Wednesday, 3 April 2013

அறிக்கிக்கு அலைமோதும் கல்லூரி மாணவிகள்

Exile: trailer: created by prabhu ramakrishnan November 12th, 2011
ஒரு எழுத்தாளனுக்கு அவன்  இயங்குவதற்கு ஏற்ற சூழல் வேண்டும்.  தமிழ்ச் சமூகம் அத்தகைய சூழலை எந்த ஒரு சீரியஸான எழுத்தாளனுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.  சூழலோடு சமரசம் செய்து கொண்டால் அது வேறு கதை.  நான் சொல்வது சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர்களைப் பற்றி.  அப்படி சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாள ஜந்துக்களில் அடியேனும் ஒருவன்.
ஆனாலும் நான் படு உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம், என் வாசகர்கள்.  எனக்கென்று ஒரு பெரும் வாசகர் கூட்டமே இருக்கிறது என்பதை அடிக்கடி எதிர்கொள்கிறேன்.  ஒருநாள் ஒரு பிரபலமான கல்லூரியின் மாணவி ஒருவர் என்னோடு பேசினார்.  அவருடைய கல்லூரியில் எனக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று அவர் சொன்ன போது எனக்கு அது ஆச்சரியமாக இல்லை.  (அவர் குறிப்பிட்ட வார்த்தை fans)  மிகவும் மௌனமாக என்னை வாசித்துக் கொண்டிருக்கும் இவர்கள்  என்னுடைய வாசகிகள் என்பது இவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.  என் முகநூல் நண்பர்களான 5000 பேரில் 2500 பேர் கல்லூரி மாணவிகள்.  அத்தனை பேருமே பொய்ப் பெயரில் உலவும் ஆண்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது.  இவர்களில் சுமார் நூறு பேர் என்னோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள்.  (”இவர்களில்” என்பதை ”என் வாசகர்களில்” என்று பொருள் கொள்க).  அவர்கள்தான் வாசகர் வட்டக் கூட்டங்களுக்கும் வருபவர்கள்.  என்னுடைய தீவிர வாசகர்களிடம் இருக்கும் ஒரு பொதுத்தன்மை, அவர்களுக்கு என் எழுத்து மட்டுமே பிடித்திருக்கிறது.  என் வாசகர்களிடம் எனக்குப் பிடிக்காத குணம் அதுதான்.  ஆனாலும் இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை.  ஆதவன், இந்திரா பார்த்தசாரதி என்று தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த நூறு பேரில் ஐம்பது பேர் ஒரு தற்கொலைப் படைக்கு ஒப்பானவர்கள்.  இவர்களில், வெளியே பெயர் சொல்லிக் கொள்ள விரும்பாத விஐபிக்களும் உண்டு.   அந்த ஐம்பது பேரில் ஒருவர்தான் என்னைப் பற்றி ஆவணப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் மாணவர் பிரபு ராமகிருஷ்ணன்.  அவர் எக்ஸைல் பற்றி ஒரு ட்ரைலர் தயாரித்திருக்கிறார்.  பாருங்கள்.  இதை உங்களுடைய ப்ளாக் மற்றும் இணைய தளங்களில் இணைப்பு கொடுங்கள்.  இதை உருவாக்க பிரபு ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்ட முயற்சியும், உழைப்பும் அதிகம்.  திறமை வாய்ந்த பிரபு ராமகிருஷ்ணன் அடுத்து ப்ரியங்கா சோப்ராவை படம் எடுக்கும் – ஸாரி, தப்பு அர்த்தம் வருகிறது – ஃபில்ம் பண்ணும் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment