ஒரு மனிதனுக்கு குடிக்க ரெமி மார்டின் இருந்து, சைடு டிஷ்ஷுக்கு ஆலிவ்
காய்கள், தென் ஆப்ரிக்காவின் பிரி பிரி மிளகா, போடுவதற்கு CK ஜட்டி இருந்து
என்ன ப்ரோயோஜனம்? உண்ண உணவு இல்லாவிட்டால் எவ்வளவு கொடுமை?அதைவிட அந்த உயர்வகை நாய்களுக்கு Pedigree வாங்கமுடியவில்லை எவ்வளவு மன உளைச்சல்? இதை படித்ததில் இருந்து சோறு தண்ணி இறங்கவில்லை. ஒரு ஒலக மகா இலக்கியவியாதி எவ்வளவு வருடம்தான் பிச்சை எடுப்பது? கேடு கெட்ட தமிழ் சமுதாயமே, நீ எப்படி பிராயச்சித்தம் தேடப்போகிறாய்?
-------------------------------------------------------------------------------------------------------
Feb 2009
Dear Charu Nivedita,
I am an Indian tamil living in Paris and a regular reader of your blog. (in fact its my husband who introduced your wrtings) I have lot of admiration for your bold and frank writings; And Zero Degree is a Magnum Opus. No doubt.
But, i am frustrated to notice that there is a garveyard silence from you people , the so called "intellectuals" regarding the Srilankan tamail's issue. What's wrong with you? Are you all in a state of intellectual menopause?
I haven't seen a single article reflecting the gravity of the human crisis there in SL from you. One of my fellow blogger said you yourself restrained to write because of your
"dinamalar" connections as this this will affect you financially. I hope this be not true.
But, as M.L. King said, "the hottest place in the hell is reserved for those who remain silent at the time of great moral conflict"
I hope you ll be bold and HONEST enough to break your the shackles.
Kavida.
kavida 0812@hotmail.fr
டியர் கவிதா,
உங்களைப் போன்ற நேர்மைத் திலகங்களைப் பற்றி என்ன எழுதுவது என்றே எனக்குப் புரியவில்லை. இது போன்று எனக்கு தினமும் ஒரு டஜன் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
நேரடியாகக் கேட்கிறேன். நான் சாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? காஷ்மீர் பிரச்சினையிலிருந்து மங்களூர் சம்பவம் வரை என் கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் நான் இலங்கை பற்றி வாயே திறக்கவில்லை என்றால் அதன் அர்த்தத்தை உங்களைப் போன்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதா?
மேலும், ஒரு விஷயத்தைப் பற்றி எத்தனை முறைதான் சொல்வது? அதைத் தேடிக் கண்டு பிடித்துப் படிக்கும் பொறுமை கூட உங்களைப் போன்றவர்களுக்கு இல்லையா?
எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? தினமலரில் கருணாவின் பேட்டியை வெளியிட்டார்கள். உடனே தினமலர் அலுவலகத்தில் குண்டு வீசப் பட்டது. ஆக, என்னுடைய நேர்மையை கவிதா போன்ற நல்லிதயங்களுக்கு நிரூபிப்பதற்காக என் உயிரை விட வேண்டுமா?
அடுத்து, என்னுடைய நிதி நிலைமை பற்றி. எனக்குப் பல கோடீஸ்வர நண்பர்கள் உள்ளனர். ஆனால் தினமும் நான் சோற்றுக்கு சிங்கியடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சில சமயங்களில் நான் வளர்க்கும் நாய்களும் என்னோடு கூட பட்டினி கிடக்கின்றன.
மீண்டும் மீண்டும் என்னுடைய பிச்சைக்காரக் கதையைச் சொல்லிச் சொல்லி என் வாசகர்களையும் நோகடிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளாதீர்கள்.
பிச்சாவரம் கார்னிவலுக்கு என் நண்பர் எஸ். ராமகிருஷ்ணனை போனில் அழைக்க நினைத்தேன். ஆனால் என்னால் போன் பண்ண முடியாது. என் போனை டாப் அப் செய்ய வேண்டும். அதற்கு என்னிடம் பணம் கிடையாது. மிஸ்டு கால் கொடுத்துத்தான் அவரைப் பேசச் சொன்னேன்.
நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டிக்கு நடுவராக இருக்குமாறு அழைப்பு வந்தது. சான் தோமேயிலிருந்து கிண்டி செல்ல 100 ரூ. ஆட்டோவுக்கு. திரும்பி வர என்ன செய்வது? வீட்டில் ஒரு பைசா கிடையாது. வங்கியிலும் பணம் இல்லை. அப்போது என் மனைவி அவந்திகாவின் போன் வந்தது.
“எங்கே செல்கிறாய்? ” என்று கேட்டாள். சொன்னேன்.
“வீட்டில்தான் பணம் இல்லையே? ”
“கடைசி நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு போகிறேன். ”
” திரும்பி வர என்ன செய்வாய்? ”
” அலெக்ஸைப் பார்த்து அவனிடம்தான் வாங்கிக் கொடுக்க வேண்டும். ”
அண்ணா பல்கலைக்கழகம் சென்று இறங்கியதும் ஆட்டோக்காரர் பணம் வேண்டாம் என்றார். நான் பேசியதைக் கேட்டிருக்கிறார்; அதற்கும் மேலாக என் எழுத்தையும் தினமலரில் படித்திருக்கிறார். ஆனால் அவர் எனக்குத் தெரியாத ஆட்டோக்காரர் என்பதால் வற்புறுத்தி அவரிடம் பணத்தைக் கொடுத்தேன்.
பேச்சுப் போட்டியில் 40 பேர் பேசினார்கள். இரண்டரை மணிக்குத்தான் முடிந்தது. கடுமையான பசி. அந்தப் போட்டியை நடத்திய கல்லூரி மாணவிகளிடம் நான் திரும்பிச் செல்ல ஆட்டோவுக்கும், லஞ்ச் செலவுக்கும் பைசா கேட்க முடியுமா? கையில் ஒரு நயாபைசா இல்லை. ஆனால் நல்லவேளையாக போனில் பேச முடிந்தது. இதுவே இன்றைய தினமாக இருந்திருந்தால் அந்த இரண்டரை மணி வெயிலில் ஏழெட்டு கிலோமீட்டர் நடந்துதான் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் போனில் இன்று காசு தீர்ந்து விட்டது. திருப்பூர் சிவாவுக்கோ, பெங்களூர் குருவுக்கோ எஸ்ஸெம்மெஸ் அனுப்பி டாப் அப் செய்யச் சொல்லலாம் என்றால் போன் மைனஸில் காண்பிக்கிறது.
என் அதிர்ஷ்டம் நேற்று என் போன் அந்த நிலையில் இல்லை. அலெக்ஸுக்கு போன் போட்டேன். 10 டவ்னிங்கில் இருப்பதாகச் சொன்னான். ” அய்யோ ” என்றேன். ஏனென்றால் வெளியே வரும்போது அவன் பணம் எடுத்து வருவதில்லை. எடுத்து வந்தால் தொலைத்து விடுவான். என்னுடைய நிலைமையைச் சொன்னேன். ” பணம் இருக்கிறது; கவலைப் படாமல் வா ” என்றான்.
ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பயம். திடீரென்று ஏதாவது ப்ரேக்டௌன் ஆகி ஆட்டோ நின்று விட்டால் வந்த தூரம் வரை ஆட்டோவுக்குப் பணம் கொடுக்க வேண்டுமே? நல்ல காலம்; அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று வாரம் ஒருமுறை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் திரும்பத் திரும்ப எனக்கு தினமலரிலிருந்து காசு வருகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பது அயோக்கியத்தனம் இல்லையா? கையறுநிலையில் கையேந்தும் ஒருவனை இகழ்வது மட்டும் அல்லாமல் அவன் முகத்தில் காறியும் உமிழ்கிறீர்களே, உங்களையெல்லாம் என்னவென்று சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை.
நான் எழுதும் கட்டுரைகளுக்கு யாரும் காசு தருவது இல்லை. ஓசியில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். 2000 ரூ. செலவு செய்து எழுதினால் குமுதத்தில் 500 ரூ கொடுக்கிறார்கள். நான் பிச்சை தானே எடுக்க வேண்டும்? வேறு என்ன செய்யட்டும் சொல்லுங்கள்? மாமா வேலை செய்திருக்கிறேன்; பிக் பாக்கெட் அடித்திருக்கிறேன்; விந்து வங்கியில் விந்துவை விற்று வாழ்ந்திருக்கிறேன். அந்த வேலைகளையெல்லாம் இப்போது நான் செய்ய முடியாது. ஏன் என்றால் எனக்கென்று ஒரு சமூக அங்கீகாரமும், அடையாள எழவும் வந்து தொலைத்து விட்டது. மேலும், அந்த வேலைகளைச் செய்வதற்கான மனோபலத்தையும் இழந்து விட்டேன். விந்து வங்கியில் விந்து விற்பதற்கான வயது வரம்பையும் கடந்து விட்டேன். அதனால்தான் அவ்வப்போது பிச்சை எடுக்கிறேன். எனக்கு தினமலரில் இருந்தோ அல்லது வேறு எந்த நிறுவனத்திடமிருந்தோ ஒரு பைசாவும் வருவதில்லை.
I am a beggar; so I am begging…
காசு இருந்தால் போடுங்கள்; இல்லையேல் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லுங்கள். இந்தப் பிச்சைக்காரனின் பையில் வைர வைடூரியங்கள் இருப்பதாகப் புறம் பேசித் திரியாதீர்கள்.
நான் என் பணக்கார நண்பர்கள் அனைவரிடமும் விளம்பரம் கேட்டுப் பார்த்தேன். ஒரு விளம்பரம் கூட வரவில்லை. நல்லி விளம்பரம் தவிர மற்ற விளம்பரங்கள் அனைத்தும் ஓசி விளம்பரங்கள். ஓசி விளம்பரம் போடும் காரணத்தையும் ஏற்கனவே எழுதி விட்டேன்.
வேறோர் தினமாக இருந்தால் உங்கள் கடிதத்தைப் படித்து விட்டுக் குப்பையில் போட்டிருப்பேன். ஆனால் இப்போது நான் இருக்கும் பிச்சைக்கார நிலையில் அப்படிச் செய்யத் தோன்றாமல் கோபம் வந்து விட்டது. அந்தக் கோபத்தில்தான் இதை எழுதுகிறேன்.
உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் லசந்த விக்ரமதுங்கவின் கடைசித் தலையங்கத்தை இத்துடன் இணைத்துள்ளேன். இதை எழுதிய மறுநாள் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டார். அவர் ஸண்டே லீடர் என்ற பத்திரிகையின் ஆசிரியர். இந்தத் தலையங்கத்தில் அவர் எழுதியுள்ளதுதான் இலங்கைப் பிரச்சினை பற்றிய என்னுடைய கருத்தும். அன்பர்கள் யாரேனும் இதைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தால் இதை நிரந்தரமாக முதல் பக்கத்திலேயே போட்டு விடுகிறேன்.
மேலும் எனக்குப் பண உதவி செய்ய விரும்பினால் கீழே என்னுடைய வங்கிக் கணக்கு எண்ணைத் தருகிறேன். ICICI account No. 602601 505045 T. Nagar Branch, Chennai.
Account holder’s name: K. ARIVAZHAGAN
எனக்கு தினசரி வந்து கொண்டிருக்கும் ங்கோத்தா ங்கொம்மா கடிதங்களை விட உங்களைப் போன்றவர்களின் கடிதங்கள் என்னைப் பதற்றம் கொள்ளச் செய்கின்றன. சமயங்களில் இணைய தளத்தில் எழுதுவதையே நிறுத்தி விடலாம் என்று கூடத் தோன்றுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
பணம்
வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஒரே ஒரு நண்பர் நூறு டாலர்
அனுப்பியிருந்தார். அது போல் ஒரு பத்து பேர் அனுப்பியிருந்தால் பணத் தேவை
தீர்ந்திருக்கும். அப்படி நடக்காததால் கடந்த பத்துப் பதினைந்து தினங்களாக
பணத்துக்கு அலைந்து அல்லாடிக் கொண்டிருக்கிறேன். இடையில் பல நல்ல வீடுகள்
வந்து போயின. கையில் பணம் இல்லாத காரணத்தால் எல்லாம் கைவிட்டுப் போய்
விட்டன.
உதவி செய்ய நினைப்பவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கு எண்ணுக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்:
ICICI account no. 602601 505045 Account holder’s name: K. ARIVAZHAGAN , T. Nagar Branch, Chennai .
இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்ததும்தான் இணைய தளத்தில் எழுத வேண்டும். அதுவரை...
* * *
10.11.2008.
7.40 a.m.
No comments:
Post a Comment