Monday, 17 December 2012

அம்மா, பொண்ணு, டெல்லி கமிஷ்னரோட பொண்ணை உஷார் பண்ணுன ஜென் குரு.



“தாம் தூம் பார்த்துட்டீங்களா?”

“இல்லியே, அது ‘போர்’னு பத்திரிகைல எழுதியிருக்காங்களே?”

”அதெல்லாம் சும்மா. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் அது செம ரொமாண்டிக்கா இருக்கறதா சொல்றாங்க...”

“ஓ, அப்படின்னா நாம போகலாமே? இப்போதான் ரம்ஸான்ங்கிறதுனால க்ளாஸ்லாம் அவ்ளவா இல்லேன்னு சொன்னியே...ஒருநாள் கட் அடிச்சுட்டு வா, போலாம்...”

“அய்யய்யோ, எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என்னெ கொன்னே போட்ருவாங்க...அது முடியாது. வேணும்னா ஒன்னு பண்ணலாம். நான் என் ஃப்ரெண்ட்ஸோட வர்ரேன். நீங்களும் வாங்க...வேணும்னா நீங்களும் விஷால், அலெக்ஸையெல்லாம் அழைச்சுட்டு வாங்க...”

“ஏய், இடியட்...அப்படி வந்தா ஏதோ ஸ்கூல் பசங்களை வாத்தியாருங்க எக்ஸ்கர்ஷன் அழைச்சுட்டு வந்தாப்ல இருக்குன்டீ...ஏன்டி இப்படி கூட்டாஞ்சோறு ஆக்குறதுலயே இருக்குறீங்க? நானும் நீயும் மட்டும் தனியா போவோம். அப்போதான் அப்படியே உன்னைத் தடவ கிடவ வசதியா இருக்கும்...”

“ஓ...ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் போல...”

“ஏய்...ஏய்... இது வரைக்கும் நான் எந்தப் பெண்ணோடவும் தனியா சினிமாவுக்குப் போனது இல்லடீ...”

“என்னது, போனது இல்லையா? எங்க அம்மாவ நீங்க லவ் பண்ண போது போனது இல்ல? உங்க லவ்வப் பத்திதான் இன்னமும் ஊரே பேசுதே?”

“ஏன்டி...நாகூர் மாதிரி ஒரு ஊர்ல ஒரு ஆணும் பெண்ணும் தனியா சினிமாவுக்குப் போக முடியுமா? அதுவும் 35 வருஷத்துக்கு முன்னாடி? ஏதோ பக்கத்துப் பக்கத்துத் தெருங்கறதால லவ் பண்ணோம்...சரியா நாங்க பேசிக் கிட்டது கூட இல்லடீ...அப்புறம் டெல்லில அந்தப் போலீஸ் கமிஷனரோட பொண்ணு...அவ என்கூட வெளிய வரவே பயப்படுவா, யாராவது பார்த்து அவ அப்பாட்ட போட்டுக் குடுத்துருவாங்கன்னு...அவளோடயும் வெளிய போனது இல்ல...”

“ஓ...”

“இப்போ நீதான் மூணாவது...என்னுடைய கடைசி காதல்...”

“அப்போன்னா அந்த பானு?”

“அவ என் ஃப்ரெண்ட்...அவ்வளவுதான்...”

“சரி, மீரா ஆண்ட்டியோட போயிருப்பீங்கள்ள?”

“ஏய், சொல்றதை நம்புடீ...மீராவை நான் திருமணம் செய்து கொள்ளும் போது என் மகனுக்கு பத்து வயசு...ஸோ, சினிமாவுக்கெல்லாம் நாங்க மூணு பேராதான் போயிருக்கோம்...”

“சரி, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்...நான் என்ன கமலினி முகர்ஜி மாதிரியா இருக்கேன்? என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்றாங்க...எனக்கு அப்படித் தோணலியே?”

“ஓ மை காட்...உன்னைப் பற்றி நான் அலெக்ஸிடமும், விஷாலிடமும் சொல்லும் போது அதையேதான் சொல்லுவேன். யெஸ்...ஆனா நேத்து சரோஜா பார்த்தேன். அதில வேகான்னு ஒரு பொண்ணு நடிக்கிறா...எக்ஸாக்ட்லி நீதான்...அப்படியே அச்சு அசலா உன்னை மாதிரியே இருக்கா...தேவதை..ஆனா ஒரே ஒரு வித்தியாசம்...”

“என்ன?”

”அவளுக்கு 36 இருக்கும்...”

“அப்படியா? 36 வயசுங்கிறீங்க, தேவதைங்கிறீங்க...?”

“ஏய், எல்கேஜி...36ன்னது வயசு இல்லடீ...”

“பின்ன?”

“ப்ரெஸ்ட்டு டீ...”

“ஓ, அதையெல்லாம் பாத்திங்களா?”

“ஏய்...வேணும்னா பார்ப்பாங்க...கண்ணுல படாதா?”

“ஓ...”


11.9.2008.

9.15 a.m.

No comments:

Post a Comment