Thursday, 21 February 2013

கோயமுத்தூர் லட்ஜில் பெருமாள் - You are putting in a wrong place!



குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (64)
You are putting in a wrong place! 

எப்போதும் வீட்டிலேயே தியானத்தை முடித்து விட்டுத்தான் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு வாக்கிங் கிளம்புவான் பெருமாள். அன்றைய தினம் எழுந்து கொள்ளக் கொஞ்சம் தாமதமாகி விட்டதால் நேராக பூங்காவுக்கு வந்து விட்டான். வாக்கிங் முடிந்தது. ராகவன், காமேஸ்வரன் இருவரையும் காணோம். அங்கேயே தியானத்தில் அமரலாமா, அல்லது வீட்டுக்குப் போய் செய்து கொள்ளலாமா என்று யோசித்தான். வீட்டுக்குப் போனால் இன்னும் நேரமாகி விடும் என்பதால் இங்கேயே முடித்து விடலாம் என்று அமர்ந்தான்

உள்ளுக்குள் ஆழ்ந்து வெண்ணிற மேக அலைகளில் மிதந்து கொண்டிருந்த போதுமதியழகன், மதியழகன்... ” என்று அழைத்து யாரோ அவனைத் தொட்டு எழுப்புவதை உணர்ந்தான். கண் விழித்துப் பார்த்தால் ராகவன். பக்கத்தில் அவரது தர்ம பத்தினி

என் வைஃப் வந்திருக்காங்க; அதனால் நீங்கள் இன்று எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம்... ” 

அடப்பாவி, இதற்காகவா என் தியானத்தைக் கலைத்தீர்? ’ என்று நினைத்தபடி எழுந்து அவர் மனைவிக்கு வணக்கம் சொன்னான். பிறகுகிளம்புகிறேன்என்று இருவரிடமும் சொல்லி விட்டுப் புறப்பட்டான்

கோபமும் எரிச்சலுமாக வந்தது. மனிதர்கள் இந்த அளவுக்கா சொரணையுணர்வு அற்றுப் போய் விட்டார்கள் என்று ஆச்சரியப்பட்டான். தியானத்தைத் தொடங்கும் போதே தன் உள்ளுணர்வு எச்சரித்ததையும் எண்ணிப் பார்த்தான்

எவ்வளவு ஆச்சரியப்பட்டும் ராகவன் செய்ததை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இனி எந்தக் காலத்திலும் இங்கே தியானம் செய்யக் கூடாது என்று மீண்டும் மீண்டும் எரிச்சலுடன் நினைத்தபடி வீட்டை நோக்கிப் புறப்பட்டான். உணர்வுகள் அதீதமாகப் பொங்குவதை சமநிலைப் படுத்துவதற்காக தியானம் செய்யப் போக, அது தடைப்பட்ட உடனேயே கோபம் அதீதமாகப் பீறிடுவது எவ்வளவு அபத்தம் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. இருந்தாலும் அவனால் ராகவனின் செய்கையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நினைக்க நினைக்க எரிச்சல்தான் கூடியது


தியானத்தில் குறுக்கிட்டது பற்றித் தான் எரிச்சலடைந்ததையும், இனிமேல் இந்தப் பூங்காவில் தான் தியானம் செய்யவே போவதில்லை என்றும் ராகவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பெருமாள்

அடடா, இதற்குப் போய் ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்திருந்தால் குறுக்கிட்டிருப்பேனா? இப்போதுதான் தெரிந்து விட்டதே, இனிமேல் செய்ய மாட்டேன்என்றார் ராகவன்

மை காட்...இதெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும். சாலையின் குறுக்கே நடந்தால் மரணம் என்று அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கு நாம் நம்முடைய உயிரையே அல்லவா விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்? ” என்று ஆரம்பித்து நீண்டதொரு விளக்கம் தர ஆரம்பித்தான் பெருமாள்

புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஜீவராசிகளைப் பிரிப்பது எப்படி பாவமோ அதே மாதிரிதான் தியானத்தில் இருப்பவனைத் தட்டி எழுப்புவதும்; அது சரி, 30 ஆண்டுக் காலம் தபால் இலாகாவில் குப்பை கொட்டி இந்த அளவுக்காவது நம்முடைய சொரணையுணர்வு மழுங்கவில்லையானால் அப்புறம் தபால் இலாகாவுக்குத்தான் என்ன பெருமை

பெருமாளுக்கு அப்போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அந்தக்குறிப்பிட்ட நேரத்தில்அலெக்ஸுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ தெரியாது; மிகச் சரியாக பெருமாளுக்கு போன் பண்ணி அவனைக் கதற அடித்து விடுவான். அதாவது, ஒரு பெண்ணை மடக்கிசே, வேண்டாம்ஒரு பெண்ணைக் காதலித்து அவளோடு முதல் முறையாக சரீர சம்பந்தம் கொள்ளும் வேளையில்அந்த உச்சக் கட்ட தருணத்தில் பெருமாளின் போன் அடிக்கும். அரண்டு மிரண்டு போனை எடுத்துப் பார்த்தால் அலெக்ஸ். அதோடு விட மாட்டான். ஐந்து ஆறு முறை அடிப்பான். பெரிய வேடிக்கை என்னவென்றால், அலெக்ஸ் அவ்வளவாக பெருமாளுக்கு போன் செய்பவன் அல்ல என்பதுதான்

அப்படித்தான் பெருமாள் கோவையில் ஒரு லாட்ஜில் தன் காதலியோடு முதல் தடவையாகக் கலவியில் ஈடுபட்டிருந்த போது அலெக்ஸிடமிருந்து அழைப்பு. அது ஒரு வித்தியாசமான அனுபவம் பெருமாளுக்கு. அந்தப் பெண் ப்ரீத்தி பெருமாள் சற்றும் எதிர்பாராத விதத்தில் கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்து விட்டாள். அப்படிப்பட்ட சப்தத்தை பெருமாள் நீலப் படங்களில் மட்டுமே கண்டு களித்திருக்கிறான். நேர் வாழ்க்கையில் அதுதான் முதல் முறை. கலவியின் போது இந்தியப் பெண்கள் கூட இவ்வளவு உக்கிரமாகக் கத்துவார்களா

சே, அந்த அறை மிகச் சிறியதாக இருந்ததால் அந்த சப்தத்தை அவனால் அன்றைய தினம் அனுபவிக்க முடியாமல் போனது. (அந்த ஓட்டல்தான் பாதுகாப்பானது என்று அங்கே ரூம் போட்டிருந்தான் பெருமாள். அதுதான் கடைசியில் இப்படி ஒரு பிரச்சினையில் கொண்டு வந்து விட்டது). அறைக்கு வெளியே பக்கத்திலேயே லிஃப்ட் வேறு இருந்ததால் ஆட்கள் போவதும் வருவதுமாக ஒரே சப்தமாக இருந்தது. பயத்தில் அவனால் முழுமையாக ஈடுபட முடியாமல் போனது. இதற்கு இடையில்தான் அலெக்ஸின் போன்

(இரண்டு நாள் இப்படியே அரையும் குறையுமாகப் போராடி விட்டு அறையைக் காலி செய்து விட்டுக் கிளம்பும் போது ப்ரீத்தி சொன்னாள், “பெருமாள், ஒரு ஐடியா, பேசாமல் நாம் டீவியை ஃபுல் வால்யூமில் வைத்து விட்டுச் செய்திருக்கலாம். ” 
இதே மாதிரிதான் குன்றத்தூரில் வைத்து மற்றொரு காதலியுடன் (அவள் பெயர் என்ன? மறந்து விட்டது...) கலவி கொண்டிருந்த போதும் அலெக்ஸின் போன் வந்தது


மூன்றாவது ஜெஸ்ஸியுடன். ஜெஸ்ஸியுடன் நிகழ்ந்தது ஒரு சிறிதும் திட்டமிடாதது. முத்தத்தில்தான் ஆரம்பித்தது. ஆனால் இருவரையும் மீறி அங்கே போய் முடிந்து விட்டது. கலவியின் மூர்க்கத்தில் கட்டுண்டு கிடந்த போது அலெக்ஸிடமிருந்து போன். அதுவும் ஐந்தாறு முறை. ஒவ்வொரு முறையும் யாரோ எவரோ என்று பதறியடித்து போனை எடுத்துப் பார்த்தால், அலெக்ஸ். போனையே தூக்கிப் போட்டு உடைத்திருப்பான். ஆனால் அதற்குக் கூட முடியாத படி பணி

இதைப் போய் சிற்றின்பம் சிற்றின்பம் என்கிறார்கள் மடையர்கள். நோ...ஆன்மீகவாதிகளை அப்படியெல்லாம் திட்டக்கூடாது. பெருமாளுக்கு அது பேரின்பமாகத் தோன்றியது, அவ்வளவுதான். அதாவது, போகமே அவனுக்கு ஒரு ஆன்மீக அனுபவமாகத் தோன்றியது

ஆக, ஒரு பெண்ணுடன் கொள்ளும் சரீர சேர்க்கையே பேரின்பமாகத் தோன்றியது என்றால் கடவுளோடு கொள்ளும் ஆத்மார்த்தமான ஒன்றுதல் எப்பேர்ப்பட்ட பேரின்பமாக இருக்க வேண்டும்? அந்த நேரத்தில் வந்துமதியழகன், மதியழகன்என்று தட்டி எழுப்பினால் அதை என்னவென்று சொல்வது

தெரிந்திருந்தால் செய்திருப்பேனாஎன்று வேறு சொல்கிறீர். இம்மாதிரி விஷயங்களெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்

இந்த ஜெஸ்ஸி இருக்கிறாளே, அவளுக்கு செக்ஸ் பற்றி எதுவுமே தெரியாது. முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்பது மாதிரி நம்புகிற கேஸ். பெருமாள் அவளுடன் உறவு கொள்ளும் போது அவள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா

“You are putting in a wrong place…” 

எல்லாவற்றையும் கேட்டு விட்டு ராகவன் சொன்னார். “எழுதுங்கள்; என்னைப் பற்றி விமர்சனமாக எழுதினால் ராகவன் என்று போட்டு எழுதுங்கள்; பாராட்டாக எழுதினால் வேறு பெயர் போடுங்கள்... ” 

இதுதான் ராகவன். இதுதான் ராகவனுக்கும் காமேஸ்வரனுக்கும் வித்தியாசம். காமேஸ்வரன் பெருமாளுடன் பேசுவது இல்லை. அவரைப் பற்றி எழுதி விட்டதால் அண்ணனுக்குக் கோபம்

போ... யாருக்கு நஷ்டம்? காமேஸ்வரனிடமிருந்து பெருமாளுக்குக் கிடைக்கும் இசை பற்றிய அற்புதமான விஷயங்கள் இனி அவனுக்குக் கிடைக்காது. பரவாயில்லை. அவன் கேட்க வேண்டிய இசைக் கலைஞர்களை இன்னும் மூணு ஜென்மம் எடுத்தாலும் கேட்டு முடிக்க முடியாது போலிருக்கிறது. இதில் காமேஸ்வரனாவது, சோமேஸ்வரனாவது

நான் ஒன்றும் சும்மா சொல்லவில்லை. Cheb Haninou என்ற கலைஞனின் Ash Dak என்ற அரபி ரய் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வது விளங்கும். மற்றொரு அரபிப் பாடல் இங்கே கிடைக்கும்.

 
5.10.2008.
7.15 p.m.

