Tuesday, 19 March 2013

தறுதலைய கவனித்துக்கொள்ள ஒரு ரம்யா!

Charu … I don’t know why but I want to give you everything in this life that you want and deserve … I would try hard to get that for you ….
You know what I earn a month , it  is Rs 1, 00,000 … I am not even sure if I am worth it … ok I deserve that for my knowledge on what I do , my expertise , my experience and my education but what do I give back anything at all to society?  nothing … I don’t leave anything behind for future …. But you are not so …. You have a value for the life you are leading , for the  intellect you possess , for the things you give to the society , for the things you leave behind after you are gone forever, for the things that you have been a root cause , for the smile you are bringing to so many people, for the  knowledge you are building around you …. but yet you don’t get what you are ought to get … that’s why I keep saying you deserve more  and I am going to ensure at least what is possible of me to give in the coming days …
I will try and give what you want …. You give all you have to the people around ….
ரம்யா,
புவனேஷ்வர்.
புவனேஷ் மற்றும் ரம்யாவுக்கு,
இது போன்ற பாராட்டுக் கடிதங்களை வெளியிடுவதற்கு சில அன்பர்கள் ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள்.  திட்டி வரும் கடிதங்களையும் வெளியிட வேண்டியதுதானே என்பது அவர்கள் கேள்வி.  ஆரம்ப வார்த்தையே ‘டேய் பாஸ்டர்ட்’ என்றுதானே ஆரம்பிக்கிறார்கள்? எப்படி வெளியிடுவது? ஒருவர் எழுதுகிறார், சாருவை எங்கே கண்டாலும் அவன் முகத்தில் காறித் துப்புங்கள் என்று.  உடனே அதற்கு ‘நிச்சயம் செய்வேன்’ என்று ஒருவர் பின்னூட்டம் போடுகிறார்.  துப்புங்கள்.  நான் தயார்.  நீங்கள் துப்பினால் நான் பக்கத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கி முகத்தை சுத்தம் செய்து கொள்வேன்.  புத்தரை நான் வெறும் வார்த்தைகளாகப் படிக்கவில்லை.  அவர் என் குரு.  அவர் மீது சிலர் காறி உமிழ்ந்த போது அவர் சிரித்துக் கொண்டே இருந்தார்.  ”என்ன இது?” என்று சீடன் அவரைக் கேட்ட போது ” என் முகத்தைத் தண்ணீரால் கழுவி விட்டால் சரியாகி விடும்… ஆனால் அவர்களோ தங்களிடம் இருக்கும் அசிங்கத்தை வெளியேற்றுகிறார்கள்; அந்த நல்ல காரியத்தை நாம் கெடுக்கக் கூடாது” என்றார்.  அதையேதான் நானும் செய்வேன்.  செய்திருக்கிறேன்.
புத்தர் என்று சொன்னால் அது கட்டுக்கதையாகக் கூட  இருக்கக் கூடும் என்பீர்கள்.  இதோ நம் காலத்தில் வாழ்ந்த அன்னை தெரஸாவின் வாழ்விலும் இது நடந்தது. கல்கத்தாவில் அவருடைய தொண்டு நிறுவனத்தை ஸ்தாபித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பண உதவி வேண்டி தெருத் தெருவாகச் சென்று கடைகளில் பிச்சை எடுப்பார்.  அப்படி ஒருநாள் காலை நேரத்தில் ஒரு சேட்டுக் கடைக்குச் சென்றிருக்கிறார்.  அப்போதுதான் கடையையே திறந்திருந்தார் சேட்டு.  அது மட்டுமல்லாமல் அன்றைய தினம் அவருடைய மனநிலையும் சரியில்லை.  அடுத்த கடையைப் பாருங்கள் என்கிறார் சேட்டு.  தெரஸா நகரவில்லை.  மீண்டும் எரிச்சலோடு அதையே சொல்கிறார் சேட்டு.  அப்போதும் நகரவில்லை தெரஸா.  உடனே கோபத்துடன் ”இந்தா, இது போதுமா உனக்கு?” என்று காறி தெரஸாவின் முகத்தில் துப்புகிறார்.  அதை ஒரு கையால் வழித்துக் கொண்டே தெரஸா அந்த சேட்டிடம் “எனக்கு இது போதும் ஐயா; ஆனால் இவர்களுக்குத்தான் கொஞ்சம் பணம் தேவை” என்று சொல்லி தன்னுடன் நின்று கொண்டிருந்த தொழுநோயாளிகளைக் காண்பித்திருக்கிறார்.  சேட்டுக்கு அது புதிது.  அப்படியே கடையை விட்டு இறங்கி வந்து தெரஸாவின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.  அது மட்டும் அல்ல; தன் கடையில் வருட வருமானத்தில் 25 சதவிகிதத்தை தெரஸாவின் தொண்டு நிறுவனத்துக்கு எழுதி வைத்தார்.  எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக இருந்தாலும் இன்றளவும் அந்த சேட்டின் நிறுவனத்திலிருந்து 25 சதவிகித லாபம் தெரஸாவின் நிறுவனத்துக்குப் போய்ச் சேருகிறது.
இதிலிருந்துதான் நான் கற்றுக் கொள்கிறேன்.
எனவே, புவனேஷ், ரம்யா உங்கள் இருவருக்கும் நன்றி.  உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களால்தான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.  எழுத்து இப்போது எனக்கு அடிக்‌ஷன் மாதிரி ஆகி விட்டது.
ஆம்; என்னுடைய தேவையும் அதிகமாகி விட்டது.  இன்று திடீரென்று சிலே போக வேண்டும் என்று தோன்றினால் போக முடிய வேண்டும்.  நானும் 30 ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், சிலே போக வேண்டும் என்று.  எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை.  பத்திரிகைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு எப்படியும் 1000 ரூபாய் கிடைத்து விடுகிறது. அதைத்தான் சிலே செல்வதற்காக சேமித்துக் கொண்டிருக்கிறேன்.  விரைவில் சென்று விடுவேன்.
இன்னொரு விஷயம்.  இந்த ரம்யா மாதிரிதான் சூஸனும் எனக்காக ஒரு பப் வைத்துத் தருகிறேன் என்று சொன்னார் அல்லவா? அந்தத் திட்டம் சற்று சீரியஸாகவே ஆரம்பித்தது.  ஒரு நல்ல இடம் பார்த்தேன்.  ஆனால் என் துரதிர்ஷ்டம், அந்த இடத்தில் ஒரு பப் வைப்பதற்காக தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியின் பேரன் விலை பேசுகிறாராம்.  இந்த பப்பும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓடி வந்து விட்டேன்.
10.6.2010
2.30 p.m.
(பின் குறிப்பு: ரம்யா, ஒன்று சொல்ல மறந்து போனேன்.  உங்கள் கடிதம் ஒரு கவிதையைப் போல் இருந்தது…)

