Thursday, 18 April 2013

சாரு ஆவேசம்: மசுரைக் கூட கொடுக்க மாட்டேன்

உடல் தானம் மற்றும் ஒரு தானம்!
September 25th, 2010

கேள்வி: உடல் தானம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  உங்கள் உடலை தானமாகக்  கொடுப்பீர்களா?
அராத்து.

பதில்: மசுரைக் கூட கொடுக்க மாட்டேன்.  உடல் தானமெல்லாம் இந்த தேசத்துக்குத் தங்களால் முடிந்தவரை கெடுதியையே பண்ணிக் கொண்டிருக்கும் கிரிமினல்கள் செய்ய வேண்டிய காரியம்.  உயிரோடு இருந்து மனித குலத்துக்கு விரோதமான செயல்களையே செய்த்தால் செத்த பிறகாவது அவர்களின் உடல் சமூகத்துக்குப் பயன்பட்ட்டுமே என்ற எண்ணத்தில் சொல்கிறேன்.  உதாரணமாக, காமன்வெல்த் கேம்ஸ் என்ற பெயரில் தில்லியின் அரசியல் கிரிமினல்கள் 70,000 கோடி ரூபாயை சுருட்டித் தங்கள் பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்மாதிரி தேசத்துரோகிகள்தான் உடல்தானம் செய்ய வேண்டும்.  அல்லது, ஒரு படத்துக்கு 5 கோடி, 10 கோடி, 15 கோடி, 20 கோடி என்று சம்பளம் வாங்கும் நடிகர்களும் உடல் தானம் செய்யலாம்.  இங்கே இந்தியாவில் ஒவ்வொரு சராசரி மனிதனும் மாதம் 5,000 ரூபாய்க்கே சிங்கியடித்துக்  கொண்டிருக்கும் போது கோடிகளில் சம்பளம் வாங்குவதும் கோடிகள் செலவு செய்து கல்யாணம் செய்வதுமே சமூக விரோத காரியங்கள்தான் என்று நினைக்கிறேன். (இது போன்ற அயோக்கியத்தனமான extravagansaவை ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் காண முடியாது; அம்மாதிரி தங்கள் தங்கக் குண்டியைக் காண்பிக்கும் பணக்காரர்களுக்கு அவர்களின் டயர் கிழிகிறாற்போல் படு பயங்கரமான வரியைப் போட்டு விடுவார்கள்.  அம்மாதிரி வரி கட்ட முடியாமலேயே ஃப்ரான்ஸை விட்டு ஓடி விட்டார்  அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான பாப் பாடகர்).
இந்தியாவில் ஊழலின் அளவு 100 கோடி 200 கோடி என்று இருந்த்து போக இப்போது 60,000 கோடி, 70,000 கோடி என்று ஆகி விட்டது. டீன் ஏஜ் பாய்ஸ் எல்லாம் 100 கோடி முதலீட்டில் படம் எடுக்கிறார்கள்.  நடிகர்கள் 10 கோடி சம்பளம் வாங்குகிறார்கள். அந்த மாதிரி ஆட்கள் வேண்டுமானல் பாவ நிவர்த்தியாக உடல் தானம் புடுக்கு தானம் எல்லாம் செய்யட்டும்.
மற்றபடி, என் வாழ்நாள் பூராவும் நான் வாழும் சமூகத்துக்கும் என் மொழிக்கும் எந்தக் கூலியும் பிரதிபலனும் கிடைக்காமல் – எதிர்பார்ர்காமல் என்று சொல்ல மாட்டேன்; அப்படிச் சொன்னால் அது பொய் – என்னுடைய ஆத்மாவையும் குருதியையும் வியர்வையையும் எழுத்தாக மாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  என் வாழ்க்கையை மெழுகாக உருக்கித்தான் என் எழுத்து உருவாகிறது.  எனவே சராசரி மனிதர்களின் கவலைகளையும் அபிலாஷைகளையும் என் மீது திணிக்காதீர்கள்.
25.9.2010.
8.55 a.m.

8 comments:

  1. romba nanri gen guruve

    ReplyDelete
  2. நீ தானம் செய்தாலும் எவனும் உன்னுடைய உடலை எடுக்க மாட்டான்.
    நீ எயிட்ஸ் வந்துதான் சாகப்போகின்றாய் அப்போ எவன் உன்னுடைய உடலை தொடுவான்.
    இதில தானமாவது

    HARRIS DAVID

    ReplyDelete
  3. //நீ தானம் செய்தாலும் எவனும் உன்னுடைய உடலை எடுக்க மாட்டான்.
    நீ எயிட்ஸ் வந்துதான் சாகப்போகின்றாய் அப்போ எவன் உன்னுடைய உடலை தொடுவான்.
    இதில தானமாவது

    HARRIS DAVID//

    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  4. தம்பி...சாருவுக்கு பணம் அனுப்பியாச்சா?

