புலியின் கூண்டைத் திறந்து விட்ட சிறுமிக்கு…
September 1st, 2010
Dear Charu,
I can see how much you are shuffled between your two lives of a good family man and a creator , but the truth is you cant excel in both . you got to choose . Most of the successful people didn’t have a great personal life thats because your interest and energy are focused on a more public interest than personal . When you try to balance , it will lead to frustration and irritation. For people like you balancing doesn’t work . If you need satisfaction in what u do and do justice you can’t choose .
Hope I am not confusing you .
Saira Banu,
New Delhi – 48.
அன்புள்ள ஸாய்ரா,
சில ஆண்டுகளுக்கு முன் ஜக்குபாய் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக ஒரு விளம்பரம் வந்திருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே அப்படி ஒரு கோமாளித்தனமான விளம்பரத்தை நான் பார்த்ததில்லை என்பதால் அந்த விளம்பரம் என் மனதில் பதிந்து போய் விட்டது. பின் லாடன் வேஷத்தில் நெற்றியில் குங்குமப் பொட்டு (!) வைத்துக் கொண்டு கையில் மெஷின் கன்னுடன் உட்கார்ந்திருப்பார் ரஜினி பாய். சரி விடுங்கள்; நான் சொல்ல வந்தது அதை அல்ல. அந்த விளம்பரத்தில் ஒரு வாசகம் இருக்கும். “இறைவா; என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.” அந்த வாசகம் தான் உங்கள் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது.
எனக்கு இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்றும், குடும்பஸ்தன் – படைப்பாளி என்ற இரண்டு துருவங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு நான் அல்லாடிக் கொண்டிருக்கிறேன் என்றும் உங்களுக்கு யார் சொன்னது? ஒரு சராசரி யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் போன்ற மிடில் க்ளாஸ் எழுத்தாளர்களிடம் பேச வேண்டிய வசனங்களை என்னிடம் பேசுவதற்கு உங்களைத் தூண்டியது எது? நீங்கள் என் எழுத்துக்களை படிக்கவே இல்லை என்று மட்டுமே என்னால் முடிவு செய்ய முடிகிறது.
நான் முழுக்க முழுக்க ஒரு படைப்பாளி. எனக்கு குடும்பமோ மண்ணாங்கட்டியோ கிடையாது. நான் யாருக்கும் கணவன் அல்ல; யாருக்கும் மகன் அல்ல; யாருக்கும் சகோதரன் அல்ல; யாருக்கும் தகப்பன் அல்ல. எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று எழுத்து மட்டும்தான். எனக்குக் குடும்பமே இல்லை என்கிற போது நான் எப்படி ஒரு நல்ல குடும்பஸ்தனாக ஆக முடியும்? உங்களைப் போன்ற இளைஞர்களுக்கெல்லாம் பாரதி என்று ஒருவன் இருந்தான் என்பதே தெரியாதா? அதைக் கூட தெரிந்து கொள்ளாமல் என்ன மயிருக்கு என்னைப் போன்ற ஒருவனின் எழுத்தைப் படிக்க எத்தனிக்கிறீர்கள்? அரைகுறையாகப் படித்து விட்டு இதில் பெரிய மினாராவின் மேல் போய் அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்து பரிதாப உணர்ச்சி வேறு!
