விலை உயர்ந்த பரிசு
ஒருமுறை
இந்து நாளிதழில் இந்தியப் பெண்கள் மிக விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்கள்
என்று ஸல்மான் ருஷ்டி, உம்பர்த்தோ எக்கோ என்று நான்கைந்து பெயர்களைக்
குறிப்பிட்டு அதில் அடியேனின் பெயரையும் சேர்த்திருந்தது. ஏதோ தவறுதலாக
ப்ரூஃப் ரீடர் என் பெயரைச் சேர்த்து விட்டாரோ என்று குழம்பினால் அப்படியும்
இல்லை. ஏனென்றால் என் புகைப்படம் வேறு வெளியாகி, ஸீரோ டிகிரி நாவல்
பற்றியும் அதில் சில பல பெண்கள் பேசியிருந்தார்கள்.
இப்போது
அது உண்மைதான் என்பதற்கு ஒரு துயரமும், சந்தோஷமும் கலந்த ஒரு ஆதாரம்
கிடைத்துள்ளது. அந்தப் பெண் சென்னையில் ஒரு பிரபலமான குடும்பத்தைச்
சேர்ந்தவர். இந்தப் பணக்காரப் பெண்களெல்லாம் பெண் சிங்கம் க்ளப், ரோட்டரி
க்ளப், காஸ்மோ க்ளப் என்று ஏதேதோ க்ளப்புகளை வைத்துக் கொண்டு பொழுது
போக்கிக் கொண்டிருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த
இடங்களில் ஆண்களுக்கு அனுமதி உண்டா என்று தெரியவில்லை. அடியேன் அந்த
இடங்களை இன்னும் தரிசித்தது இல்லை. என்னுடைய வாசகிகள் கூட்டம் இன்னும்
கல்லூரி லெவலிலேயே இருப்பதால் இந்தப் பெண் சிங்கங்கள் க்ளப், ரோட்டரி
க்ளப், காஸ்மோ க்ளப் பக்கமெல்லாம் செல்ல எனக்கு இன்னும் வாய்ப்பு
கிடைக்கவில்லை.
நான்
இப்போது ஒரு சொந்த சோகத்தில் இருக்கிறேன். (விண்ணைத் தாண்டி வருவாயா?)
அந்த சொந்த சோகத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் எந்தெந்த அயோக்கிய
சாமியார்களின் சோகங்களையோ நான் சுமக்க வேண்டி ஆகி விட்டது என்ற இன்னொரு
சோகமும் சேர்ந்து கொண்டது. இந்த நேரத்தில்தான் சூஸனிடமிருந்து அழைப்பு.
சூஸன் ஃப்ரான்ஸ் தேசத்தைச் சேர்ந்தவர். தமிழ் நன்றாகத் தெரியும். என்
எழுத்தின் அதி தீவிர ரசிகை. அவர் என்னை சென்ற மாதம் முதல்முதலாக
தொலைபேசியில் அழைத்த போது நான் கேட்ட கேள்வி எப்படி என் தொலைபேசி எண்
கிடைத்தது என்பதுதான்.
”உங்கள்
தொலைபெசி எண்ணை வாங்குவது என்ன அவ்வளவு கஷ்டமா?” என்று துவங்கியது நட்பு.
ஒருமுறை சந்தித்தேன். பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டுக்காரர்கள் மிகவும்
ஏழைகளாக இருப்பதையே பார்த்திருக்கிறேன். என்னுடைய ஸ்பானிஷ் வாத்தியார் ஒரு
உதாரணம். வயது 25 தான் இருக்கும். பைசா பைசாவாக எண்ணி எண்ணி ரோட்டுக்
கடையில் டீ குடிப்பான். ஆனால் வெள்ளைத் தோலைக் கண்டாலே அவர்களை
பணக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டு துரத்தும் நம் பிச்சைக்காரர்களைப்
பார்த்தால் எனக்கு சிரிப்பு வரும், இந்த ரெண்டு பேரில் எவன் பிச்சைக்காரன்
என்று.
ஆனால்
சூஸன் பெரும் பணக்காரப் பெண்ணாக இருந்தார். என்னுடன் ஆட்டோவில் வந்த போது
“என்ன சாரு இவ்ளோ சத்தமாக இருக்கிறது?!” என்று ஆச்சரியப்பட்டார். அதுதான்
அவருடைய முதல் ஆட்டோ சவாரியாம். என்ன சாரு, கண்ணெல்லாம் தூசி
அடிக்கிறது?!” என்று மீண்டும் ஆச்சரியப்பட்டு விட்டு குளிர் கண்ணாடியை
எடுத்து அணிந்து கொண்டார்.