    “நெடு நெடுன்னு தடத்துல போகுதுன்னு நெனச்சானாம்; அது வழு வழுன்னு ஆத்துல போச்சாமா” இதை யாராச்சும் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? கேட்டிருக்காவிட்டாலும் பிரச்சினையில்லை. இப்பொழுது கேட்டாகிவிட்டது. நாம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வேறு என்னவோ நடந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் நெடு நெடு வழு வழு என்று இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடரில் அந்தக் காலத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    சாரு நிவேதிதாவின் சமீபத்திய பதிவுகளை பார்த்தால் இந்த சொலவடை ஞாபகத்துக்கு வந்து சிம்மாசனம் போட்டுக் கொள்கிறது. ஆரம்ப காலத்தில் அவருடைய பதிவுகளைப் படித்துவிட்டு அவருக்கு உண்மையிலேயே பணக் கஷ்டமோ என்று நம்பித்தொலைத்துவிட்டேன். நல்லவேளையாக அப்படி நம்பிக் கொண்டிருந்த சமயத்தில் நானும் துட்டுக்கு லாட்டரி அடித்துக் கொண்டிருந்தேன். ‘இருந்திருந்தால் மட்டும் கொடுத்திருப்பியா?’ என்று கேட்டுவிடாதீர்கள். அதன் பிறகாக பிச்சையெடுக்கிறேன், பரதேசியாகத் திரிகிறேன், காஸ்ட்லி சரக்கு கிடைக்கவில்லை, எலாஸ்டிக் ஜட்டி கிடைக்கவில்லை என்று அவர் பஞ்சப்பாட்டாகவே பாடிக் கொண்டிருந்ததை திரும்பத் திரும்ப வாசிக்கும் போது இதெல்லாமே லுலுலாயிக்கு என்று புரிந்து கொள்ள முடிந்தது.

    “கிட்னி காலியாகிவிட்டது டயாலிஸஸ் செய்ய ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள்” என்று கேட்டால் கூட காசு தராத நம் மனிதர்கள் இவருக்கு சரக்கடிக்க காசு அனுப்புவார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. கொடுக்கிறவர்கள் இருந்தால் தாராளமாக கொடுக்கட்டும்? நாம் ஏன் வயிறு எரிய வேண்டும். ஆனால் பாருங்கள், இதுவரை தனது தளத்தில்தான் பஞ்சப்பாட்டை பாடிக் கொண்டிருந்தார் என்றால் இப்பொழுது asianage.com என்ற ஆங்கிலத் தளத்திலும் ஆரம்பித்துவிட்டார். ‘பணக்கார நாய் வளர்க்கிறேன் அதற்கு பிஸ்கோத்து வாங்கோணும்’என்கிற ரீதியில்.

    உண்மையில் வருத்தமாக இருக்கிறது. சாரு மட்டும் இல்லை, இங்கு எல்லோருமே ஏதாவது விதத்தில் பில்ட் அப் செய்து கொள்கிறோம் என்றுதான் நினைக்கிறேன். இந்த கலாச்சாரத்தை யார் தமிழில் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியவில்லை. ‘எனது புத்தகத்துக்கு இதுவரை இருபத்திரண்டு பேர் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்’, ‘எனது கதையைப் படித்துவிட்டு அந்த சினிமா டைரக்டர் பேசினார்’, ‘இந்த உதவி இயக்குனர் திரைக்கதை கேட்டார்’, ‘கண்கள் களைத்துப் போக உழைக்கிறேன்’ என்ற டயலாக்குகள் கணக்கு வழக்கில்லாமல் பெருகிக் கிடக்கின்றன.

    எழுதுவதெல்லாம் பணம் சம்பாதிக்கத்தான் என்றால் அதற்கு வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எதற்காக எழுத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? ஒருவன் எழுதவில்லையென்றால் யாருமே தூக்கு போட்டு சாகப் போவதில்லை, ஒருவனும் தீக்குளிக்க போவதில்லை, அதிகபட்சமாக ‘ஏன் எழுதுவதை குறைத்துக் கொண்டீர்கள்’ என கேட்பார்கள். அதற்கும் பதிலை எதிர்பார்க்க மாட்டார்கள். என்ன பதிலைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள். அவ்வளவுதான்.

    http://www.nisaptham.com/

    ReplyDelete








  5. மாறாக, எழுதினால்தான் ‘டென்ஷன்’ ஆவார்கள். நான்கு வருடமாக வலைப்பதிவு வைத்திருப்பவர்களெல்லாம் ‘பெரிய ரைட்டர்’ ஆகி அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ‘பூனை குட்டி போடுவது போல எழுதுகிறான்; புலி ஆய் போவது போல எழுதுகிறான்’ என்பார்கள். அடுத்தவன் காலில் விழுந்தோ கையைப் பிடித்தோ வாரப்பத்திரிக்கையில் தொடர் எழுதுபவர்களெல்லாம் ‘உன் ஹேர்ஸ்டைல் சரியில்லை’ என்று அலம்பல் செய்வார்கள். (இங்கு ஹேர்ஸ்டைல் என்ற சொல்லை நாகரீகம் கருதி பயன்படுத்தியிருக்கிறேன்). எழுதுவதையும் எழுதிவிட்டு இந்த ஆட்கள் பேசுவதையும் கேட்டுத் தொலைக்க வேண்டும்.