I can see how much you are shuffled between your two lives of a good family man and a creator , but the truth is you cant excel in both… எனக்கு தினந்தோறும் ங்கொம்மா ங்கோத்தா என்று ஆரம்பித்து என் வீட்டுப் பெண்களின் யோனிகளைக் கிழிகிழி என்று கிழித்து வரும் ஆபாசக் கடிதங்கள் என்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால், அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஆனால் உங்கள் கடிதம் என்னை வெகுவாக அவமானப் படுத்துகிறது. இவ்வளவு அவமானகரமான கடிதத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. என்னைப் பற்றி இம்மியளவு கூட – அதாவது, என் எழுத்தைப் பற்றி – தெரிந்து கொள்ளாமல் என்னைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக் கிளம்பி விட்டீர்கள். நான் கடந்த 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். பிரசுரமான புத்தகங்கள் மட்டும் 35 இருக்கும். தொகுக்கப்படாமல் அங்குமிங்கும் கிடப்பவை ஒரு பத்து புத்தகங்கள் வரும். அதனால் இனிமேல்தான் சாதிக்க வேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ எனக்கு இல்லை. உலக இலக்கியத்தின் வாசகன் என்ற முறையில் சொல்கிறேன்; நோபல் பரிசு பெற்ற ஆஸ்த்ரிய எழுத்தாளர் எல்ஃப்ரீட் ஜெலினெக்கின் எழுத்தை விட என் நாவல்கள் வீரியமானவை. இதுபோல் அநேகம் பேரை நான் தாண்டியிருக்கிறேன்; அநேகம் பேரை தாண்டவில்லை. அந்தப் பட்டியலையெல்லாம் இங்கே போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
இன்று உலகம் பூராவும் கொண்டாடப்படும், பாராட்டப்படும் உம்பர்த்தோ எக்கோவின் கட்டுரைகளை விட என் கட்டுரைகள் காத்திரமானவை. ஏதோ அதிகப் பிரசங்கித்தனமாக இதை நான் சொல்லவில்லை. ஹிண்டு தினசரியின் சர்வேயை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன். இந்தியாவில் பெண்களால் அதிகம் வாசிக்கப்படும் நாவல்கள் என்று ஹிண்டு சர்வேயின் மூலம் தெரிய வந்த ஐந்தாறு நாவல்களில் ஸீரோ டிகிரியும் ஒன்று. மற்றவை, ஸல்மான் ருஷ்டியின் The Enchantress of Florence, வி.எஸ். நைப்பாலின் ஒரு நாவல், ஜும்ப்பா லஹரியின் நாவல். அமெரிக்க இலக்கியப் பத்திரிகைகளில் என் எழுத்தை நபக்கோவின் எழுத்தோடு ஒப்பிடுகிறார்கள். (நம்முடைய தமிழ் எளூத்தாளர்களுக்கு இதெல்லாம் சுப்ரமணியம் சுவாமியின் ஜோக் மாதிரி சிரிப்பு வரும். அவர்களெல்லாம் பாவம், தமிழ்நாட்டு எல்லையையே தாண்டாதவர்கள். அவர்களிடம் போய் இதையெல்லாம் சொன்னால் சிரிக்கத்தானே செய்வார்கள்? ’நம்மைப் போலவே தமிழ் பேசுகிறான்; நம்மைப் போலவே தமிழில் எழுதுகிறான். இவன் எப்படி நபக்கோவ், கிபக்கோவ் என்கிறான். ஒரே புளுகு மூட்டை’ என்றுதான் தமிழ் எளூத்தாளன் நினைப்பான். இந்த மூடர்களைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் மேற்கோள் காண்பிக்கிறேன். இது ஜூலை 15-ஆம் தேதி நம் இணையதளத்தில் நான் கொடுத்த லிங்க். ஒருத்தர் கூட படித்திருக்க மாட்டார்கள். அதனால் அதிலிருந்து சில பத்திகளை மட்டும் தருகிறேன். தில்லியில் நடந்த almost island நடத்திய சர்வதேச இலக்கியக் கருத்தரங்கில் கலந்து கொண்ட ட்ரினிடாடைச் சேர்ந்த வாணி கபில்தேவ் தன்னுடைய அனுபவங்களை the Carribean Review of Books என்ற சஞ்சிகையில் விரிவாக எழுதியிருக்கிறார். அதன் லிங்க் இதோ:
அதில் என்னைப் பற்றிய வாணியின் அவதானம் இது:
There was the concern for another species of telling in Charu Nivedita, the wickedly inventive Tamil writer whose blend of classical and slang styles would be the despair of any translator who could not channel the spirits of Joyce, Nabokov, and Jean Genet. Charu’s speech ranged from “the time of screaming and howls of two thousand five hundred years ago, of Medea” that “still exists” (massacres are not unknown to him) to poker-faced tall tales of his vagabondage that might or might not have documentary value in addition to their truth of shock — “Your job is called ‘catamite’ . . . Going to bed with a person you don’t love is the greatest tragedy, I realised. So I quit the job” — and pieces of work-based advice, for example that eating oxtail soup desensitises the body against beatings.
இலக்கியத்தில் என்னுடைய ஆசான்கள் என்று எந்த மூன்று பேரை நான் நினைக்கிறேனோ அந்த மூன்று பேரை வாணி குறிப்பிடுவதை கவனியுங்கள். இவ்வளவுக்கும் அவருடைய உச்சரிப்பு எனக்குப் புரியாததால் அவரிடம் நான் அதிகம் பேசவில்லை. மேலும், என்னுடைய கட்டுரைகளில் நான் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் எழுத்தாளர்கள் மேற்கண்டவர்கள். நான் நகுலன், தர்மு சிவராமு பள்ளியைச் சேர்ந்தவன் என்றும், இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கு நபக்கோவ் தான் ஆதர்சம் என்றும் எழுதியிருக்கிறேன். ஒருமுறை சுந்தர ராமசாமி என்னைக் கேட்டார். உங்களுக்கு எந்த மேற்கத்திய எழுத்தாளர் பிடிக்கும் என்று. சற்றும் யோசிக்காமல் நபக்கோவ் என்றேன். ”தர்மு சிவராமுவும் அவரைத்தான் அடிக்கடி குறிப்பிடுவார்” என்றார் சு.ரா. மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு குறைந்த பட்சம் நான் யார் என்றாவது தெரிந்திருக்கிறது.
