a ticket to cuba…
March 30th, 2012
March 30th, 2012
ஜோஸஃப் சுகானந்த்: நான் சில நாட்களாக தலயிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கேள்வி. தல, நீங்கள் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறி வருகிறீர்கள். ஒரு விதத்தில் அது சரியானதாகத் தோன்றினாலும் இன்னொரு வகையில் பார்த்தால் இன்று இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று படுகிறது. இன்று உங்களுக்கு இரண்டாயிரம் பேர் கொண்ட வாசகர் வட்டம் உள்ளது. உங்களையும் உங்கள் எழுத்தையும் கொண்டாடுகிறோம். உங்கள் இணையதளத்தை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள், கருத்து சொல்கிறார்கள். நீங்கள் மீடியாவில் அடிக்கடி தென்படுகிறீர்கள். உங்களை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் உட்பட அனைத்து நல்ல எழுத்தாளர்களுக்கும் ஒரு fan following உருவாகியுள்ளது. இன்னும் ‘தமிழத்தில் எழுத்தாளனை யாரும் பெரிதாய் மதிபதில்லை’ என்ற கருத்தில் உறுதியாய் உள்ளீர்களா? இல்லை அதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? நீங்கள் பதில் கூறினால் மகிழ்வேன்.
ராஜ ராஜேந்திரன்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)
சாரு நிவேதிதாவின் பதில்: ஜோஸஃப். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது. யாராவது என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆரம்பித்து விடுவேன். அப்படித்தான் உங்கள் கேள்வியையும் சாரு ஆன்லைனில் போட்டு நாலு பக்கம் பதில் எழுத ஆரம்பித்தேன். உடனே நான் எழுதிக் கொண்டிருக்கும் – இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய ஆங்கில குறுநாவல் – gothic – ஞாபகம் வந்து உடனே பதில் சொல்வதை நிறுத்தி விட்டேன். யாராவது ஒரு குப்பை படம் எடுத்தால் அந்தப் படத்தை 2000 பேரா பார்க்கிறார்கள்? அந்தப் படத்தை எடுத்த இயக்குனர் தெருமுனையில் வந்து நின்று கொண்டு துண்டா விரிக்கிறார்? அடுத்த படத்துக்கு லொகேஷன் பார்க்க அமெரிக்கா பறந்து விடுகிறார் இல்லையா? இங்கே நான் சிங்கப்பூர் சென்று வரவே ஐந்து வருடம் யோசித்துக் கொண்டிருக்கிறேனே, பணம் இல்லாமல்? இங்கே என் கொல்லைப்புறத்தில் இருக்கும் சிங்கப்பூருக்கே ஐந்து வருட யோசனை என்றால், எப்போது நான் சிலே, க்யூபா, ஃப்ரான்ஸ் எல்லாம் போய் வருவது? ராஜ ராஜேந்திரன் சரியாகப் பிடித்திருக்கிறார். என் புத்தகம் 50,000 பிரதி விற்றால் தான் இதெல்லாம் சாத்தியமாகும். ஆனால் இன்னும் எக்ஸைல் விற்பனை 5000 ஐக் கூட தாண்டவில்லை.
மேலும் ஜோஸஃப், நீங்கள் ரொம்ப வெகுளியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலும் உங்கள் மீது நான் கோபம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், உங்கள் கேள்விக்குப் பதிலையே எக்ஸைல் நாவலில் 30 பக்கம் எழுதி விட்டேன். அந்த நாவலைப் படித்தீர்களா இல்லையா?
