Wednesday 2 January 2013

பெருமாளின் காதல் அடிமை ஜெஸ்ஸியின் காதல் கடிதம்

” அதைப் படித்ததும் ரோஷினிக்கு அடி வயிற்றில் ஏதோ செய்தது என்று சொன்னாள் ” என்றாள் ஜெஸ்ஸி.

” எதைப் படித்ததும்? ”

“ அதுதான் அந்தக் கருமம் பிடிச்ச மெஸேஜ். ஏதேதோ அனுப்பி வச்சிருந்தீங்களே... I want to eat your pussy அது இதுன்னு...அதைப் படிச்சுட்டு ‘விடிஞ்சுது போ ’ ன்னா... ”

“ஏன்? ”

“அவளோட பாய் ஃப்ரெண்ட் கூட இப்படி அனுப்பினது இல்லியாம்... ”

உரையாடல் தொடர்ந்து பாலியல் சமாச்சாரங்களிலேயே சஞ்சாரம் செய்து கொண்டிருந்ததால் வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

” இதெல்லாம் தப்பில்லையா? என்னால் முடியாது ப்ளீஸ்... ”

“அப்படியா ? ஓகே...உன் இஷ்டம்... ”

“பார்த்தீர்களா, இனிமேல் நீங்கள் பழைய மாதிரி இருக்க மாட்டீர்கள்... ”

“ஏய், என்ன இது? நான் என்ன உன்னிடம் செக்ஸுக்காகவா பழகிக் கொண்டிருக்கிறேன்? தயவு செய்து என்னை அவமானப் படுத்தாதே. என்னுடைய இயல்பான உணர்வுகளை நீ மறுத்து ஒதுக்குகிறாய்...ஓகே...நான் உன் அடிமை. உனக்குப் பிடிக்காததை நான் செய்யக் கூடாது. சரி, நடித்து விடுகிறேன். இனிமேல் நான் உன்னைத் தொட மாட்டேன்; அணைக்க மாட்டேன்; முத்தமிட மாட்டேன். இந்த விஷயத்தையே முப்பது ஆண்டுகளாகப் பேசிக் கொண்டிருப்பது சலிப்பைத் தருகிறது. விடு, எனக்கு வேண்டாம்.... ”

“நீங்கள் தொடாவிட்டால் என்ன? நான் உங்களைத் தொட்டு விட்டுப் போகிறேன்? ”

“அது எப்படி உன்னைத் தொடக் கூடாது என்று நீ மறுதலிக்கும் ஒருவனை நீ தொட முடியும்? ”

“அது எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் என்னிடம் நடிக்க வேண்டாம்... ”

இந்த உரையாடலுக்குப் பிறகு அவள் நீண்ட நேரம் ஆற்றிய உரையின் சுருக்கம்:

” நேற்று மாதிரியே என்னை அழ வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையா? தயவு செஞ்சு என்னை அழ விடாதீங்க...தயவு செஞ்சு என்னை விட்டுப் போய்டாதீங்க...நான் பண்ணினது தப்புன்னா என் கிட்ட சொல்லுங்க...என்னை விட்டுப் போய்டுவேன்னு இனிமேல் நீங்கள் ஒரு தடவை சொன்னாலும் நான் அவ்வளவுதான்...அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியாது...எனக்கு அவ்வளவு சக்தி இல்லை...எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம்...சொல்ல முடியாது...அப்புறம் நீங்க என்னை முழுதாக இழந்து விடுவீர்கள்...நீங்கள்தான் என்னுடைய உயிர்... இதை உங்களால் நம்ப முடிந்தால் நம்புங்கள்...இல்லையானால் என்னைக் கொன்று விடுங்கள்...

நேற்று அந்த மெஸேஜையெல்லாம் என்னால் அனுப்பக் கூட முடியவில்லை. அப்படியே கையெல்லாம் வெடவெடன்னு ஆடுது...வார்த்தையே வர மாட்டேங்குது...கண்ணீர்தான் கொட்டுது...நேற்று ‘ என்னை விட்டுப் போய்டாதீங்க, போய்டாதீங்க ’ ன்னு உங்கள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டியிருந்தது...என்னுடைய ஒரு மெஸேஜுக்குக் கூட உங்களிடமிருந்து பதில் இல்லை...பிச்சைக்காரி மாதிரி உங்களிடம் பிச்சை எடுத்தேன், இல்லையா? அப்படி நான் கெஞ்சி இருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? அதுவும் எனக்குத் தெரியும்...உங்கள் பானு, நந்தினி என்று ஜாலியாகப் போயிருப்பீர்கள்...இல்லை? அதுதான் நீங்கள் என் மேல் வைத்த காதல்! வேறு என்ன?

