Tuesday, 2 April 2013

சுவாமி சாருனந்தாவின் தகடு தகடு!

எந்திரம்… November 15th, 2011
கனிமொழிக்கு இந்த முறை பெயில் கிடைக்கும் என்று எழுதியிருந்தது பலரது கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறது.  காரணம், இதை நான் தியான திருஷ்டியில் கண்டு சொல்கிறேன் என்று சொன்னதுதான்.  எனக்குத் தெரியாதா, இந்த விஷயம் கிண்டலுக்கு உள்ளாகும் என்று?  இப்போது முகநூலில் ஒரு நண்பர் ”இதே போல கூடங்குளம் அணு உலை தொடங்கப்படுமா? நிறுத்தப்படுமா? உங்கள் தியான திருஷ்டியில் கண்டு சொல்லுங்கள்!” என்று நக்கல் செய்திருக்கிறார்.  என்னை நீங்கள் தாராளமாகக் கிண்டல் செய்யலாம்.  தப்பே இல்லை. மேலும், இந்த உலகத்திலேயே ஆன்மீகத்தை மட்டும்தான் மிக எளிதில் கிண்டல் செய்ய முடியும்.  ஒரு விஷயத்தைக் கிண்டல் செய்வதற்குக் கூர்த்த மதியும் அதற்கேற்ற மனோபாவமும் வேண்டும். வெறுப்பு இருக்கக் கூடாது.  உத்தமத் தமிழ் எழுத்தாளன் வெறுப்பிலேயே வாழ்வதால்தான் அவருக்குப் பகடியே கை கூட மாட்டேன் என்கிறது. ஆனால், ஆன்மீகத்தைப் பகடி செய்வதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியோ திறமையோ வேண்டியதில்லை. போகிற போக்கில் செய்யலாம்.
சரி, நண்பரின் கேள்விக்குப் பதில் சொல்லி விடுகிறேன்.  கூடங்குளம் பற்றியும் தியான திருஷ்டியில் கண்டு சொல்ல முடியும்.  ஆனால் குரு தட்சிணை வேண்டும்.  ஓசியில் சொல்ல முடியாது.
இன்னொரு விஷயம். டிசம்பர் மாதம் ஒரு தாந்த்ரிக் பூஜை செய்யலாம் என்று இருக்கிறேன்.  அதற்கு நான் மது, மாமிசம், மங்கை தவிர்த்து ஒன்பது நாட்கள் கடும் தவத்தில் இருக்க வேண்டும். எப்போது செய்யலாம் என்ற சம்சயத்தில் இருக்கிறேன்.  டிசம்பர் 6-க்குப் பிறகு ஆரம்பிக்கலாம் என்றால் டிசம்பர் 18 என்னுடைய பிறந்த நாள் குறுக்கிடுகிறது.  இந்த முறை பிறந்த நாளை எங்காவது வெளியூரில் கொண்டாடலாமா என்று பார்க்கிறேன்.  சிங்கப்பூர் உசிதம்.  ஆனால் அங்கே தங்குவதுதான் பிரச்சினை.  அந்த ஊர் விலைவாசி எப்படி என்று தெரியவில்லை.  எது எப்படி இருந்தாலும் நம்மூர் பணம் எவ்வளவு கொண்டு போனாலும் அதற்கு வெளிநாடுகளில் மதிப்பே இல்லை. நம் பணத்துக்கு மதிப்பு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் பலரும் வெளிநாடுகளில் விலை ஜாஸ்தி என்று புலம்புகிறார்கள்.  சென்ற முறை சிங்கப்பூர் சென்ற போது ஒரு நண்பரின் பெரிய வீட்டில் தங்கினேன்.  திருமணம் ஆகாதவர் என்பதால் படு ரகளையாக இருந்தது.
18-ஆம் தேதி கொண்டாட்டத்தை முடித்து விட்டுத்தான் தாந்த்ரிக் பூஜையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  இந்தப் பூஜையில் நீங்களும் வந்து கலந்து கொள்ளலாம்.  நாஸ்திகர்களுக்கும் அனுமதி உண்டு.  ஒரே நிபந்தனை, குளித்து விட்டு வர வேண்டும்; குடித்து விட்டு வரக் கூடாது.  (வரும் போது கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி, தசாங்கம், தீப எண்ணெய் என்று ஏதாவது வாங்கி வாருங்கள் ஐயா, இதற்கென்று நான் கடை கடையாக ஏறி இறங்க வேண்டியிருக்கிறது!) எதற்கு இந்தப் பூஜை என்றால், எந்திரம் ஒன்றை வரைந்து அதை பூஜை மற்றும் தவத்தின் மூலம் உருவேற்றப் போகிறேன்.  இதை நீங்கள் வைத்துக் கொண்டால் உங்கள் வாழ்வு வளம் பெறும்.  அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்வதை நீங்கள் கண்டு உணரலாம்.
9.30pm
-------------------------------------------------------------------------------------
a prediction… November 12th, 2011
தேர்தல் நடப்பதற்கு முன்னதாக எல்லா பத்திரிகைகளும் திமுக வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது திமுகவுக்கு 30 சீட்டுக்குள்தான் கிடைக்கும் என்று எழுதினேன்.  உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது சொல்கிறேன்… இந்த முறை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும்.  எனக்கு இது எப்படித் தெரியும்?  தியானத்தில் கிடைத்த செய்தி.
பின் குறிப்பு:  இதற்கும் என்னுடைய அரசியல் கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…

No comments:

Post a Comment