a prediction…November 12th, 2011
தேர்தல் நடப்பதற்கு முன்னதாக எல்லா பத்திரிகைகளும் திமுக வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது திமுகவுக்கு 30 சீட்டுக்குள்தான் கிடைக்கும் என்று எழுதினேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது சொல்கிறேன்… இந்த முறை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும். எனக்கு இது எப்படித் தெரியும்? தியானத்தில் கிடைத்த செய்தி.
பின் குறிப்பு: இதற்கும் என்னுடைய அரசியல் கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…
மேற்கண்ட பதிவை 12-ஆம் தேதி எழுதினேன். அப்போது பலரும் கிண்டல் செய்தார்கள். இப்போது 16 தினங்களில் நான் சொன்ன வாக்கு பலித்திருக்கிறது.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று திருஷ்டியில் தெரிந்ததுமே வஸந்தி ஸ்டான்லிக்கு இது பற்றிக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
தாந்த்ரீகமும் மாந்த்ரீகமும் சரியாகப் பின்பற்றப் பட்டால் நமது திருஷ்டி கூர்மையாகும் என்பதற்கு இது எனக்கு இன்னும் ஒரு சான்று.
குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே ஒருவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது நமது சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய குறைபாடு. நாளையே அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர் இதுவரை அனுபவித்த சிறைத் தண்டனைக்கும் அது அவருடைய வாழ்வில் ஏற்படுத்தும் துயரங்களுக்கும் யார் பொறுப்பு?
கனிமொழியை வரவேற்கிறேன். சிறையில் அவர் தியானம் கற்றுக் கொண்டார் என்று பத்திரிகைகளில் வாசித்தேன். அவர் அதை நிறுத்தி விடாமல் தொடர வேண்டும்…
No comments:
Post a Comment