    சாரு எழுத ஆரம்பித்த போது நான் பிறந்திருக்க கூட மாட்டேன். ஆனால் கலாய்த்துக் கொண்டு திரிகிறேன். இப்படித்தான் எழுதுவதற்கு பணமும் கிடைப்பதில்லை, ஆளாளுக்கு லோலாயமும் செய்கிறார்கள். பிறகு எதற்கு சார் எழுத வேண்டும்?

    எழுதுகிறவன் மட்டும்தான் உழைக்கிறானா என்ன? விடிய விடிய ஆட்டோ ஓட்டும் மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள். தூக்க முடியாமல் கல் சுமக்கும் ஆட்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். தொடர்ச்சியாக மூன்று இரவுகள் தூங்காத மென்பொருள் ஆட்கள் இருக்கிறார்கள். சொல்லிப்பாருங்கள்- ‘அவர்கள் எல்லாம் பிழைப்பிற்காக உழைக்கிறார்கள்’ என்று இடதுகையால் ஒதுக்கிவிடுவார்கள். எழுதுபவன் மட்டும் எதற்காக உழைக்கிறான்? புகழை விரும்புகிறான், உழைக்கிறான். எழுதுவதில் ஏதோ ஒரு சந்தோஷத்தை பெறுகிறான். அதற்காக விழிக்கிறான்.

    அதை விடுத்து சமூகத்தை திருத்துவதற்காக எழுதுகிறேன் என்றெல்லாம் டூபாக்கூர் அடித்தால் யார் நம்புவார்கள்?. உண்மையில் அப்படியொரு எண்ணம் இருக்கும் எந்த எழுத்தாளனும் பில்ட் அப் செய்து கொண்டு திரிவதில்லை.

    சரி விடுங்கள்.

    என்னை அடிக்க ஆளே இல்லை, எனக்கு புக்கர் பரிசு கிடைக்கும் என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அகப்பையில் வர வேண்டும் இல்லையா?

    தமிழில் என்னைத் தவிர எவனுக்கும் சுவாரசியமான எழுத்தே இல்லை என்று கலாய்க்கும் சாரு போன்ற முதிர்ந்த எழுத்தாளர்கள் ராஜுமுருகனை கிழிப்பது, உதவி இயக்குனரை கலாய்ப்பது எல்லாம் அழகாகவா இருக்கிறது? ‘வட்டியும் முதலும்’ ஒரே டெம்ப்ளேட்தான். ஆனால் அத்தகைய ‘நெஞ்சுநக்கி’ வகையறா மேட்டரை எழுதவும் ஒரு திறமை வேண்டும். கட்டுரையையோ அல்லது பத்தியையோ வாசிப்பவர்களின் நெஞ்சை லைட்டாக நக்கிவிட வேண்டும். அதை ராஜூ முருகன் திறம்படச் செய்தார் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

    ஆரம்பித்த சொலவடைக்கே வந்துவிடுகிறேன். நமது நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன? சரியா? தவறா? விருப்பப்படும் திசையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோமா? இப்படி எந்தக் கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்க போவதில்லை. காமெடியாக எதையாவது செய்து கொண்டிருந்தால் அதை சுட்டிக் காட்டுவதற்கான ஆட்கள் இங்கு மிகக் குறைவு. கமுக்கமாக சிரித்துக் கொண்டு போய்விடுவார்கள் அல்லது புறம் பேசி சிரித்துக் கொள்வார்கள்.

    விதிவிலக்காக சாருவையும், தமிழ்நாடு காங்கிரஸையும்தான் நேரடியாக கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இரண்டு பேருமே மாறுவதாகத் தெரியவில்லை.

    வெயிட்...வெயிட்...முன்பொரு காலத்தில் இப்படியான லடாயில் “பப்ளிக் கக்கூஸ் மாதிரி blog நடத்துறானுக” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போனார். இப்பொழுதும் ஏதாச்சும் சொல்லிவிட மாட்டார் என நம்புகிறேன். அப்படிச் சொன்னால் அதை “பிச்சைக்கார மடத்திலிருந்து சொல்லாதீங்க சார்” என்று சொல்லிவிட வேண்டியதுதான்.

    http://www.nisaptham.com/

    ReplyDelete
  6. உடல் தானம் என்பது தனிப்பட்ட மனிதரின் விருப்பம்

    ReplyDelete
  7. ஆமாண்டா நாதாரி...நீ யாருக்கும் மசுரை கூட கொடுக்க மாட்டே..ஆனா நீ குடிக்கவும், குட்டியை போடவும் நாங்க பணம் கொடுக்கனும். அப்படி தானே ?

    ReplyDelete