10 comments:

  1. யாரு அந்த ரம்யா ? :P

    ReplyDelete
  2. Bhuvaneshwar is a place name not a person.......

    ReplyDelete
  3. \\துப்புங்கள். நான் தயார். நீங்கள் துப்பினால் நான் பக்கத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கி முகத்தை சுத்தம் செய்து கொள்வேன். புத்தரை நான் வெறும் வார்த்தைகளாகப் படிக்கவில்லை. அவர் என் குரு.\\

    புத்தரின் சீடரான இந்த அஹிம்சாமூர்த்தி அவரை விமர்சித்தும் கிண்டலடித்தும் எழுதிய பாமினியின் மீதும் ராஜன்லீக்ஸ் மீதும் வெளிப்படுத்திய சாந்தமும் கருணையும் பேரன்பும்தான் என்னே! என்னே!!

    ReplyDelete
  4. ரம்யா,
    புவனேஷ்வர்.

    "எனவே, புவனேஷ், ரம்யா உங்கள் இருவருக்கும் நன்றி"

    சாரு என்ன இது?

    ReplyDelete
  5. இதெல்லாம் சாருவின் கற்பனை பாத்திரங்கள்

    ReplyDelete
  6. சாருவிடம் இப்படியான கற்பனைக் கடிதங்கள் நிறைய உண்டு போலும்,
    கடிதம் -கவிதை போல இருக்காம்....இவருக்குப் புகழ் பிடிக்காதாம்.

    ReplyDelete
  7. //ஒருவர் எழுதுகிறார், சாருவை எங்கே கண்டாலும் அவன் முகத்தில் காறித் துப்புங்கள் என்று. உடனே அதற்கு ‘நிச்சயம் செய்வேன்’ என்று ஒருவர் பின்னூட்டம் போடுகிறார். துப்புங்கள். நான் தயார். நீங்கள் துப்பினால் நான் பக்கத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கி முகத்தை சுத்தம் செய்து கொள்வேன். புத்தரை நான் வெறும் வார்த்தைகளாகப் படிக்கவில்லை. அவர் என் குரு. அவர் மீது சிலர் காறி உமிழ்ந்த போது அவர் சிரித்துக் கொண்டே இருந்தார். ”என்ன இது?” என்று சீடன் அவரைக் கேட்ட போது ” என் முகத்தைத் தண்ணீரால் கழுவி விட்டால் சரியாகி விடும்… ஆனால் அவர்களோ தங்களிடம் இருக்கும் அசிங்கத்தை வெளியேற்றுகிறார்கள்; அந்த நல்ல காரியத்தை நாம் கெடுக்கக் கூடாது” என்றார். அதையேதான் நானும் செய்வேன். செய்திருக்கிறேன்.//

    இந்த ஒட்டுப் பொறுக்கி தான் ஜெயமோகனை எங்கே பார்த்தாலும் காறித் துப்புங்கள்ன்னு சொல்லுச்சு... அப்போ மண்டையும் அவரோட அசிங்கத்தை வெளியேத்திட்டு இருந்தாரா ?

    ReplyDelete
  8. புத்தர் "அவர் என் குரு."

    இது புத்தருக்கு தெரிந்தால் ...................................

    ReplyDelete
  9. " ஒரு கட்டுரைக்கு எப்படியும் 1000 ரூபாய் கிடைத்து விடுகிறது. அதைத்தான் சிலே செல்வதற்காக சேமித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் சென்று விடுவேன்."

    இந்த பத்தி 2010 ம ஆண்டு எழுதப்பட்டது. இப்போது 2013
    மண்ட இதுவரை காலமும் எவ்வளவு சேர்த்துள்ளது???

    ReplyDelete
  10. "யாரு அந்த ரம்யா ? :P"

    திரிஷா கிடைக்காட்டா திவ்யா மாதிரி

    சூசன் கிடைக்காட்டா இந்த திவ்யா

    எல்லாம் கற்பனை பாத்திரங்கள்

    ReplyDelete