Friday, 15 February 2013

எக்ஸைல் பற்றி…(October 11th, 2011)

ஊண் உறக்கம் இல்லாமல் நாவலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  தமிழில் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைத் தாண்டும் வகையில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது.  இப்போது அந்த ஆசை பூர்த்தியாகி விட்டது.  எக்ஸைலைப் படிக்கும் போது இதை நீங்கள் உணர்வீர்கள்.  உலகின் மிகச் சிறந்த 50 நாவல்களில் எக்ஸைலும் ஒன்றாக இருக்கும்.  அதை விட இன்னொரு விஷயம், உலகில் எந்த நாவலிலும் கதாபாத்திரங்களே நாவலை எழுதியதில்லை.  உதாரணமாக, எக்ஸைலில் ஒரு பாத்திரம் பயங்கர ஆணாதிக்கவாதி.  அவன் பேசும் ஒரு வார்த்தையில் கூட எனக்கு உடன்பாடு கிடையாது.  ஆனால் அவன் இந்த நாவலில் ஒரு முக்கியமான பாத்திரம்.  மேலும், ஒரு விஷயம்.  எக்ஸைலில் வரும் பகடி அளவுக்கு உலக நாவல்களிலேயே அரிது.  சமீபத்தில் என் தோழியிடம் அந்த நாவலில் வரும் சொய்ங் வாத்தியார் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தோம்.  சொல்லும் போது சிரித்து சிரித்து என் கண்களில் கண்ணீர் ஊற்றுகிறது.  தோழிக்கும் அப்படியே.  ரெஸ்டாரண்டே எங்களை வேடிக்கை பார்த்தது.  பத்து நிமிடம் சிரித்துக் கொண்டே இருந்தோம்.  ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  சொய்ங் வாத்தியார்.
இந்த சிறப்பையெல்லாம் நானே சொல்லிக் கொள்வது பற்றி எனக்கு எந்த லஜ்ஜையும் இல்லை.  நான் ஒரு கருவியே.  எழுதியது இறைவி.  என்னை ஆட்கொண்ட சோட்டாணிக்கரை பகவதி.
மேலும், நம் பெருமைகளை நாமே தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருப்பது தமிழ்நாட்டின் அவலங்களில் ஒன்று.  ஏனென்றால், ஸீரோ டிகிரி ஒரு lipogrammatic நாவல்.  உலகில் இதுவரை இரண்டே இரண்டு லிப்போக்ரமாட்டிக் நாவல்கள்தான் எழுதப்பட்டுள்ளன.  ஜார்ஜ் பெரக் எழுதிய La Disparition (ப்ரெஞ்ச்)  மற்றும் வால்டர் அபிஷ் எழுதிய Minds Meet (ஆங்கிலம்).  மூன்றாவது, ஸீரோ டிகிரி (தமிழ்).  இதையும் நானே தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.   தமிழ்நாடே கொண்டாடி, பெருமைப்பட்டிருக்க வேண்டிய விஷயம் இது.  ஆனால் நடக்கவில்லை.  லிப்போக்ரமாட்டிக் என்றால் என்ன?  ஃப்ரெஞ்சில் e என்ற எழுத்து இல்லாமல் ஒரு வாக்கியத்தைக் கூட எழுத முடியாது.  பெரக் e இல்லாமல் 311  பக்க நாவலை எழுதியிருக்கிறார்.  அதேபோல் தமிழில் ஒரு என்ற வார்த்தை இல்லாமல் ஒரு நாவலை எழுதுவது சாத்தியமே இல்லை.  நான் ஸீரோ டிகிரியை அப்படி எழுதியிருக்கிறேன்.  மேலும், அதில் கமாவும் மற்ற குறிகளும் கிடையாது.  முற்றுப் புள்ளி மட்டுமே உண்டு.
சமீபத்தில் வந்த கடிதம் ஒன்று இது.
டியர் சாரு,
கடந்த ஒரு வருடமாக தங்களை தங்களின் எழுத்துகளின் வழியே தரிசித்துவருகின்றேன் ,உங்கள் எழுத்து என்னை பல நிலைகளில் விழிப்புனுர்வு அடைய வைத்துக்கொண்டிருக்கின்றது .நான் உங்கள் எழுத்தை பற்றிக்கொண்டு சென்றுகொண்டே இருக்கின்றேன் ,எந்த விஷயத்தை யாரிடம் பேசினாலும் உங்களை பற்றி பேசாமல் , மேற்கோள் காட்டாமல் இருக்க முடியவில்லை . உங்கள் புத்தகமோ,எழுத்தோ  என்னிடம்  இல்லாலத நேரங்களில் நான் வெறுமையுடனும் பதற்றத்துடனும் இருக்கின்றேன் ,எனக்கு  உங்களையும்  நீங்கள் காட்டும் எழுத்தாளர்களயும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகின்றது. தங்களை   ஒருமுறை உங்கள் வீட்டில் சபரிமலைக்கு  செல்லும் முன் நடந்த பூஜையில் கலந்து கொண்டு சந்தித்திருக்கின்றேன்.(மறக்க முடியாத நாள்).தங்களுக்காக எதைவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் உங்கள் தீராத வாசகனாக  இருக்க விரும்புகின்றேன்.
நான் அறிந்த வரை தமிழுலகில் 1.பாரதி ,2.பெரியார், 3.சாரு நிவேதிதா.
இப்படிக்கு,
தேனில் சிக்குண்ட வண்டாக உங்கள் எழுத்துகளில் மூழ்கி கிடக்கும்,
தஞ்சாவூர் சம்பந்தர்.
டியர் சம்பந்தர்,
உங்கள் கடிதம் என்னை நெகிழ வைத்தது.  வரும் சனி ஞாயிறில் நடக்கும் வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்.

