Sunday, 10 March 2013

சாருவின் அனைத்து நூல்களும் அனைத்து மொழிகளிலும் கிடைக்கும்

ஜூலை 6, 2011: ஸீரோ டிகிரி இந்தி மொழிபெயர்ப்பு மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  நானும் கூடவே அதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.  நான் ஸீரோ டிகிரியில் அதிகம் சம்ஸ்கிருதம் கலந்த தமிழைப் பயன்படுத்தி இருப்பதால் இந்திக்கு அது லகுவாக இருக்கிறது. ராஸ லீலா ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு பக்கம் என்னை அதிகம் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் டாக்டர் ராமானுஜம் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் தேகம் நாவலை அவ்வப்போது சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

செப்டம்பர் 15, 2011: ஸீரோ டிகிரியின் ஹிந்தி மொழிபெயர்ப்பும் முடிந்து விட்டது.  அடுத்த ஆண்டு ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் எடிஷனுக்கான கலந்துரையாடல் பாரிஸில் நடக்க வேண்டும்.  அதுதான் என் இலக்கு.  ஃப்ரான்ஸில் அஸியா ஜெப்பார், தாஹர் பென் ஜெலோன், மிஷல் வுல்பெக் போன்ற பெயர்களோடு என் பெயர் வரும்.

செப்டம்பர் 30, 2011: ஸீரோ டிகிரியின் ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பு.  அந்த வேலை இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து விடும் என்று தெரிகிறது.

அக்டோபர் 21, 2011: நான் ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பில் உதவி மற்றும் எக்ஸைல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.   இடையில் என்னுடைய அடுத்த நாவலையும் எழுத ஆரம்பித்து விட்டேன்.  இந்த நாவலை ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன்.

அக்டோபர் 25, 2011: வாழ்விலேயே முதல் முறையாக கையில் இருக்கும் பணத்தை அப்படியே கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். ஸீரோ டிகிரியின் ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்புக்குத் தேவை.

அக்டோபர் 31, 2011: அதற்காகத்தான் எக்ஸைலை மாங்கு மாங்கென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

பெப்ருவரி 15, 2012:  மொழிபெயர்ப்பு மூலமாக தமிழ்நாட்டை விட்டு வெளியே போக வேண்டும்.  இதற்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறேன்.  ஒரே சமயத்தில் நான்கு மொழிபெயர்ப்பாளர்களோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.  ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம்.

மார்ச் 4, 2012: இப்போது சாரு நிவேதிதாவாகிய நான் எக்ஸைல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதால் என் ஆருயிர் நண்பர் அபிலாஷுக்குச் சொல்ல வேண்டிய சில விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லுவேன்

மார்ச் 16, 2012: பெங்களூரிலிருந்து வந்த கையோடு எனக்கான மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட ராஜேஷை என்றுமே மறக்க மாட்டேன்.  ராஸ லீலா மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

மார்ச் 16, 2012: என் மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக உதவ விரும்பும் நண்பர்கள் பின்வரும் வங்கிக் கணக்குகளில் பணம் அனுப்பலாம்.  ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச், எக்ஸைல் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்புக்குப் பணம் தேவைப்படுகிறது.

அக்டோபர் 4, 2012: எங்கிருந்தோ கடவுளால் அனுப்பப்பட்டு என் எழுத்தை மொழிபெயர்க்கிறேன் என்று வந்தார் ஜெயகுமார் (ஜேகே) என்ற வாசக நண்பர்.  ஒரு மாதத்துக்கு முன்பு அவரைப் பற்றி எனக்குத் தெரியாது.  அவருக்கு இலக்கியப் பரிச்சயம் அவ்வளவாக இல்லாத போதும் அவரது மொழிபெயர்ப்பும் ஆங்கிலமும் சரளமாகவும் வெகு இயல்பாகவும் உள்ளது.  காமரூப கதைகளை அவரிடம் மொழிபெயர்க்கக் கொடுத்தேன்.

அக்டோபர் 2012: என் பேச்சைக் கேட்ட ஸ்லோவேனிய எழுத்தாளர் Tomas Salamun ”உங்கள் நாவல்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் அங்கே உங்களைக் கொண்டாடுவார்கள்” என்று என்னிடம் சொன்னார்.

டிசம்பர் 23, 2012: ஷிவா என்று பெயர்.  எக்ஸைலை முடிக்க ஒரு கால அட்டவணையே போட்டு இருக்கிறார்.  அதன்படி மார்ச் 31-ஆம் தேதி எக்ஸைல் மொழிபெயர்ப்பு முடியும். ஸாம் என்று ஒரு வாசகர்.  தேகம் நாவலை என்னிடம் சொல்லாமலேயே ஒரே மாதத்தில் மொழிபெயர்த்து முடித்து விட்டார்.  இப்போது டாக்டர் ராமானுஜத்தின் பிரதியையும் ஸாம் பிரதியையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி.  அவருக்கும் ஆயிரம் வேலை.  சமையல் வேலை, கல்லூரி வேலை, கணவர் வேலை, குழந்தை வளர்ப்பு, இத்யாதி இத்யாதி. அப்போது என் நண்பரும் மலையாள மொழிபெயர்ப்பாளருமான ஜெயேஷை சந்தித்தேன். எக்ஸைல் வெளிவந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது.  அவர் அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து ஆறு மாதம் ஆகிறது.  அடுத்த இரண்டு மாதங்களில் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் மொழிபெயர்ப்பை முடித்து விட்டார்.

மார்ச் 3, 2013: மற்ற நேரங்களில் எக்ஸைல் நாவல் மொழிபெயர்ப்பை எடிட் செய்து கொண்டிருக்கிறேன்.

மார்ச் 8, 2013: அதில்தான் ஸீரோ டிகிரியையும் என் சிறுகதைத் தொகுப்பையும் ஒடிய மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு வரப் போகிறார்கள்.  மொழிபெயர்ப்பு வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

2 comments:

  1. அப்பப்பா எத்தனை எத்தனை ஒளறல்கள் .

    ReplyDelete
  2. கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி இருக்கு.

    “தமிழ்,மலையாளம்,ஹிந்தி,ஆங்கிலம்,ஃப்ரெஞ்ச்,ஒடியா.... மற்றும் நீங்கள் விரும்பும் மொழியில் கிடைக்கும். தவறாமல் வாங்கி துடைத்துக் கொள்ளுங்கள்......”

    ReplyDelete