உங்கள் கடிதத்தின் உச்சக்கட்ட ஆபாசம் இதுதான்: When you try to balance , it will lead to frustration and irritation. For people like you balancing doesn’t work . If you need satisfaction in what u do and do justice you can’t choose . அடடா, என்ன ஒரு புரிந்து கொள்ளல். ஏதோ ஒரு 20 வயதுப் பையனுக்கு அறிவுரை கூறுவது போல் கூறியிருக்கிறீர்கள். உங்கள் வயது 25 இருக்கும் என்பது என் யூகம். அவ்வளவு சிறுமியான நீங்கள் 35 ஆண்டுகளாக எழுதி வரும் எனக்கு அறிவுரை? அம்மணி, ரேஷன் கார்டு ரேஷன் கார்டு என்று மக்கள் அலைகிறார்களே, அந்த ரேஷன் கார்டு எப்படி இருக்கும் என்றே எனக்கு போன வாரம்தான் தெரியும். அது கூட என் பாஸ்போர்ட் செல்லாமல் போய் விட்டதால் புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்காக இருப்பிடத்தின் சான்று கேட்டதால் அதைப் பார்க்க நேர்ந்தது. என்ன பிரச்சினை என்றால், எனக்காக பாஸ்கர், ராஜேஷ், நவீன், ஜெனிஃபர், பிரபுதேவா, தங்கவேல் மாணிக்கம் என்று ஒரு டஜன் பேர் வேலை செய்து கொண்டிருக்கையில் என்னுடைய நாளில் ஒரு மணி நேரம் ஸோரோவுக்காகப் போய் விடுகிறதே என்பது மட்டுமே அவ்வப்போது உறுத்தலாக இருக்கும். அதனாலேயே இனிமேல் நாய் வளர்க்கக் கூடாது என்றும் நினைப்பேன்.
உண்மையில் என் மனைவிதான் என்னால் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆள் என்று நினைக்கிறேன். ஏதாவது பேச வருவாள். வாயில் – என் வாயில்தான் – ஆள்காட்டி விரலை வைத்து சைகை செய்வேன். ”சே, சனியன் பிடிச்சது, எப்பப் பார்த்தாலும் எழுதிக் கிட்டே இருக்கு” என்று முணுமுணுத்தபடியே ஓடி விடுவாள்.
சமீபத்தில் பயாலஜியில் ஒரு சந்தேகம் வந்தது எனக்கு. யாரைக் கேட்கலாம் என்று கார்த்திக்கிடம் கேட்ட போது “அம்மாவிடம் கேட்கலாமே?” என்றான். அம்மாவா? ஆமாம், அம்மா தான். அப்போதுதான் எனக்கு விஷயமே தெரிந்தது, அவந்திகா பி.எஸ்ஸி. பயாலஜியும் எம்.காமும் படித்திருக்கிறாள் என்று. ஓ, மாஸ்டர்ஸ் டிகிரியா என்று வியந்தேன். 20 ஆண்டுகள் கழித்து இதைத் தெரிந்து கொள்கிறேன்.
அது எப்படி சாய்ரா, மிகச் சரியாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு பெண் கிளம்பி விடுகிறீர்கள்? ஆறு மாதத்திற்கு முன்பும் ஒரு பெண் இப்படித்தான் பல கேள்விகளை என்னிடம் கேட்டார். நான் கடவுள் படத்தில் வரும் அகோரியிடம் வந்து அந்தப் பெண் பூஜா சொல்லுவாளே அட்வைஸ், அதே மாதிரி அட்வைஸை எடுத்துக் கொண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை என்னிடம் வந்து மாட்டுகிறார்கள் பெண்கள். விளக்கி விளக்கி சலிப்பாக இருக்கிறது… உங்களைப் போன்ற சிறுமிகளிடமிருந்து அறிவுரை கேட்கும் நிலையில் நான் இல்லை.
I dedicate this letter to Rajesh who celebrates his birthday today…
1.9.2010.
7.34 p.m.
No comments:
Post a Comment