அறமும், தார்மீகமும் இல்லாத… (June 12th, 2011)

மீண்டும் சொல்கிறேன்.  சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் பல நல்ல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  அதில் நான் எழுதிய ஒரு சிறு பதிவு இது:
டியர் விநாயக முருகன்,
நீங்கள் கொடுத்த லிங்கில் இருந்த அவதாரம் என்ற கதையைப் படித்தேன். அதை என்றும் கட்டுரை என்றும் கொள்ளலாம். சிலருக்கு வார்த்தை என்பது பூக்காரிகளின் பூ போல. ஒரு பூக்காரி தன் வாழ்வில் எவ்வளவு பூக்களைத் தொடுத்திருப்பாள்? யோசித்துப் பாருங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் அவளுடைய தலையாய வேலை பூத்தொடுப்பது. எத்தனை கோடிப் பூக்கள்! ஆனால் உங்களாலும் என்னாலும் பூத் தொடுக்க முடியாது. தெரியாது. அது ஒரு வேலை. அதேபோல் உ.த.எ. வார்த்தைகளை வைத்துத் தொடுக்கிறார். தொடுத்துக் கொண்டே இருப்பார். அதில் அடி உதை இருக்கலாம்; அறம் மறம் முறம் எல்லாமும் இருக்கலாம். வெறும் வார்த்தைக் கூட்டம். குஷ்வந்த் சிங் சொன்னார், சில எழுத்தாளர்களின் விரல்களுக்குக் காண்டம் போட்டால் என்ன என்று. அதுதான் உ.த.எ. விஷயத்திலும். நாம் நம்முடைய வாழ்நாளில் எத்தனை லிட்டர் மூத்திரம் போகிறோம்? யாருக்காவது கணக்கு தெரியுமா? உ.த.எ.விடம் அப்படி வெளிப்படுவது வார்த்தை. ஆனால் எனக்கு வார்த்தை என்பது ஆன்ம சுத்தி. 20 லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக நான் மணி ரத்னத்தின் காலில் போய் விழ மாட்டேன். பிஸ்கட் போடுபவனின் கையை நக்கும் நாயைப் போன்ற ஈனச் செயலை நாள் தோறும் செய்து கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து உங்களுக்குத் தார்மீகக் கோபம் வர வேண்டாமா விநாயக முருகன்? கதை என்பது, வார்த்தை என்பது, எழுத்து என்பது நாம் தினம்தோறும் பெய்யும் மூத்திரத்தைப் போன்றதுதானா? நாம் சொல்கின்ற வார்த்தைக்காக நாம் நம்முடைய உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்க வேண்டாமா?