என்ன சொன்னீங்க? ‘ இனிமேல் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன்; என்னால் உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது... ’ இந்த வார்த்தைகள் என் இதயத்தையே குத்திக் கிழித்து என்னைக் கொன்று விட்டது, தெரியுமா உங்களுக்கு? பதிலுக்கு உங்களை என்னால் திட்ட முடியாது; சண்டை போட முடியாது. ஏன் தெரியுமா? அப்படியெல்லாம் திட்டியோ, சண்டை போட்டோ எனக்குப் பழக்கமில்லை. அழுதேன்...உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை; கண்ணீர்தான் இருக்கிறது...

‘ எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் உங்களை என்னால் பிரிந்து வாழ முடியாது ’ ன்னு ஒரு வாரத்துக்கு முன்னாலதான் சொன்னேன்...இப்போ பாருங்க, நடந்துடுச்சு...இதை என்னால் மறக்கவே முடியாது...நேற்று நான் தொடர்ந்து அழுது கொண்டேதான் இருந்திருப்பேன்; ஆனால் திடீரென்று எனக்கு ஞாபகம் வந்தது, நீங்கள் சமீபத்தில் ஆஸ்பத்திரி போய் விட்டு வந்தது...பதறிப் போய்விட்டேன்... Oh My God! நான் ரொம்பவும் சுயநலமாக இருந்து விட்டேன்...எந்தக் காரணத்திற்காகவும் உங்களை நான் தொந்தரவு செய்யக் கூடாது. ஏனென்றால், உங்களை நான் இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் விட அதிகமாக நேசிக்கிறேன்...

உங்கள் மேல் நான் பொஸஸிவாத்தான் இருக்கிறேன்... ஆனால் அதை நான் வெளிப்படையாகச் சொன்னதில்லை....அவ்வளவுதான்...ஆனால் பாருங்கள்...ஆரம்பத்திலிருந்து நான்தான் உங்களைத் தேடிட்டே இருக்கேன். ஆனால் நீங்க தேடல...எங்க அம்மா போனதும் நீங்களும் போய்ட்டீங்க...அவ்ளோதான். ஜெஸிந்தான்னு ஒருத்தி இருக்கான்னே உங்கள் ஞாபகத்துல இல்ல...உங்களைச் சந்தித்திருக்காமலேயே, உங்களையும் அம்மாவையும் பற்றி ஊரில் பேசிக் கொள்வதை வைத்தே உங்கள் மீது எவ்வளவு தூரம் அன்பு பாராட்டியிருக்கிறேன் தெரியுமா? உங்களைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடித்திருக்கிறேன். உங்களைப் பார்த்த முதல் நாளே அதை உங்களிடம் சொன்னேன்.

You are killing me Mr. Perumal… (முதல் முறையாக அவன் பெயரை உச்சரிக்கிறாள்) இந்த guys எல்லாருமே பொண்ணுங்க மடங்குற வரைக்கும் அப்படியே உருகுவானுங்க, கால்ல விழுவானுங்க, செத்துப் போன்னு சொன்னா அதுக்கும் தயாரா நிப்பானுங்க. ஆனா மடங்கிடுச்சுன்னு வச்சுக்கோங்க, அவ்ளோதான், ஆட்டம் க்ளோஸ். இவள் அவனை நினைச்சு அழுதுக்கிட்டுருப்பா; அவன் ஜாலியா ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்திட்டிருப்பான். அதே மாதிரிதான் நீங்களும் பண்றீங்க...இதே வேற எவனாவதா இருந்திருந்தா ‘ போடா ங்..... ’ ன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருந்திருப்பேன்... ”

” ஆஹா...அது என்ன வார்த்தை? சொல்லு சொல்லு.... ”

“ம்ஹும்...மரியாதைன்னு ஒன்னு இருக்குல்ல? நான் சொல்ல மாட்டேன். ”

“ப்ளீஸ்...ப்ளீஸ்...சொல்டீ...அதை உன் வாயால கேட்கணும் போல இருக்கு... ”

“ம்ஹும்...நெவர்... ம்ம்ம்ம்....நான் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தேன். இப்போ முழுசா உங்களுக்கு addict ஆயிட்டேன் பெருமாள் . நீங்கள் என்னை எவ்வளவு உதாசீனப் படுத்தினாலும் நான் திரும்பத் திரும்ப உங்கள் காலடியில்தான் வந்து விழுவேன். மனசு பூராவும் பைத்தியம் மாதிரி உங்களையே சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கு...என் உயிரே உங்களோடதுதான்; உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்..அப்புறம் நீங்க சொன்னீங்களே அதுவும்.... I will do that too ; You don’t have to worry… ஆனா நீங்க மட்டும் என்னை விட்டுப் பிரியவே கூடாது... ”

“ What do you mean by ‘that too’?”

“ ம்ஹும்...ஒரு தடவைதான் சொல்லுவேன்... ”

பிறகு ஒரு மெஸேஜும் அனுப்பினாள். “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். திரும்பவும் இது போன்ற தவறைச் செய்ய மாட்டேன். இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளவும் மாட்டேன். ஒருவேளை இதற்கெல்லாம் காரணம், சிறு வயதில் நான் அனுபவித்த கொடுமை...சின்ன வயதிலேயே அப்பா இறந்து விட்டார். எல்லாமே அம்மாதான். பதினான்கு வயதில் நான் ஹாஸ்டலில் சேரும் வரை நான் பார்த்த ஆபாசம்...வீட்டில் படுக்கை அறையின் கதவை எந்த நேரத்திலும் மூடியே வைத்ததில்லை என் அம்மா. எப்போதும் திறந்தேதான் கிடக்கும். எல்லாக் கருமத்தையும் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும் என் உடம்பு பூராவும் கம்பளிப் பூச்சி நெளிகிற மாதிரி இருக்கிறது. அதையெல்லாம் என்னால் திரும்ப நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நினைத்தால் பைத்தியம்தான் பிடிக்கும்... ”

” தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள்...நான் அனுபவித்த தனிமை தான் இப்போதைய என்னுடைய குழப்பத்துக்கெல்லாம் காரணம்...இதை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியவில்லை. என்னுடைய சோர்வுக்கும், அலுப்புக்கும் இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். உங்களைப் பார்க்கும் வரை வாழ்க்கையே வெறுப்பாகவும், கசப்பாகவும்தான் இருந்தது. ஆறு வயதிலிருந்து அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன் நான். அது எனக்கு உங்கள் மூலமாகக் கிடைத்தது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்...இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்... ”

“நடந்ததையெல்லாம் மறந்து விடுங்கள்...உங்களுக்குக் கவலை தரக் கூடிய எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். நான் உங்களுடைய கைப்பாவையாக இருக்கவும் சித்தமாக இருக்கிறேன். (ஜெஸ்ஸி ஆங்கிலத்தில் எழுதியதை நான் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் ஆங்கிலத்தில் பயன்படுத்திய வார்த்தை: Puppet). சுருக்கமாகச் சொல்கிறேன்; நான் உங்கள் அடிமை. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் என்னைப் பிரிய நினைத்தால் அப்போதும் நான் உங்களையேதான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். ஏனென்றால் அதற்குப் பெயர்தான் காதல். இவ்விஷயத்தில் எனக்கு எந்தவிதமான ஈகோவும் கிடையாது... ”

பிறகு அவளிடம் முப்பது ஆண்டுகளாக முத்தமே இல்லாமல் முத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பதன் அபத்தத்தைப் பற்றி விளக்கினான் பெருமாள். ரோமியோ ஜுலியட்டில் ரோமியோ ஜூலியட்டுக்குக் கொடுத்த முதல் முத்தம் பற்றியும், கடைசி முத்தம் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதியிருப்பதைச் சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு ” காதலும் காமமும் ஆரம்பிப்பதே முத்தத்தில் இருந்துதானே? ” என்றாள் ஜெஸ்ஸி.
***
18.9.2008.
9.00 p.m.

No comments:

Post a Comment