ஒரு மாணவன் 4 வருடம் எஞ்ஜினிரியரிங் முடித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான். நான் 40 வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு பத்திரிகையிலிருந்து நான் எழுதிய கட்டுரைக்கு சன்மானமாக 500 ரூ செக் வந்தது. இப்போது இதை இங்கே எழுதி விட்டேனா? இனிமேல், 50 வருடத்துக்கு என்னை அந்தப் பத்திரிகையிலிருந்து boycott செய்து விடுவார்கள். எப்படி எனக்கு வேட்டு வைக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சில விஷயங்களை நான் வெளிப்படையாகப் பேசினாலே எனக்கு ஆபத்து. நீங்கள் ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்டு விட்டீர்கள். 500 ரூ. செக்கை வைத்துக் கொண்டு நான் பிச்சைதான் எடுக்க வேண்டும் ஜோஸஃப். அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். பல உயிர் நண்பர்களும் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஆதங்கத்துடன் எழுதி வருகிறார்கள். 50000 பிரதிகள் எல்லாம் விற்க வேண்டாம்; 40 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். ஒவ்வொன்றும் 5000 விற்றால் போதுமே? விற்பதில்லையே? கட்டுரைகளாவது போகட்டும், நாவலாவது 50,000 பிரதிகள் விற்றால்தான் ஒரு எழுத்தாளன் கௌரவத்தோடு வாழ முடியும். ஆனால் உலகில் எல்லா நாடுகளிலும் நாவல்கள் 50,000 பிரதிகள் விற்பதில்லை. அப்படியும் எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால், intelligentia-வின் ஆதரவு. உதாரணமாக, எழுத்தாளர்களை பல்கலைக்கழகங்கள் creative writing துறையில் பேராசிரியர்களாக நியமித்து ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறது. இதுதான் உலகம் பூராவும் இருக்கும் நடைமுறை. ஆனால் இங்கே பல்கலைக்கழகத்தில் போய் விரிவுரை ஆற்றினால் ஒரு பூங்கொத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள். இண்டெலிஜென்ஷியா என்றால் பத்திரிகைகளும்தான். தமிழில் கட்டுரைக்கு சன்மானம் 500 ரூ. இல்லாவிட்டால் அதிகபட்சம் 1000 ரூ.
ஆனால் என்னுடைய எஞ்ஜினியர் நண்பர் ஒருநாள் என்னோடு பீட்ஸா சாப்பிட்டு விட்டு 500 ரூ. பில்லை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். கம்பெனி reimburse செய்து விடுமாம். இதேபோல் மருத்துவ செலவுக்கும், பெட்ரோல் செலவுக்கும் கம்பெனியே கொடுத்து விடும். அவ்வளவு ஏன், காண்டம் செலவுக்குக் கூட கம்பெனிதான் பணம் கொடுக்கிறது. சம்பளப் பணம் தனி. அதை இதில் சேர்க்கக் கூடாது. ஆனால் எழுத்தாளனின் சம்பளம் 500 ரூ. உணவு கிடைக்காத தெருநாய்கள் காய்ந்து போன மனித மலத்தைச் சாப்பிடுவதை என் கண் கொண்டு பார்த்திருக்கிறேன். தமிழ் எழுத்தாளனின் நிலைக்கும் அந்த நாயின் நிலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இப்படி சீரழியா விட்டால் சினிமாக்காரர்களுக்கு கால் கழுவி விட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. 60 வயது வரை விட்டுக் கொடுக்காத சுய கௌரவத்தை இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
மேற்கண்ட காரணங்களினால்தான், நான் தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று ஒரு ஆங்கிலப் பேட்டியில் குறிப்பிட்டேன். இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. என்னுடைய 2000 வாசகர்களை அப்படிச் சொல்லவில்லை. அந்த 2000 பேரும் என் குடும்ப உறுப்பினர்களைப் போல. நீங்களும் அதில் ஒருவர் என்பதையும் நான் அறிவேன். இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள். சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார். கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.
ayyo paavam miskin padathula pichaikaara veshamum sari varalai ange kotti koduggalannu miskinai veru vildungu pudungi naan theru naai , sori naainnu oorukku kaatiyaachchu ini endha directarum ninaichuk kooda maattanga indha moonjikku vaaippu kodukkka.
ReplyDelete