இப்படி பிஸ்கட் போடுபவனின் கையை நக்கும் நாயின் குணத்தையா நம் ஆசான் பாரதி நமக்குக் கற்றுக் கொடுத்தான்? உத்தமத் தமிழ் எழுத்தாளர் நாள் தவறாமல் பேசும் அறமும் ஆன்மீகமும் அவரது ஒரு நடவடிக்கையிலாவது இருக்கிறதா? சினிமா உலகில் அவர் செய்து கொண்டிருக்கும் அசிங்கமான வேலைகளைப் பார்த்து சினிமாத் துறையில் இருப்பவர்களே காறித் துப்புகிறார்கள்… ஒரு பக்கம் இந்துத்துவம் பேசுவார். இன்னொரு பக்கம் ஏதாவது இஸ்லாமிய அமைப்பு அவரை மதித்து ஒரு கூட்டத்துக்கு அழைத்தால் இந்துத்துவத்தைத் திட்டுவார். சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு கிறிஸ்தவ பாதிரி இவரைப் பாராட்டிக் கடிதம் எழுதிவிட்டார் என்பதற்காக இவர் “தங்கள் காலில் விழுகிறேன். என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கள்” என்று எழுதி அதையும் தன் ப்ளாகில் போட்டிருந்தார். அதில் என்ன வேடிக்கை என்றால், அந்தப் பாதிரியார் மீது ஊர் சொத்தைக் கொள்ளையடித்த ஊழல் வழக்கு நிலுவையில் இருந்தது… காசுக்காகவும், புகழுக்காகவும் பிணத்தின் நெற்றியில் உள்ள நாணயத்தைக் கூட சுரண்டத் தயாராக உள்ள ஒருவரைப் பற்றி நம்முடைய வாசகர் வட்டத்தில் நீங்கள் எழுதலாமா முருகன்? உங்களுடைய வாசிப்பை நான் குறை சொல்லவில்லை. ஆனால் இதைப் பலர் முன்னிலையில் விவாதிக்கும் அளவுக்கு அவர் ஆளா என்று மட்டுமே கேட்கிறேன். நான் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.
ஒரு எழுத்தாளனுக்குத் தார்மீக பலம் வேண்டும். ராம் ஜெத்மலானியை எடுத்துக் கொள்ளுங்கள். பணம் கொடுத்தால் இந்திய தேசத்தை தாவூத் இப்ராஹீமிடம் விற்ற ஆளுக்காகக் கூட வாதாடுவார். ஒரு எழுத்தாளன் அப்படி இருக்கலாமா?
நீங்கள் குறிப்பிடும் கதையில் – அல்லது, கட்டுரையில் – எனக்குத் தெரிய வந்த ஒரே விஷயம். உ.த.எ.வுக்கு நன்றாக சினிமா வசனம் எழுத வருகிறது… அதாவது, விஜய் போன்ற நடிகர்களின் சினிமாவுக்கு… இப்படிப்பட்ட கமர்ஷியல் சினிமா வசனகர்த்தாக்களைப் பற்றி நாம் இவ்வளவு சீரியஸாக விவாதிக்கத்தான் வேண்டுமா?
***
மேற்கண்ட விஷயத்தை எழுதிய பிறகுதான் தெரிந்தது; அந்தக் குறிப்பிட்ட அவதாரம் பைபிளிலிருந்து தூக்கியது என்று.  இதோ லிங்க்: