யானையை கொசு புணர்ந்த கதை
July 26th, 2010
அடிதடி, ரகளை கட்டுரையை முடித்து விடலாம் என்று பார்த்தால் விட மாட்டார் போலிருக்கிறது நண்பர். கட்டுரையைப் பதிவேற்றம் செய்த உடனேயே படித்து விட்டு எனக்கு மெஸேஜ் கொடுத்து விடுகிறார். கடைசி கட்டுரைக்கு வந்த மெஸேஜ்: Thanks for provoking me to write. But I am not for a fight with you.
நான் பாட்டுக்கு என் வேலையுண்டு, அன்ந்த பத்மநாப சாமி உண்டு என்று இருந்தேன். வேலை மெனக்கெட்டு என்னிடம் வந்து ”இப்போதெல்லாம் இலக்கியத்தில் என்ன நடக்கிறது; ஒரே அடிதடி, ரகளை… மற்றபடி எதுவுமே இல்லை” என்று சொன்னால் நான் சும்மா இருப்பேனா?
ஸ்டீஃபன் ஹாகிங்கை எதேச்சையாக சந்திக்க நேர்ந்த ஒரு ப்ரைமரி ஸ்கூல் டீச்சர் “என்ன ஸ்டீஃபன்… இப்போதெல்லாம் ஒன்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே நடப்பதில்லையே? எல்லா விஞ்ஞானிகளும் செமினார் அது இது என்று சொல்லிக் கொண்டு கூத்தடிக்கிறார்களே தவிர உருப்படியாக ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே?” என்று சொன்னால் ஸ்டீஃபன் ஹாகிங்குக்கு எப்படி இருக்கும்? அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன். இப்போதும் கூட அந்த நண்பரின் அபிப்பிராயத்துக்கு நான் ஒரு பதிலை எழுதி விட்டு இதோடு முடிந்தது என்றே நினைத்திருந்தேன். ஆனால் சுந்தர ராமசாமி கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அப்படியெல்லாம் போய் விடுவார்களா? (சு.ரா. கோஷ்டியிலேயே எனக்குத் தெரிந்து உருப்படியாகத் தேறிய ஒரே ஆள் மனுஷ்ய புத்திரன்தான் என்று தோன்றுகிறது).
அந்த எக்ஸ் எழுத்தாளருக்கு இப்போது தமிழில் எழுதப்படும் விஷயங்கள் குறித்து எவ்வளவு மோசமான அபிப்பிராயம் இருந்தாலும் அதை அவர் ஒரு ப்ளாகில் எழுதியிருந்தால் அதை நான் படித்திருக்கவே மாட்டேன். படித்தாலும் எதிர்வினை செய்திருக்க மாட்டேன். என்னிடம் வந்து சொன்னதால்தான் என் கருத்தை பதிவு செய்தேனே தவிர அவருடன் சண்டை போடும் அளவுக்கு எனக்கு நேரமும் இல்லை; அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை.
என்னோடு சண்டை போட அவர் தயார் இல்லையாம். அவருடைய அந்த மெஸேஜைப் படித்த்தும் எனக்கு யானையைப் புணர்ந்த கொசு கதைதான் ஞாபகம் வந்த்து. உங்களில் பலருக்கும் அந்தக் கதை தெரிந்திருக்கலாம். இருந்தாலும் சொல்கிறேன். கொசு சாம்ராஜ்யத்தில் ஒரு வாய்ச்சவடால் கொசு இருந்த்தாம். வடிவேல் ரவுடியாக நடிப்பார் அல்லவா, அதை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த மாதிரி கொசு அது. அது ஒருநாள் தன் சக கொசுக்களிடம் நான் யானையையே பஜனை பண்ணுவேன் தெரியுமா என்று சவடால் அடித்துக் கொண்டிருந்த்து. உடனே மற்ற கொசுக்களுக்கு ஒரே ஆச்சரியம். அது எப்படி அவ்வளவு பெரிய யானையை ஒரு கொசு புணர முடியும்? ஒரு கொசு கூட இந்த சவடால் கொசு சொன்னதை நம்பவில்லை. உடனே சவடால் கொசு ”நான் செய்து காட்டுகிறேன், பார்க்கிறீர்களா?” என்று கேட்டது.
சவால் ஏற்கப்பட்ட்து. ஆனால் கொஞ்சம் நேரமாகும்; எல்லோரும் கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள் என்றது சவடால். மற்ற கொசுக்களும் ஆர்வத்துடன் யானையை நெருங்கின.
சவடால் கொசு யானையின் பின்பக்கம் போய் ஒரு இட்த்தில் அமர்ந்து கொண்ட்து. மற்ற கொசுக்களுக்கு ஒரே ஆச்சரியம், இந்தக் கொசு எப்படித்தான் அவ்வளவு பெரிய யானையைப் புணரப் போகிறது என்று. ரொம்ப நேரம் ஆயிற்று. ஒன்றுமே நடக்கவில்லை. எல்லா கொசுக்களும் அந்த சவடால் கொசுவை முறைத்தன.
சவடால் கொசு “வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது; தெரியவில்லையா உங்களுக்கு?” என்று கேட்ட்து. “இல்லையே” என்று கோரஸாக்க் கத்தின எல்லா கொசுக்களும்.
“பொறுங்கள்; பொறுங்கள்… இன்னும் கொஞ்ச நேரம்தான்; வேலை முடிந்து விடும்” என்றது.
அப்போது பார்த்து யானை தன் தும்பிக்கையை உயரே தூக்கி பிளிறியது. உடனே சவடால் கொசு யானையைப் பார்த்து “ஆ… வலிக்குதா… ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டது.
இதுதான் கொசு யானையைப் புணர்ந்த கதை.
இந்த எக்ஸ் எழுத்தாளரோடு நான் சண்டைக்குப் போகிறேனாம். இவர் என்னோடு சண்டை போட்த் தயாராக இல்லையாம். ’அரே பச்சா; நான் சொல்வதை நன்றாக்க் கேட்டுக் கொள். நான் சண்டைக்குப் போனால் மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்களோடுதான் சண்டைக்குப் போவேனே தவிர உன்னை மாதிரி பச்சாக்களோடு அல்ல…
மேலும் சிறந்த குமாஸ்தாவுக்கான ஜனாதிபதி பரிசு பெறுவதே உம் வாழ்வின் குறிக்கோள் என்று சொன்னீர். அப்படிப்பட்ட குமாஸ்தாக்களோடு சண்டை போடுவது என்னைப் போன்ற எழுத்தாளனின் வேலை அல்ல.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு தவறைச் செய்பவர்கள் ஏன் அதைத் தொடர்ந்து தவறுக்கு மேல் தவறாக செய்து கொண்டே போகிறார்கள். அந்த எக்ஸ் எழுத்தாளர் என்னிடம் வந்து கண்டபடி உளறியதே தவறு. இப்போது ‘உன்னோடு சண்டை போட்த் தயாராக இல்லை’ என்று சொல்லி அடுத்த தவறையும் செய்கிறார். அந்த மெஸேஜ் மட்டும் வந்திருக்காவிட்டால் இதை நான் எழுதியிருக்க மாட்டேன்.
இப்போது நாம் ஜனாதிபதி பரிசு என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாம். ப்ரைமரி ஸ்கூல்களில் நன்றாகப் படித்து, கிருத்திருவம் எதுவும் செய்யாத பசங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் என்று சொல்லி சிலேட்டும் பலப்பமும் கொடுப்பார்கள். அந்த மாதிரி அவார்ட் வாங்கும் பசங்கள் பின்னாளில் உருப்படவே உருப்படாது. அது போன்ற அவார்டு தான் ஜனாதிபதி அவார்டு. உதாரணமாக, சிரிப்பு நடிகர் விவேக் பத்ம ஸ்ரீ அவார்டு வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…
No comments:
Post a Comment