ஆட்டோவிலிருந்து
இறங்கும் போது “என்ன சாரு, ரொம்ப rude-ஆக நடந்து கொள்கிறீர்கள்?” என்று
கேட்டதும் நான் திடுக்கிட்டுப் போனேன். ஏனென்றால், ரொம்ப மென்மையாக நடந்து
கொள்வதாக இத்தனை வருடங்கள் பெயர் எடுத்தவன் நான். “ஏன் அப்படிச்
சொல்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு “ஆட்டோ ட்ரைவரிடம் நீங்கள் நன்றியே
சொல்லவில்லையே?” என்றார்.
அடங்கொக்கா
மக்கா… என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன். வாயைத் திறக்கவில்லை.
ஆனால் மற்றவர்கள் வாயைத் திறந்து பார்த்தார்கள். ஒரு பெரிய செக்ஸ் பாமே
நடந்து போய்க் கொண்டிருந்தால் என்ன செய்வார்கள், பாவம். வர்ணனை எல்லாம்
தேவையில்லை. ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறேன். அப்புறம் தெரியும், ஏன்
எல்லோரும் அப்படி வாயைத் திறந்து கொண்டு பார்த்தார்கள் என்று. சூஸன்
பார்ப்பதற்கு பாப் பாடகி ஷகீரா போல் இருந்தார்.
சூஸன்
பற்றி வேறு எதுவும் தெரியவில்லை. ஒருமுறை கேட்டதற்கு “என் பயோ டேட்டா
தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று பதில் வந்தது. அதற்கு
மேல் கேட்பேனா?
இதுவரை
இரண்டு முறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். முதல் முறை சிட்டி செண்டரில்
இருக்கும் லேண்ட் மார்க் புத்தகக் கடையில். ஸல்வார் கமீஸில் இருந்தார்.
பெண்கள் கூட நின்று நின்று வாயைப் பிளந்தார்கள். “ஏன் சாரு, உங்கள்
நாட்டில் ஆண்கள்தான் பெண்களை முறைத்து முறைத்துப் பார்ப்பர்கள் என்று
நினைத்தேன்; பெண்களும் இப்படி முறைக்கிறார்கள்?”
காரணம்
தெரியும். இருந்தாலும் சொல்லவில்லை. ஏற்கனவே நமீதா விஷயத்தில் சொல்லி
பிரச்சினை ஆகி விட்டது. அதோடு வேறு ஆட்டோக்காரருக்கு தேங்க்ஸ் சொல்லாததற்கே
rude, அது இது என்றவர் இப்போது உண்மையான காரணத்தைச் சொன்னால் விபரீதமாகி
விடும். மேலும், கடவுள் கொடுக்கிறான்; பக்தன் அனுபவிக்கிறான். நமக்கு
எதற்கு அனாவசியப் பிரச்சினை? அதனால் அவருடைய கேள்விக்கு “அதுதான் எனக்கும்
ஆச்சரியமாக இருக்கிறது சூஸன்” என்று பச்சையாகப் புளுகி வைத்தேன்.
அப்போது
பார்த்தா அந்தக் கொடுமை நடக்க வேண்டும்? மத்திம வயதுக்காரர் ஒருவர் –
அவருடைய குட்டி மகளும் அவர் கையைப் பிடித்துக் கொண்டு அருகில் நின்றாள் –
என்னை நெருங்கி வந்தார். தன்னை ஒரு டாக்டர் என்று அறிமுகப்படுத்திக்
கொண்டு என்னுடைய வாசகர் என்று சொல்லி சிறிது அளவளாவினார். அதோடு
சென்றிருக்கலாம். இந்தியர் ஆயிற்றே? “சரி, கிளம்புகிறேன் சார். மேடம்
வெய்ட் பண்றாங்க; வர்றேன் மேடம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
சூஸனுக்குப் புரிந்து விட்டது. அவர் மேடம் என்று சொன்னாரே; அதன் அர்த்தம் என்ன?
வொய்ஃப்.
சூஸனுக்கு சிரித்து சிரித்துப் புரை ஏறி விட்டது.
அதற்குப் பிறகு சூஸனை சந்திக்கவில்லை.
எனக்கு
ஏற்கனவே பல தலைபோகிற எழுத்து வேலைகள் இருந்தது ஒரு காரணம். அதோடு நான் ஏக
பத்தினி விரதனாக மாறி விட்டதும் மற்றொரு காரணம். மேலும், எதுவுமே இல்லாமல்
வெறும் வாய்க்கு அவலாக மாற நான் விரும்பவில்லை. அதற்குப் பிறகு சூஸன்
அழைத்த போதெல்லாம் அதைத் தவிர்த்து வந்தேன். பிறகு ஒருநாள் போன் செய்து
“நான் சென்னையிலேயே செட்டிலாகி விட்டேன்” என்றார். அதற்குப் பிறகு அவர்
போன் செய்த போதெல்லாம் நான் வேலை மும்முரத்தில் இருந்தேன். ஓரிரு
வார்த்தைகளுக்கு மேல் பேச முடியவில்லை.
