ஞாபகம் வந்ததுமீண்டும் திரும்பி வுட்லண்ட்ஸ்  நோக்கி நடக்க  ஆரம்பித்தேன். என்னைப் பார்த்த உடனேயே ஹமீதுஎன்ன, முகமெல்லாம் ஒருமாதிரி ஜொலிக்கிறது? ஏதோ பரவசத்தில் இருப்பது போல் இருக்கிறதே? இப்படி உங்களை நான் பார்த்ததே இல்லையே?” என்று பல கேள்விகளைப் போட்டார். , பரவசம் முகத்திலேயே தெரிகிறதா என்று நினைத்துக் கொண்டேன்

இயக்குனர் ஷங்கரும், ராஜீவ் மேனனும் பேசியதை ரசித்தேன். சுஜாதாவுக்கு பொய் சொல்லவே தெரியாது; பாசாங்கு இல்லாத இயல்பான மனிதர் என்றார் ஷங்கர்சுஜாதா எப்போதுமே ஒரு 21 வயது இளைஞனின் மனதை விட்டுத் தாண்டியதில்லை என்றார் ராஜீவ். இந்த இரண்டு விஷயங்களையுமே நான் வாழ்க்கையில் பின்பற்றி வருபவன்ஆனாலும் அப்போது இருந்த பரவச நிலையில் என்னால் அந்தக் கூட்டத்தோடு ஒன்ற முடியவில்லைஎல்லாமே அந்நியமாக இருந்ததுநண்பர்கள் நர்சிம், லக்கிலுக், கேபிள் ஷங்கர் போன்ற பலரைக் கண்டேன்ஆனால் எனக்கு என்னவோ நிலவில் நடப்பதைப் போலிருந்தது.  (ஞாபகம், நான் மதுவோ வேறு எந்த போதை வஸ்துக்களையோ உட்கொண்டிருக்கவ்ல்லை). அவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பதற்கும் நான் பதிலுக்குச் சிரிப்பதற்கும் இடையில் மூன்று நிமிடம் இருந்ததுஅவர்களின் சிரிப்பு என் உணர்வுகளில் பதிய அவ்வளவு காலம் ஆனதுஅப்போது பார்த்து ஷாஜி வந்தார். புன்னகைத்தார்ஆனால் நான் மூன்று நிமிடம் கழித்துப் புன்னகை புரிந்த போது அவர் வேறொரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததால் என் பதில் புன்னகையை அவரால் கவனிக்க முடியாமல் போயிற்று

நான்  பறந்து கொண்டிருந்தேன்கண்களை மூடி கடவுளுடன்  பேசிக் கொண்டிருந்த  தருணங்களை எண்ணி  ஆழ்ந்து சுவாசித்தேன்அப்போது ஷாஜியின் குறுஞ்செய்தி வந்தது.  “மை  நேம் இஸ் கான் எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் என் மீது கோபமா?” 

, மை நேம் இஸ்  கான் அவருக்குப் பிடிக்கவில்லையாஅப்போதுதான் அந்த விஷயமே எனக்குத் தெரிய வருகிறதுஆனால் அந்தப் பரவச மனநிலையிலும் என் வழக்கமான விளையாட்டு புத்தி வெளியே வந்தது.  “என்னைத்தான் உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களை எப்போதும் எனக்குப் பிடிக்கும்என்று பதில் அனுப்பினேன்

பதறி  விட்டார் மனிதர்என் மீதான  அவருடைய ஆழமான  பிரியத்தையும்  அன்பையும் தெரிவித்து உடனே பதில் செய்தி வந்தது

சும்மா  விளையாடினேன் ஐயா; எங்கே இருக்கிறீர்.

ஸ்காட்ச்  இருக்கிறது; குடிக்கப் போகலாமா?

அப்போதைய  பரவசத்தில் நான் குடிக்கும் நிலையிலும் இல்லைஇன்னொரு  நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று  செய்தி அனுப்பி  விட்டு அங்கிருந்து  நைஸாகக் கிளம்பினேன்

வெளியே  வந்து பிளாட்பாரத்தில்  நீண்ட நேரம்  அமர்ந்திருந்தேன்பக்கத்தில் ஒரு  ஆள் பைக்கில் நீண்ட நேரம் யாருக்கோ காத்திருந்தான்எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லைவீட்டுக்கு நடந்தே போய் விடலாம் என்று எழுந்தேன்

போகலாமா  சாரு?” என்ற குரல் வந்தது

பைக்கில்  அமர்ந்திருந்த  உருவம்தான் பேசியது

அட  நவீன்!

நீங்கள் எப்படி இங்கே?

நீங்கள்தானே சாருவெளியே இருக்கிறேன்; வாஎன்றீர்கள்?
28.2.2010.
12.40 p.m.

2 comments:

  1. என்ன சாரு கடவுளை கண்டாரா? உண்மையில் விந்தையான மனிதர்

    ReplyDelete