Sunday, 10 March 2013

காணாமல் போன நூலகம்!

October 30th, 2011
வாசகர் வட்டத்தின் சார்பாக ஒரு நூலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கும், டிசம்பர் 6 அன்று நடக்க இருக்கும் எக்ஸைல் வெளியீட்டு விழாவுக்கும் தேவையான பொருள் செலவை ஈடுகட்டுவதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது, எக்ஸைல் நாவலின் முதல் பிரதியை ஏலம் விடுவது என்று. கிடைக்கும் பணம் நல்ல காரியத்துக்காகப் பயன்படப் போவதால் நானும் இதற்கு சம்மதம் தெரிவித்தேன். இந்த முறை நூல் வெளியீட்டு விழாவில் என்னைத் தவிர வேறு ஒரே ஒருவர்தான் பேச இருக்கிறார். தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் அவர். அவர்தான் நூலையும் வெளியிடுவார். நாவலின் முதல் பிரதியை ஏலம் எடுத்தவர் அவரிடமிருந்து புத்தகத்தை மேடையில் பெற்றுக் கொள்ளலாம். என்னுடைய கையெழுத்துடன், முதல் பிரதி என்ற குறிப்புடன். இது சம்பந்தமாக நமது வாசகர் வட்டத்தில் அறிவிப்பு வெளியானதும் சில நண்பர்கள் ஏலம் எடுக்க முன்வந்தனர். ஒரு நண்பர் 20,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். ஒரு நண்பர் “என்ன இது, சில்க் ஸ்மிதா கடித்துப் போட்ட ஆப்பிள் ஏலம் விடுவது போல், சாருவை சில்க் ரேஞ்சுக்குக் கொண்டு வந்து விட்டீர்களே?” என்று கிண்டல் அடித்தார். யார் கிண்டல் செய்தாலும், நூலகம் வைப்பது என்பது ஒரு கோவில் கட்டுவதைப் போன்ற புனிதமான காரியம். அப்படிப்பட்ட ஒரு காரியத்துக்காக என் பெயர் சில்க் ரேஞ்சுக்குப் போவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். நூலகம் அமைக்க 20,000 ரூ போதாது. என்னிடம் இருக்கும் புத்தகங்களையும் நூலகத்தில் வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் கலெக் ஷன் ஒரு தங்கச் சுரங்கத்துக்கு சமமானது. இருக்கட்டும். அது அல்ல நான் சொல்ல வந்தது. இப்போது அழைப்பிதழை அச்சுக்குக் கொடுக்க இருக்கிறோம். அதில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளப் போகும் வாசகரின் பெயரும் இடம் பெற வேண்டும். அதனால் எக்ஸைல் நாவலின் முதல் பிரதிக்கான நன்கொடை 50,000 ரூ. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நூலகம் மற்றும் விழா செலவுக்கான தொகை என்பதால் சாத்தியமுள்ள வாசகர் யாரேனும் முன் வந்து 50,000 ரூபாய் கொடுத்து இந்தக் கலாச்சார நிகழ்வில் முத்திரை பதிக்கலாம்.

November 2nd, 2011
எக்ஸைல் நாவலின் முதல் பிரதியை மேடையில் வைத்து வாங்கிக் கொள்ள விரும்பும் வாசகர் அந்த முதல் பிரதியை ஏலம் எடுக்கலாம் என்று வாசகர் வட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கு மிக நல்ல எதிர்வினை இருந்தது. சில வாசகர்கள் 10,000 ரூ என்று தெரிவித்தார்கள். மூன்று வாசகர்கள் 20,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார்கள். இது ஒரு அட்டகாசமான விஷயம்தான் என்றாலும் ஒரு சிறிய குழப்பம் ஏற்படுகிறது. இந்த மூவரில் யாருக்கு முதல் பிரதியைக் கொடுப்பது? இந்தப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக, ஏலம் எடுக்கும் கெடு இன்னும் மூன்று தினங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. சரியாக நவம்பர் 6-ஆம் தேதி காலை பத்து மணிக்கு யார் முதல் பிரதியைப் பெறுபவர் என்ற விபரம் நம் தளத்தில் அறிவிக்கப்படும். யாரேனும் 50,000 ரூபாய்க்கு முதல் பிரதியை ஏலம் எடுத்தால் நான் சந்தோஷப்படுவேன் என்று எழுதியிருந்தேன். அதையும் ஞாபகப்படுத்துகிறேன். இந்தத் தொகை, வாசகர் வட்டம் சார்பாக அமைக்கப்பட இருக்கும் நூலகத்துக்கே பயன்பட இருப்பதால் வசதி உள்ளவர்கள் இந்த நற்காரியத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் நூலை வெளியிட்டுப் பேசுவார். அவர் பெயரோடு எக்ஸைல் நாவலின் முதல் பிரதியைப் பெற இருக்கும் வாசக நண்பரின் பெயரும் அழைப்பிதழில் இடம் பெற இருக்கிறது. ஆறாம் தேதி அன்று அழைப்பிதழ் அச்சுக்குக் கொடுக்கப்பட உள்ளது. இந்தக் காரணத்தினால்தான் ஏலத்துக்கான கடைசித் தேதியை நவம்பர் 6-க்கு மேல் நீட்டிக்க இயலவில்லை. முதல் பிரதியை ஏலம் எடுப்பவரின் பெயருக்காக மட்டுமே அழைப்பிதழ் அடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அழைப்பிதழில் எக்ஸைலை வெளியிட இருக்கும் பிரமுகரின் பெயர், அதைப் பெற இருக்கும் வாசகரின் பெயர், அடியேனின் பெயர் ஆகிய மூன்று பெயர்கள் மட்டுமே இருக்கும்.

மேலும், முன்பதிவு செய்தவர்களுக்கான பிரதிகளில் என்னுடைய கையெழுத்து வேண்டுமானால் அதை முன்பதிவு செய்யும் போதே தெரிவித்து விடவும். எத்தனை பிரதிகளாக இருந்தாலும் கையெழுத்துப் போட்டுத் தர சித்தமாக இருக்கிறேன். ஆனால் சிலருக்கு இந்தக் கையெழுத்து விஷயம் பிடிக்காது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். யார் யார் என்னுடைய கையெழுத்து வேண்டும் என்று தெரிவிக்கிறார்களோ அவர்களுடைய பிரதிகளில் என் கையெழுத்து இருக்கும்.

நாவல் பிரதிகளுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு நாவல் அநேகமாக நான்கு அல்லது ஐந்து தேதிகளிலேயே கிடைத்து விடும். எனவே அந்தக் காரணத்துக்காகவே நீங்கள் முன்பதிவுக்கு முந்தலாம். முன்பதிவு செய்யாவிட்டால் டிசம்பர் ஆறாம் தேதி மாலை ஆறு மணிக்கு காமராஜர் அரங்கில்தான் வாங்க முடியும்.

இப்படி எழுதுவதால், முதல் பிரதியை பெரும் தொகையில் ஏலத்தில் எடுத்தவருக்கு ஒரு சந்தேகம் எழும். முன்பதிவு செய்தவர்களுக்கே பிரதிகள் நான்கு அல்லது ஐந்து தேதிகளில் கிடைத்து விடும் என்றால், முதல் பிரதியை ஏலம் எடுப்பதால் என்ன பயன்? இதோ சொல்கிறேன். முதல் பிரதியை ஏலம் எடுத்த நண்பருக்கு டிசம்பர் முதல் தேதியே நாவல் அனுப்பப்பட்டு விடும்; புத்தகமாகவோ அல்லது ப்ரிண்ட் அவுட் பிரதியோ. மேலும்… (இப்போது முதல் இரண்டு பத்திகளை மீண்டும் படியுங்கள்). எக்ஸைல் பிரதிகள் எங்கே கிடைக்கும் என்பது பற்றிய விபரங்களுக்கு:




November 11th, 2011
டிசம்பர் 6 காமராஜர் அரங்கம் விழா மேடையில் வாலி அவர்களிடமிருந்து முதல் பிரதியை வாங்கிக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முதல் பிரதியை ஏலம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு நண்பர் 50000 ரூபாய்க்கும், ஒரு நண்பர் 25,000 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர். இரண்டு பேருமே மேடையில் தலை காட்ட மாட்டோம் என்று சொல்லி விட்டனர். பெயரும் வெளியே தெரிய வேண்டாம் என்பது அவர்களின் விருப்பம்.

அடுத்து, வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் எக்ஸைல் பிரதியை தலா ரூ.20,000/- க்கு ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் என்ன வித்தியாசம் என்றால், எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தாலும் அந்தத் தொகையைச் செலுத்தி விட வேண்டும். அந்தத் தொகை விழா ஏற்பாட்டுக்கும் நூலகம் அமைப்பதற்கும் பயன்படும் என்பதால் இந்த ஏற்பாடு.

முதல் பிரதி ஏலம் இப்படியாக நாங்களே எதிர்பாராத விதத்தில் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. கலந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. இதற்கு மேலும் யாருக்காவது முதல் பிரதியை மேடையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால் எழுதுங்கள். ஆனால் பெயர் அழைப்பிதழில் இடம் பெற வாய்ப்பு இல்லை. அழைப்பிதழ் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பணம் விழா ஏற்பாட்டுக்கும் நூலகத்துக்குமே பயன்பட இருக்கிறது என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்…
--------------------------------------------------------------------------------------
நூலகத்திற்கு வாங்கிய பணம் எச்சகல விழா முடிந்த பிறகு இப்படித்தான் பயன்பட்டது!
https://www.facebook.com/photo.php?fbid=329944380453420&set=o.410271332356142&type=3
https://www.facebook.com/photo.php?fbid=329944273786764&set=o.410271332356142&type=3

1 comment:

  1. நல்லது இந்த விசயம் இதுவரை எனக்கு தெரியாதது.இப்போது தெரிந்து கொண்டேன்.நன்றி.

    ReplyDelete