நேற்று மாலை சூஸனிடமிருந்து போன். உங்களை நேரில் சந்திக்க வேண்டும். உங்களுக்காக ஒரு பரிசு வைத்திருக்கிறேன்.
மீண்டும்
சிட்டி செண்டர் லேண்ட் மார்க்கில் சந்தித்து வாசகர்களிடம் மாட்டிக் கொள்ள
விரும்பவில்லை. அதனால் என்னை எழுத்தாளனாகத் தெரியாத ஸாரா பப்பில்
சந்திக்கலாம் என்றேன்.
ஏழு
மணிக்கு ஸாராவில் இருந்தார் சூஸன். நான் வழக்கம் போல் மார்ட்டினி. அவரும்
மார்ட்டினி. சென்னையிலேயே ஸ்பானிஷ் உணவு கிடைக்கும் இடங்களில்
முதல்தரமான இடம் ஸாரா தான். அதி அற்புதமான சுவை. மீன் சாப்பிட்டு நாட்கள்
ஆனதால் பலவிதமான மீன் உணவுகளைச் சுவைத்தேன்.
அப்போது
சூஸன் சொன்ன ஒரு யோசனை நன்றாக இருந்தது. அதாவது, அவர் சென்னையில்
ஸாராவைப் போல் ஒரு ஃப்ரெஞ்ச் பப் வைக்கப் போகிறாராம். நீங்களும்
பார்ட்னராகச் சேர்கிறீர்களா என்றார். அடப்பாவி, கையில் கால் காசு
கிடையாது; பப் வைப்பதா? என்று நினைத்துக் கொண்டேன்.
காசு
என்றதும் இந்த இடத்தில் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. எனக்கு பத்து
லட்சமோ, இருபது லட்சமோ நித்யானந்தாவிடமிருந்து கிடைத்திருப்பதாக உத்தமத்
தமிழ் எழுத்தாளன் எழுதியிருக்கிறார் என்று என் நண்பரிடம் குறிப்பிட்டேன்.
அதற்கு ஏன் இப்படி சீப்பான ஆளா இருக்கிறான் அவன்? நினைப்பதைக் கூட
லட்சத்தில் நினைக்கிறான். விலை போவதாக இருந்தால் பிச்சைக்கார காசு 20
லட்சத்துக்கா விலை போவான் ஒருத்தன்? பத்து கோடி இருபது கோடி என்று
நினைக்கக் கூடாதா?
அந்த
நண்பருக்கு நான் சொன்ன பதில்: இவனுக்கு நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால்
உங்களுக்காக மாமா வேலையும் செய்வான். ப்ளோ ஜாபும் செய்வான். அதனால்தான்
மற்றவர்களைப் பார்த்தாலும் அவனுக்கு அப்படித் தெரிகிறது…
எப்போதாவது எனக்கு எழுத்து மூலமாக கோடிகள் கிடைத்தால் சூஸனோடு சேர்ந்து ஒரு ஃப்ரெஞ்ச் பப் வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் ஸாரா பப்பிலும் இரண்டு பேர் என்னைக் கண்டு கொண்டார்கள். ஆங்கில எழுத்தாளர்கள்…
இதை
முடிக்கும் தருணத்தில் அவந்திகா பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்தாள்.
அப்போது அவள் கடுமையான வசைச் சொல்லால் ஆட்டோக்காரரைத் திட்டினாள். அவள்
அப்படிப் பேசி நான் கேட்டதில்லை. என்ன விஷயம் என்று கேட்டேன்.
செண்ட்ரலிலிருந்து ஆட்டோவுக்கு 200 ரூபாய் கேட்டார். கொடுத்தேன். ”இறங்கும்
போது ‘தேங்க்ஸ்‘ என்றேன். ’உன் தேங்க்ஸை நீயே வச்சுக்கங்கிறான்” என்றாள்.
இப்போது புரிகிறதா சூஸன்?
\\மீண்டும் சிட்டி செண்டர் லேண்ட் மார்க்கில் சந்தித்து வாசகர்களிடம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் என்னை எழுத்தாளனாகத் தெரியாத ஸாரா பப்பில் சந்திக்கலாம் என்றேன்.//
ReplyDelete\\ஆனால் ஸாரா பப்பிலும் இரண்டு பேர் என்னைக் கண்டு கொண்டார்கள். ஆங்கில எழுத்தாளர்கள்//
ஃபோன் ஒயர் பிஞ்சி ரெண்டு நாளாச்சு..ஹிஹி..
ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம்....
Delete