சென்ற வாரம் செவ்வாய்க் கிழமை அன்று என்னை அழைத்த கலா
கௌமுதி ஆசிரியர் “ஓரிரு நாட்களில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு வந்து விடும். அநேகமாக அவருடைய நூல்களை நீங்கள் படித்திருப்பீர்கள். அப்படி இருந்தால் வெள்ளிக்கிழமைக்குள் கட்டுரையை அனுப்பி விடுங்கள் ” என்றார்.
நான்
இப்போது இரண்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். வர
இருக்கும் புத்தக விழாவில் வெளியிட இருக்கும் என்னுடைய புத்தகங்களுக்கான பிழை
திருத்தும் வேலை.
நித்யானந்தரின் லிவிங் என்லைட்டன்மெண்ட் என்ற
1000 பக்க
புத்தகத்தைத் தமிழில் மொழி
பெயர்க்கும் வேலை.
இதற்காக தினமும் 22 மணி
நேரம் கணிப்பொறியின் முன்
அமர்ந்து வேலை
செய்து கொண்டிருக்கிறேன். இரண்டு மணி
நேரமே உறக்கம்.
ஆனால் களைப்பாக இல்லை. நித்யானந்தர் கற்பித்த நித்ய தியானம் என்ற
தியானத்தைச் செய்தால் நமக்கு அசாத்தியமான சக்தி கிடைக்கிறது.
இந்த
நிலையில் உலகத்தில் என்ன
நடக்கிறது என்றே தெரியாது. கலா
கௌமுதியில் கேட்டு விட்டதால் தினசரி வாழ்க்கையை சற்றே எட்டிப் பார்த்தேன். ஹெர்த்தா முல்லருக்கு நோபல் என்று தெரிந்தது. கலா
கௌமுதி ஆசிரியர் சொன்னது போல்
எனக்குப் பரிச்சயமான எழுத்தாளர்தான். இவருக்கு ஏற்கனவே டப்ளின் இம்பாக் பரிசு கிடைத்திருக்கிறது. நோபல் அறிவிப்பு வந்த
ஒரு
மணி
நேரத்தில் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பினேன்.
13.10.2009.
|
No comments:
Post a Comment