Saturday, 30 November 2013

அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் மண்டையின் எழுத்து - நான்-ஸ்டாப் காமெடி

premieres gouttes de pluie…
July 6th, 2011

’ஏன் அதிகம் எழுதுவதில்லை?’ என்று கேட்டார் நண்பர் ஒருவர்.  இணையதளத்தில்தான் அதிகம் எழுதுவதில்லை; மற்றபடி எழுத்து தொடர்பான வேலைகளில்தான் அதிகம் மூழ்கியிருக்கிறேன் என்றேன்.

ஸீரோ டிகிரி இந்தி மொழிபெயர்ப்பு மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  நானும் கூடவே அதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.  நான் ஸீரோ டிகிரியில் அதிகம் சம்ஸ்கிருதம் கலந்த தமிழைப் பயன்படுத்தி இருப்பதால் இந்திக்கு அது லகுவாக இருக்கிறது.

ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பிலும் துணை செய்து கொண்டிருக்கிறேன்.

ராஸ லீலா ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு பக்கம் என்னை அதிகம் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறது.  அதன் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுள் அடியேனும் ஒருவன்.

இதற்கிடையில் டாக்டர் ராமானுஜம் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் தேகம் நாவலை அவ்வப்போது சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இவருடைய மொழிபெயர்ப்பு என்னை அதிகம் வேலை வாங்கவில்லை.

இவ்வளவுக்கு இடையில் எக்ஸைல் நாவலை அதிவேகத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அடியேன் எழுதிய முதல் ஃப்ரெஞ்சுக் கவிதை அதில் இடம் பெறுகிறது.  தலைப்பு: premieres gouttes de pluie.  கவிதை எதைப் பற்றியது?  கவிதையை இங்கே வெளியிடலாமா?  மூச்… இதை வெளியே சொன்னதற்கே என் மேனேஜர் என்னைக் கன்னாபின்னா என்று திட்டுவார்.  நாவல் வெளிவரும் வரை வாயே திறக்காதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் என் ஜெர்மன் மொழிபெயர்ப்பாளரின் வற்புறுத்தலால் ஸால்ஸா வகுப்புக்கு வேறு சென்று கொண்டிருக்கிறேன்.  58 வயது ஸால்ஸாவுக்குத் தடை இல்லையாம்.  கலகம் காதல் இசையில் ஸால்ஸா பற்றி விரிவாக எழுதியிருப்பது எனக்கு உள்ள கூடுதல் தகுதியாம்.  சே… என்ன வாழ்க்கைடா இது!

No comments:

Post a Comment